கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 10, 2011

வீரபாண்டி ஆறுமுகத்தை திருச்சி சிறைக்கு மாற்றியதை எதிர்த்து மகன் வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை திருச்சி சிறைக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வீராபாண்டி ஆறுமுகம் மகன் ராஜா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக சேலத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலையானார். பின் மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் கோவை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி விரும்பிய சிறைக்கு மாற்றுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எந்த மாவட்டத்தில் கைது செய்யப்படுகிறார்களோ, அந்த மாவட்ட சிறையில்தான் சட்டப்படி அடைக்க வேண்டும். அதன்படி வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் சிறையில்தான் அடைக்க வேண்டும். எனவே வீரபாண்டி ஆறுமுகத்தை திருச்சி சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் 08.08.2011 அன்று விசாரித்து, உள்துறை செயலாளர், போலீஸ் கமிஷனர், திருச்சி சிறை எஸ்.பி. ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விட மறுப்பு :
கொலை முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விடுவதற்கு ஐகோர்ட் மறுத்துவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழநாவலடிவிலையைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளார். இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விட அனுமதிக்க முடியாது எனக்கூறி அம்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ஓணம் பண்டிகை : கலைஞர் வாழ்த்து


ஓணம் பண்டிகையை முன்னிட்டு திமுக கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞரின் வாழ்த்து செய்தி பின்வருமாறு
கேரள மாநில மக்கள் தமது இனிய பண்பாட்டுத் திருநாளாகவும், அவர்களின் மிக முக்கியமான அறுவடை திருநாளாகவும் வண்ணமயமாக கலைமணம் கமழக் கொண்டாடுவது ஓணம் திருநாள்.
அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதையும், மனித சமுதாயத்திற்கு உணர்த்திடும் நன்னாளாகும். ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் மகிழ்கிறேன்.

பேரவையில் இருந்து 2வது நாளாக திருக்குறளை கேட்டுவிட்டு திமுகவினர் வெளிநடப்பு


சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 08.08.2011 அன்று 2வது நாளாக திருக்குறளை மட்டும் கேட்டு விட்டு, அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
சட்டப்பேரவை 08.08.2011 அன்று காலை 10 மணிக்கு கூடியது. பேரவை தலைவர் ஜெயக்குமார், திருக்குறள் ஒன்றை வாசித்து அதற்கு விளக்கம் சொன்னார். அதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அவையில் இருந்து வெளியேறினர்.
பேரவைக்கு வெளியே எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், �சட்டப்பேரவையில் எங்கள் குரல் ஒலிக்க வழியில்லை. அதனால் திருக்குறள் ஒலித்தது. அதை கேட்டோம். குறளின் பொருள் நன்றாக இருந்தது. அதனால், எங்கள் பணியை முடித்து விட்டு புறப்பட்டோம்” என்றார். 08.08.2011 அன்றும் திருக்குறளை மட்டும் கேட்டுவிட்டு, அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.

பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முப்பெரும் விழாவில் பரிசளிப்பு : கலைஞர் பரிசுகளை வழங்குகிறார்


முரசொலி அறக்கட்டளை 08.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன.
பள்ளிகளுக்கான போட்டிகளில் கோவையைச் சேர்ந்த ஏ.எம்.ஆல்வின் ஆண்டோ முதலிடம் பிடித்துள்ளார். கல்லூரிகளுக்கான போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்ட மாணவர் ந.மணியரசன் முதலிடம் பிடித்துள்ளார். மொத்தம் 10 மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட உள்ளது. வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கும் முப்பெரும் விழாவில், திமுக தலைவர் கருணாநிதி பரிசுகளை வழங்குகிறார், என்று கூறப்பட்டுள்ளது.

பழி வாங்கும் செயல்களுக்காக அதிமுக அரசு மன்னிப்பு கேட்கும் நிலை வரும் - கலைஞர்


நெருக்கடி நிலைக்காக இந்திரா காந்தி வருத்தம் தெரிவித்ததுபோல, பழி வாங்கும் செயல்களுக்காக அதிமுக அரசு மன்னிப்பு கேட்கும் நிலை வரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக தலைமைக் கழக துணை மேலாளர் ஜெயகுமார் மகன் கதிரவன்& காயத்ரி திருமணம், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 08.08.2011 அன்று காலையில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:
நெருக்கடி நிலைக்குக் காரணமான, இந்தியாவின் தலைசிறந்த தலைவியாக விளங்கிய இந்திரா காந்தியாலேயே திமுகவை வீழ்த்த முடியவில்லை. அவரே வருத்தம் தெரிவிக்கின்ற நிலைமைக்கு திராவிட மக்கள், தமிழ் மக்கள் திமுகவை அன்றைக்குத் தாங்கிப் பிடித்தார்கள் என்பதை வரலாறு உணரும். அந்த வரலாறு மீண்டும் திரும்புவதற்கு இன்றைக்கிருக்கின்ற ஆட்சியாளர்கள் வழி வகுப்பார்களேயானால், அதற்காக முன்கூட்டியே நன்றி கூறுவதற்கு தயாராக இருக்கிறோம்.
அண்ணா, தமிழக சட்டமன்றத்திலே ஜனநாயகம் எப்படி பூத்துக் குலுங்க வேண்டுமென்பதை பற்றி பல நேரங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைக்கு அந்த ஜனநாயகத்தை காண முடிகிறதா என்றால் இல்லை. ஜனநாயகம் தேடப்பட வேண்டிய ஒரு பொருளாக ஆகி விட்டது. அதனால்தான் திமுகவினர் நேற்றைக்கு கூட வெளியேறி விட்டார்கள்.
வெளியேறியவர்களை நிருபர்கள், என்ன திருக்குறள் படித்து முடித்தவுடன் வெளியேறி விட்டீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு இவர்கள், �நல்ல சொற்களைக் கேட்டு முடித்து விட்டோம். தீயச் சொற்களைக் கேட்க நாங்கள் தயாராக இல்லை� என்று சொல்லியிருக்கிறார்கள். திருக்குறள் ஒன்றைத் தவிர காதால் கேட்கக் கூடிய எந்தவொரு சொல்லும் ஒலிக்கவில்லை என்பதற்கு, இதை விட வேறு சான்று சொல்ல விரும்பவில்லை.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது எந்த அளவுக்கு கண்ணியமாக, எதிர்க்கட்சிகளை மதிக்கின்ற வகையில் நடந்து கொண்டது, இப்போது எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒருவர் பேசியிருக்கிறார், பெரிய மேதாவி. இவருக்குத் தான் கதை சொல்லத் தெரியும் என்று மண்வெட்டி கதை சொல்லியிருக்கிறார். ஒரு விவசாயி கடவுளைப் பார்த்து கேட்டாராம். நான் விவசாயம் செய்ய வேண்டும், கடவுளே எனக்கு ஏதாவது உதவி செய்� என்று கேட்டாராம். விவசாயம் செய்ய வேண்டுமென்றால், கடவுள் என்ன செய்ய வேண்டும்?
விவசாயிகளுக்கு ஸீ7000 கோடி கடன் இருந்தால், அதை ரத்து செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, கடவுள், �இந்தா ஒரு மண்வெட்டியை வைத்துக் கொள்� என்று ஒரு இரும்பு மண்வெட்டியைக் கொடுத்தாராம். விவசாயி அந்த இரும்பு மண்வெட்டியை வாங்கி வெட்டினாராம். மண்வெட்டி என்றாலே அது மண்ணை வெட்டுவதுதான். ஆனால், அந்தக் கதையிலே வருகின்ற கடவுள், கடவுள் கதையிலேதான் வருவார். வேறு எதிலும் வர மாட்டார். அந்த கடவுள் கொடுத்தது இரும்பு மண் வெட்டியாம். இரும்பால் ஆனதைக் கொடுத்தால், அது இரும்பு வெட்டி தானே, அது மண் வெட்டி ஆகாது. மண்ணை வெட்டினால்தான் மண் வெட்டி.
தமிழ் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியும். தமிழ் தெரியாதவர்கள் சிலர் சட்டசபையில் இருக்கிற காரணத்தால் அவர்களுக்குப் புரியவில்லை. விவசாயி வெட்டினானாம். இரும்பு மண்வெட்டியால், வெட்டியவுடன் இரும்பாகவே வந்ததாம். உடனே அவன் மகிழ்ச்சியடைந்து கடவுளிடம் எனக்கு வேறொரு மண்வெட்டி கொடு என்று கேட்டானாம். உடனே கடவுள் வெள்ளி மண்வெட்டி கொடுத்தாராம். அதை வாங்கி விவசாயி வெட்டினானாம்.
நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எங்கேயாவது வெள்ளியால் மண்வெட்டி செய்து மண்ணை வெட்டுகின்ற மடையன் இருப்பானா? வெள்ளியால் மண்வெட்டி கிடைத்தால் வெள்ளியைதான் வெட்டுவான். இவன் வெள்ளி மண்வெட்டியால், மண்ணை வெட்டினானாம். அது வெள்ளியாக கொடுத்ததாம்.
மீண்டும் கடவுளிடம் அவன் பேராசைப்பட்டு கேட்டதால் தங்க மண்வெட்டி கொடுத்தாராம். இவன் தங்க மண் வெட்டியை வைத்துக் கொண்டு, தங்கம் கிடைக்குமென்று தோண்டிக் கொண்டே போய் தரைக்குள்ளேயே மூழ்கி விட்டானாம். அது யாராம்? அது தி.மு.க வாம்.
திமுக தங்க மண்வெட்டியாக ஆக்கப்பட்டு, குழி தோண்டி, அந்தக் குழிக்குள் விழுந்து புதைந்து போனதாக கதை சொல்ல வந்தவர், கதையைச் சொல்லி முடித்திருக்கிறார். தங்க மண்வெட்டி தேடியவர்கள் யார்? முதலில் இரண்டு கோடி ரூபாய் சொத்து இருந்தபோது, அது போதாதென்று, அதைப் பத்து கோடி ரூபாய் சொத்தாக ஆக்கி, பிறகு அந்தப் பத்து கோடி சொத்தும் போதாது என்று, அதை 66 கோடி ரூபாய் சொத்தாக ஆக்கி, இன்றைக்கு பெங்களூரு கோர்ட்டில் போய் தொங்கிக் கொண்டிருப்பது யார்? தங்க மண்வெட்டியா? இரும்பு மண்வெட்டியா? வெள்ளி மண்வெட்டியா? கதை சொல்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சட்டசபையிலே பேசினால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், ஏனென்றால் திமுக தலைவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள் ஏதோ அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அல்ல இது. பெரியாரால், அண்ணாவால் நம் இனத்தைக் காப்பாற்றுவதற்காக இன உணர்வை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இன உணர்வு என்றைக்கு பட்டுப் போகிறதோ அன்றைக்கெல்லாம் திமுக, அந்த இன உணர்வை கூர் தீட்டப் பாடுபடும், பணியாற்றும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட முக்கிய திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

போலீஸ் உதவியுடன் நடக்கும் அத்துமீறல் - அரசு கேபிள் டிவி ஒளிபரப்ப தனியார் கேபிளை துண்டிப்பதா? : தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


அரசு கேபிள் நிறுவனம் தனது ஒளிபரப்புக்கு யாருடைய கேபிளை பயன்படுத்துகிறது என்று தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால் கேபிள் லிமிடெட் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஜே.ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மூன்று மனுக்களில் கூறியிருப்பதாவது:
எங்களது கம்பெனி எம்.எஸ்.ஓ மூலம் தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த பிசினசில் எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. கடந்த 1995ம் ஆண்டு கேபிள் டி.வி ஓழுங்குமுறை சட்டத்தின்படி நாங்கள் இதற்கு உரிய லைசென்ஸ் பெற்றுள்ளோம். 12 ஆண்டுகளாக இந்த தொழிலை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். இதற்காக தமிழகம் முழுவதும் கேபிள் வயர்களை பதித்துள்ளோம். இதற்கு தனியாக அரசு அதிகாரிகளிடம் ஆங்காங்கே லைசென்ஸ் பெற்றுளோம். அதற்கான கட்டணமும் செலுத்தி வருகிறோம்.
டிராக் வாடகை என்று ஒரு கட்டணத்தையும் தவறாமல் அரசுக்கு செலுத்தி வருகிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் எங்கள் டி.வி நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு ஒளிபரப்பி வருகிறோம். சட்டப்படி, அமைதியான முறையில் எங்கள் கேபிள் மூலம் எங்கள் தொழிலை செய்து வருகிறோம். இதில் எந்த சட்டவிதியும் மீறப்படவில்லை.
அப்படி இருக்கும்போது கடந்த 2ம் தேதி தமிழக அரசு கேபிள் டி.வி கார்ப்பரேசன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தனக்கென தனியாக எந்த கேபிளும் பதிக்காமல் அவசரம் அவசரமாக சேவையை தொடங்கியுள்ளது. அரசு கேபிள் தொடங்கியவுடன் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பல பகுதிகளில் எங்கள் கேபிள் வயர்களை கட் செய்து அதே கேபிள்கள் மூலம் அரசு கேபிள் உரிமம் பெற்ற சேனல்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பி வருகிறது. போலீஸ் உதவியுடன் இந்த சட்டவிரோத நடவடிக்கை நடந்துள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் கேபிளுக்கு ஆண்டு வாடகை கட்டணம் செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும்போது எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தாமல் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி சேவைக்கு எங்களுக்கு சொந்தமான கேபிளை சட்ட விரோதமாக பயன்படுத்துவது பெரும் குற்றம்.
எங்கள் கேபிள்களை அரசு கேபிள் நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால் மாவட்ட கலெக்டர்கள் எங்கள் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களிடமும் மனு கொடுத்தோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருப்பூரில் பட்டாளம் சாலை, பழைய பஸ் நிலையம், மாரியம்மன் கோவில், குமரன் ஓட்டல், ஈஸ்வரன் கோவில், லோட்டஸ் கண் மருத்துவமனை, நொய்யல் வீதி ஆகிய இடங்களில் எங்கள் கேபிள்களை அரசு கேபிள் நிறுவனம் கட் செய்து அதன் மூலம் அரசு கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல கோவையிலும், ஈரோட்டிலும் பல இடங்களில் அரசு கேபிள் நிறுவனம் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. போலீஸ் ஒத்துழைப்புடன் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பலன் இல்லை. சட்டப்படியான எங்கள் வியாபாரத்தில் அரசு கேபிள் நிறுவனம் வேண்டுமென்றே குறுக்கீடு செய்கிறது.
அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இந்த செயல் திருட்டுத் தனமானது என்பதை சுட்டிக் காட்டியும், அதிகாரிகளிடம் முறைட்யிட்டும் அந்த குற்றம் தடுக்கப்படவில்லை என்பதை விளக்கியும் எங்கள் நிறுவனம் சார்பில் தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரிடம் கடந்த 7ம் தேதி மனு கொடுத்தோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் சட்டப்படி வியாபாரம் செய்ய உரிமையுள்ளது. அதன்படி நாங்கள் சட்டப்படி எங்கள் வியாபாரத்தை நடத்தி வருகிறோம். இதை அரசு கேபிள் நிறுவனம் தடுத்து வருகிறது. இது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1) (ஜி)க்கு எதிரானது. எங்கள் வியாபாரத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு கேபிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எங்களது அனைத்து அடிப்படை வசதிகளையும் சட்டவிரோதமாக திருடி வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி வரை எங்களது எம்.எஸ்.ஓ.வுக்கு லைசென்ஸ் உள்ளது.
எனவே எங்கள் கேபிள்களை சட்டவிரோதமாக பயன்படுத்த அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
கடந்த 3ம் தேதி, 5ம் தேதி, 7ம் தேதி நாங்கள் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்களிடம் கொடுத்த புகார்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
எங்கள் கேபிள்களை பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
எங்கள் கம்பெனிக்கு உரிய பாதுகாப்பு தர போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.
அமைதியான முறையில் நாங்கள் நடத்தும் வியாபாரத்தில் அரசு கேபிள் நிறுவனம் குறுக்கீடு செய்ய தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கால் கேபிள் நிறுவனத்தின் பொதுமேலாளர் ராஜேஷ் கூறியுள்ளார். இந்த மனுக்களை வக்கீல்கள் கிரிஸ் நீலகண்டன், எம்.ஏ.விமல் மோகன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
மனுக்களை 08.08.2011 அன்று நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல்கள் விஜயநாராயணன், பி.எஸ்.ராமன் ஆகியோரும் அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனும் ஆஜரானார்கள்.
�அரசு கேபிள் நிறுவனத்திற்கு தனி கேபிள் இருக்கிறதா? எந்த கேபிள்களை பயன்படுத்துகிறீர்கள்? இந்த கேள்விகளுக்கு 12ம் தேதி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்� என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Thursday, September 8, 2011

மதுரை திமுக இளைஞரணி செயலாளர் கைது


ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக, சிம்கார்டு விற்பனையாளர் கொடுத்த புகாரின்பேரில், திமுக இளைஞரணிச் செயலாளர் ஜெயராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 07.09.2011 அன்று கைது செய்தனர்.
மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் சக்திதாசன்(32). இவர் போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘மதுரை பழங்காநத்தம் பகுதியில் நான் செல்போன் சிம்கார்டு விற்பனைக் கடை வைத்துள்ளேன். ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நகர திமுக இளைஞரணி செயலாளர் ஜெயராமன் என்னை அணுகினார். ஒரு குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி, அந்நிறுவனத்திற்கு 500 சிம் கார்டுகள் தேவை இருக்கிறது. ஆவின் பணியாளர்களுக்கு இந்த சிம் கார்டுகள் வழங்க வேண்டும்.
இதற்காக தனக்கு ரூ.3.5 லட்சம் கமிஷன் கொடுத்தால், இந்த 500 சிம் கார்டுகளுக்கான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். இதற்கு சம்மதித்த என்னிடம், மூன்று தவணைகளில் கமிஷன் தொகையான ரூ.3.5 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால், சொன்னபடி 500 சிம் கார்டுகளை வாங்கவில்லை. கமிஷனாக கொடுத்த பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார்’ எனத் தெரிவித்திருந்தார்.
போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உத்தரவில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் 07.09.2011 அன்று ஜெயராமனை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதற்கிடையில் ஏற்கனவே மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பவுன். ஆகியோர் ஜெயராமன் மீதும், துணைமேயர் மன்னன் மீதும் கரிமேடு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தங்கள் வீட்டுக்குள் சோடாபாட்டில் வீசியதாகவும், செல்போனில் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். இப்புகார்களின் பேரிலும் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலும் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.