கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

அதிமுகவை கைப்பற்ற விஜயகாந்த் திட்டம் - வடிவேலு பேச்சு



தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பிரசாரத்திற்காக செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பார்க்கும் போது மீண்டும் தமிழக முதல்வராக கருணாநிதி வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும்.
பணம் வாங்கி கொண்டு பிரசாரம் செய்யவில்லை, கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் நான் ஆதரிப்பதற்கு காரணம். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி என்னை மிகவும் பாதித்தது. கருவில் இருக்கும் குழந்தைக்கு நிதி உதவி கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். அதிமுக கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த், ஜெயலலிதாவை அடுத்த முதல்வர் என்று கூறவில்லை. அவர் அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். எனக்கு தேமுதிக முக்கிய நிர்வாகிகளிடமிருந்து ரகசிய தகவல் வந்துள்ளது. இந்த தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக சார்பில் 41 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் பெயரை கடகடவென விஜயகாந்தால் கூற முடியாது. தேமுதிக கட்சி அல்ல; அது கடை. அதனால் கல்லா கட்டுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரைப்பாக்கம் கோவிலஞ்சேரி, மாடம்பாக்கம், மப்பேடு, சேலையூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் போன்ற பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

கோடநாட்டில் வழி விடாத ஜெயலலிதா எப்படி நல்வழி காட்டுவார்? - குஷ்பூ பேச்சு


கோடநாட்டில் வழிவிடாத ஜெயலலிதா எப்படி பொதுமக்களுக்கு நல்வழி காட்டுவார் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளர்.
திமுக கூட்டணி சார்பில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து கோத்தகிரியி நடைபெற்ற பொது கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:
தமிழகத்தில் சின்ன குழந்தையை கேட்டாலும் கலர் டிவி, இலவச கேஸ் இணைப்பு, திருமண உதவி தொகை, கான்கிரீட் வீடுகள் என திமுக அரசின் சாதனைகளை சொல்லும். கருணாநிதியின் அஸ்திரமாக அவரது வாரிசுகள் அழகிரி, ஸ்டாலின் விளங்குகின்றனர்.
ஏப்ரல், மே மாதத்தில் சூரியன் உச்சத்தில் இருப்பதால் வெயில் அதிகமாக இருக்கும். உதயசூரியன் இப்போது உச்சத்தில் உள்ளது. ஆறரை கோடி மக்களின் இதய சூரியன் கருணாநிதி. எனவே உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டு கலைஞரை மீண்டும் முதல்வராக்குவோம்.
கடந்த 25ம் தேதி மதுரையில் ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி எழுப்பினேன். கருணாநிதி, தான் வாழ்ந்த வீட்டை தானமாக கொடுத்தார். உங்களால் போயஸ் தோட்ட அரண்மனையை தானமாக கொடுக்க முடியுமா? வேண்டாம், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 3 சென்ட் நிலத்தையாவது பொதுமக்களுக்கு கொடுக்க முடியுமா?
கோடநாடு எஸ்டேட்டில் 172 குடும்பத்தினர் காமராஜர் நகருக்கு 17 கி.மீ சுற்றி செல்ல வேண்டியுள்ளது. தனது சொந்த எஸ்டேட் பகுதியிலுள்ள பொது மக்களுக்கு வழி விடாத ஜெயலலிதா, உங்களுக்கு நல்வழியை காட்டுவாரா? என சிந்தித்து ஓட்டு போடுங்கள்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

மிக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தி.மு.க.வுக்கு ஆதரவு



தமிழ்நாடு மிக பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு கூட்டம் கோவையில், மண்டலத் தலைவர் கேசவமூர்த்தி தலைமையில் நடந்தது. மண்டல செயலர் முருகன் வரவேற்றார். மண்டல பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். கூட்டத்தில், நிர்வாகிகள் மந்தராச்சலம், டோப்பாஸ் அய்யர், பழனிசாமி, ஜோதி, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க.வுக்கு டிப்ரஸ்டு கிளாசஸ் ஆதரவு :

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் தலைமையில் தாழ்த்தப்பட்டோருக்காக, ‘டிப்ரஸ்டு கிளாசஸ்’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது, அந்த அமைப்பின் காப்பாளராக நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார் உள்ளார். இந்த அமைப்பின், தமிழக தலைவர் அருள்தாஸ் வெளியிட்ட அறிக்கை:
எங்கள் அமைப்பின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் 29ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது என்றும், சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

Friday, April 1, 2011

அடித்தட்டு மக்களுக்கு பாடுபடும் தி.மு.க அரசு - முதல்வர் கருணாநிதி பேட்டி


அடித்தட்டு மக்களுக்கு பாடுபடும் அரசு தி,மு.க. அரசு என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சிஎன்என் & ஐபிஎன் தொலைக்காட்சிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி வருமாறு:
இந்த தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் முன் திமுக என்ன கேள்விகளை முன்வைக்கிறது?
திமுக அரசு 1967 முதல் இதுவரையில் ஆற்றியுள்ள சாதனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா? நாங்கள் நம்பகமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா, இல்லையா? நாங்கள் அறிவித்த திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றை நிறைவேற்றியிருக்கிறோமா, இல்லையா? அப்படி நிறைவேற்றக் கூடிய அளவுக்கு ஆற்றலும், அறிவும் அதே நேரத்தில் அக்கறையும் உள்ளவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா, இல்லையா? ஏழை எளிய, அடித்தட்டு மக்களுக்கு பாடுபடுகின்ற அரசு இது என்பதை அறிந்திருக்கிறீர்களா, இல்லையா? இத்தகைய கேள்விகளைத் தான் வைக்க விரும்புகிறேன்.
2006 தேர்தல் அறிக்கையில் இலவசக் கலர் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கினீர்கள். தற்போது லேப்டாப், கிரைண்டர் போன்றவைகளை அறிவித்திருக்கிறீர்கள். வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது இலவச சலுகைகளை அளிப்பதாக வாக்குறுதி கொடுப்பது தான் என்று கூறப்படுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
இலவச சலுகைகள் என்பது வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல. ஏழையெளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் திமுக அரசுக்கு இன்று நேற்றல்ல; இந்த இயக்கத்தைத் தொடங்கியதே அந்த ஏழைகளை வாழவைப்பதற்காகத் தான். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்பது தான் எங்கள் தலைவர் அண்ணா முழக்கம். அந்தச் சிரிப்பைக் காண்பதற்கான முயற்சிகளில் இந்த இலவசத் திட்டங்களும் ஒன்றாகும்.
தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கும் திமுகவிற்கும் கருத்து மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்தலுக்குப் பிறகும் இந்த கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
இந்திய அளவில் காங்கிரசும், தமிழ்நாட்டளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின் றன. அவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக தமிழைச் செம்மொழியாக ஆக்கும் திட்டம். சோனியா காந்தி தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர அவரே முன்னின்று முயற்சித்து, மறைந்த கல்வி அமைச்சர் அர்ஜூன்சிங் உதவியோடு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தார்.
தமிழகத்திற்கு இன்னும் நிறைய வேண்டும் என்பதில் போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல.
திமுக இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்த இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி ஆட்சி அமையப் போகிறது என்பதற்கான முன் அறிவிப்பாக எடுத்துக் கொள்ளலாமா?
ஒரே கட்சியின் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதை தேர்தல் முடிந்த பிறகுதான் சொல்ல முடியும். மேற்கு வங்கத்தில்கூட மார்க்சிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து, தேர்தல் முடிந்த பிறகு உகந்தவாறு அரசு அமைக்கிறார்கள். அதைப்போல நான் நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன். ஒருவேளை
ஸ்ஷீtவீஸீரீ ஜீணீttமீக்ஷீஸீ
என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால், நாங்கள் அப்போது மற்றக் கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்.
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்கிறதா?
எந்தக் கேள்விக்குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவன்தான் மு.க.ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அண்ணா தலைமையில் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து பொருளாளராக அண்ணாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்குக் கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க. ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார். என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற திமுக தோழர்கள், கட்சியில் இருக்கிற முன்னணியினர், பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க. ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அது கேள்விக்குறியாக ஆவதற்கு எந்தவித நியாயமும் இல்லை.
அரசியலில் உங்கள் குடும்பத்தினரை நீங்கள் முன்னிலைப்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
திமுக ஒரு ஜனநாயக இயக்கம். அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல. உதாரணம் சொல்ல வேண்டு மேயானால் சங்கர மடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்குப் பின்னர் இவர்தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டுச் சென்றார்.
அதை அந்த மடத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திமுக ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயக ரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ அதைப்போல தான் இயக்கத் தோழர்கள், செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
உங்கள் குடும்பத்தை ஊக்குவிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி?
எனக்குக் குடும்பம் இருப்பதால் பெரிய தொல்லை. என்னைப் புரிந்தவர்கள் குடும்ப அரசியல் நடத்துகிறேனா இல்லையா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்குப் பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல. துணைக்கு யார் யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்.
கடைசியாக ஒரு கேள்வி. கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடப் போகின்றன. நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில் இந்திய வீரர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
ஒற்றுமையாக இருந்து அவரவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து உற்சாகமூட்டு கின்ற முறையில் பொறுப்போடு விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது தான் நான் அவர்களுக்கு தருகின்ற வாழ்த்து.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியவர் முதல்வர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின் பேச்சு


தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியவர் முதல்வர் கருணாநிதி என்று துணை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 29.03.2011 அன்று பிரசாரம் செய்தார். முத்தையாபுரத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து அவர் பேசியதாவது:
நாங்கள் தேர்தலுக்காக மட்டும் உங்களிடம் வரவில்லை. எப்போதும் உங்களோடு இருப்பவர்கள் என்ற உரிமையோடு வந்துள்ளோம். சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் வருவார்கள். பின்னர் கொடநாட்டை பற்றி மட்டும்தான் கவலைப்படுவார்கள். முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்பிக், டாக் உள்ளிட்ட தொழிற்சாலைகள் ஓடத்துவங்கியுள்ளன.
தமிழகத்தில் 6வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று என்னென்ன சாதனைகள் செய்ய இருக்கிறோம் என்பதை முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்காக தனித்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தியவர் முதல்வர் கருணாநிதி. குறிப்பாக ஆரம்ப பள்ளி ஆசிரியர்களாக பெண்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட திருமண உதவித்தொகை திட்டத்தை நாங்கள் மீண்டும் துவக்கி, அதனை ஸீ20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தினோம். இனி இதனை ஸீ30 ஆயிரமாக உயர்த்தியும், கர்ப்பிணிகளுக்கான ஊக்கத்தொகை ஸீ6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி கடந்த 89ம் ஆண்டு சுயஉதவிக்குழுக்களை துவக்கினார். அவர்களுக்கு வழங்கப்படும் மானியக்கடனை ஸீ2.5 லட்சத்திலிருந்து ஸீ4 லட்சமாக உயர்த்தி உள்ளார். இதில் ஸீ2 லட்சம் திருப்பி செலுத்த வேண்டியதில்லை.
திட்டங்களை, சாதனைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவது திமுக ஆட்சி. இதனை உணர்ந்து வாக்களியுங்கள்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

எல்லா தொகுதிகளும் பதற்றமானவை என்று சொல்வதா? வாக்காளர்களிடம் பீதி ஏற்படுத்தும் டிஜிபி போலாநாத் மீது நடவடிக்கை - தி.முக கோரிக்கை



வாக்காளர்களை பீதியூட்டும் வகையில், ‘தமிழகத்தில் 234 தொகுதிகளும் பதற்றமானவை’ என்று அறிவித்த டிஜிபி போலாநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணி தலைவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (திமுக), சதாசிவ லிங்கம் (காங்கிரஸ்), கே.பாலு (பாமக), வன்னிஅரசு (விடுதலை சிறுத்தைகள்), காயல் மகபூப் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) ஆகியோர் கையெழுத்திட்டு 29.03.2011 அன்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் புகார் கடிதம் கொடுத்து உள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக போலீஸ் டிஜிபி போலாநாத் கடந்த 27ம் தேதி எலக்ட்ரானிக் மீடியாவில் பேசும்போது, 234 தொகுதிகளும் பதற்றமானவை.
அதற்கேற்ப துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். இந்த செய்தி, அனைத்து ஆங்கிலம் மற்றும் உள்ளூர் நாளிதழ்களிலும் 28ம் தேதி வெளிவந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே, 234 தொகுதிகளும் பதற்றமானது என்பது வழக்கத்துக்கு மாறானது.
தமிழகத்தில் இதுபோன்ற முன்நிகழ்வுகள் ஏதுமில்லை.
234 தொகுதிகளும் பதற்றமானவை என்று சொல்வதற்கான சூழ்நிலையும் இல்லை.
சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே, போலீஸ் டிஜிபியின் இதுபோன்ற திகிலூட்டும் அறிவிப்பு, வாக்காளர் மத்தியில் நிச்சயமாக பீதியை ஏற்படுத்தும். மேலும், அச்சத்தின் காரணமாகவும், மனரீதியாகவும் வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுத்து நிறுத்தக்கூடிய நிலை உருவாகும்.
போலீஸ் டிஜிபியின் இந்த அறிவிப்பால் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் நோக்கம் செயலிழக்க செய்துவிடும்.
மேலும், தமிழகம் பிரச்னைக்குரிய பகுதியாக இருக்கிறது என்று தமிழகத்துக்கு வெளியே வசிக்கும் வாக்காளர்கள் யூகிக்கும் நிலையும் ஏற்படும்.
இதன்காரணமாக, தவறான அறிவிப்பை வெளியிட்ட தமிழக போலீஸ் டிஜிபி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 51 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 45 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இந்த அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி 51 சதவீதமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசு ஆணை 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
மாநில அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊழியத்தில் 45 சதவீதம் அகவிலைப்படி 1.7.2010 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2011 முதல் அகவிலைப்படியை 45 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தி அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த ஆணையை பின்பற்றி, தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது. அதன்படி, அகவிலைப்படி அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 51 சதவீதமாக வழங்கப்படும். இது 1.1.2011ல் இருந்து வழங்கப்படும்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை 1.1.2011 முதல் ரொக்கமாக வழங்கப்படும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு உண்டான அகவிலைப்படி நிலுவைத் தொகை, மார்ச்&2011ம் மாத சம்பளம் வழங்கப்பட்ட பின்னரே வழங்கப்படும்.
திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடும்போது ஒரு ரூபாய்க்கு குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருந்தால், அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்படும். அதுவே, 50 காசுக்கு குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்படும்.
திருத்தப்பட்ட அகவிலைப்படி, தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேர ஊழியர்களுக்கும், சில்லரைச் செலவு நிதியில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர ஊழியர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். பகுதி நேர ஊழியர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.
திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கும், உள்ளாட்சி ஊழியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் ஊழியர்கள், அரசு மற்றும் மானியம் பெறும் பல்தொழில் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரியும் பஞ்சாயத்து உதவியாளர்கள், கிளார்க்குகள் ஆகியோருக்கும் பொருந்தும்.

இவ்வாறு தமிழக அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.