கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, November 2, 2010

ஆறாவது முறையாக கலைஞர் முதல்வராகிறார் திராவிடர் இயக்க வரலாற்று நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் அறிவிப்பு


வட சென்னை மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் திராவிடர் இயக்க வரலாறு எனும் தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சி 1-11-2010 திங்கள் கிழமை இரவு 7.15 மணிக்கு இராயபுரம் அறிவகம் திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது சிறப்புரையில் ஆற்றிய முக்கியப் பகுதி வருமாறு:

தி.மு.க. இலக்கிய அணி சார்பில் இப்படி ஓர் அருமையான நிகழ்ச்சியை தி.மு.க. இலக்கிய அணி யின் வட சென்னை மாவட்ட செயலாளர் பி.டி. பாண்டிச் செல்வம் தோழர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.

முத்துக்களை உதிர்த்ததுபோல்...

திராவிட இயக்க வரலாறு ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை அவ்வளவையும் இந்த குறுகிய நேரத்திலே சொல்லிவிட இயலாது. ஒரு நூலுக்கு உரைப்பாயிரம் போல இங்கே பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்கள் பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் மிக அருமையாக முத்துக்களை உதிர்த்தது போல எடுத்துச்சொல்லி என் பணியைக் குறைத்து அவருடைய உரையில் நல்ல அஸ்திவா ரத்தை அமைத்து எனக்குக் கொடுத்திருக்கின்றார்.

இழந்ததை மீட்டெடுக்க...

திராவிடர் இயக்கம் ஏன் தோன்றியது? நாம் இழந்ததை மீட்டெடுக்கத் தோன்றியதுதான் திராவிட இயக்கம். நாட்டிலே இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளைப் பார்த்து இது எந்தக் கட்சிக் கொடி என்று சொன்னால் எவராலும் சொல்ல முடியாது. புற்றீசல் போல அந்த அளவுக்குக் கட்சிகள். வானவில்லில் ஏழு வண்ணத்தைத் தாண்டி எட்டாவது வண்ணத்திலும் கொடிகளை வைத்தி ருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் மக்களைப் பற்றிய நல்ல எண்ணங்களைவிட, கொடிகளின் வண்ணங்களைத் தான் உருவாக்கிக்கொண்டிருக் கிறார்கள்.

இப்படி ஓர் இயக்கத்தைக் காண முடியாது

உலகத்திலேயே திராவிட இயக்கத்தைப் போன்ற ஒரு இயக்கத்தை எங்கும் காண முடியாது. முதலில் நீதிக்கட்சி தோன்றியது. அதற்கடுத்து சுயமரியாதை இயக்கம் தோன்றியது. இந்த இரண்டு இயக்கத் திற்கும் தலைவராக இருந்திருக்கின்றார் தந்தை பெரியார் அவர்கள்.

1937 ஆம் ஆண்டு நீதிக்கட்சி படுதோல்வி அடைந் தது. பெரிய பெரிய மிட்டா, மிராசு ஜமீன்தார்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள். நீதிக்கட்சி பொதுத் தேர்தலில் தோற்றவுடன் ஒதுங்கிக் கொண்டார்கள்.

அப்படிப்பட்ட காலத்தில் தான் சிறையிலிருந்த தலைவர் தந்தை பெரியார்தான் நீதிக் கட்சிக்குத் தோள் கொடுத்து தூக்கி நிறுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவர் என்று சொல்லி அய்யா அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அறிவகம் முக்கிய இடம்

இன்றைக்கு நான் பேசுகின்ற இந்த இடம் அறிவகம். திராவிட இயக்க வரலாற்றிலே பல முக்கிய முடிவுகளை எடுத்த இடம். அண்ணா அவர்கள் இங்கிருந்து பேசினார்கள். ஒரு குழல் இங்கே இருக்கிறது. இன்னொரு குழல் பெரியார் திடல்; இரண்டும் இரட் டைக் குழல் துப்பாக்கியாக இயங்கும். இரண்டு இயக்கத்திற்கும் ஒரே பார்வை என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய இடம் இந்த இடம்.

தொடர்ந்து தலைவராக கலைஞர்

இந்தியாவிலேயே இன்றைக்கு அய்ந்தாவது முறையாக முதலமைச் சராக ஆட்சி செய்துகொண்டிருக் கின்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர் கள் தொடர்ந்து 11 முறையாக, 12 ஆவது முறையாக தலைவராக இருந்து கொண்டு வருகின்ற மாபெரும் ஆற்றலாளர்.

அறிவகம் அன்றைக்குப் பழைய கட்டடமாக இருந்தது. அந்த பழை மையை மாற்றி புதுமையான கட்ட டமாக மாற்றியிருக்கின்றார் கலைஞர் - அண்ணா அறிவாலயம் போல.

மூத்த முன்னோடிகள்


அமைத்த மேடை வட சென்னையை எடுத்துக் கொண்டால் ராயபுரம், கல்மண்டபம் இதுபோன்ற பகுதிகளுக்கு தோழர் களால் அழைக்கப்பட்டு பேசியிருக் கின்றேன். பழனிச்சாமி, எஸ்.பி.டி திராவிடமணி, எஸ்.பி.வீரமணி எஸ்.ஆர். சாண்டோ, ஆரிய சங்காரன், என்.எஸ்.சங்கரரூபன், கண்ணபிரான், க. பலராமன் போன்ற முன்னோடிகள் அமைத்த மேடை இந்த மேடை. அவர் கள் கட்டிய மேடையிலிருந்து என்னு டைய உரையைத் தொடங்குகிறேன்.

திராவிட இயக்கம் என்பது ஒரு பேரியக்கம். இது ஒரு கொள்கைக் குடும்பம்.

எங்களோடு மிசாவிலே இருந்த ராமதாஸ் அவர்கள் இந்த மேடையில் இருக்கின்றார்.

பதவிக்காக தோன்றிய இயக்கமல்ல!

அருமைச் சகோதரர் டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் சொன்னது போல ஏதோ பதவிக்காக இந்த இயக்கம் தோன்றியதல்ல. பதவி என்பது ஒரு கருவி, அவ்வளவுதான்.

மீண்டும் ஆறாவது முறையாக கலைஞர் தான் முதல்வராக வரப்போகிறார். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் தேவை இல்லை.

இன மீட்சிக்காக பாடுபடுகிற ஆட்சி!

இந்த ஆட்சி சமுதாய மீட்சிக்காக, சமுதாய மாற்றத்திற்காக, இன விடுதலை மீட்சிக்காகப் பாடுபட்டுக் கொண்டு வருகின்ற ஆட்சி.

நூறு ஆண்டுகால வரலாற்றை ஒரு முக்கால் மணி நேரத்தில் சொல்லிவிட முடியாது.

விமானத்தில் பயணம் செய்யும்பொழுது இதுதான் - வடசென்னை, இதுதான் அண்ணா நினைவிடம், இதுதான் கடல் என்று சொல்லு வதைப்போல- சொல்லவேண்டியுள்ளது.

திராவிடர் இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப் பட்டது? ஆட்சிக்கு வர இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் தேவை, இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் தேவை என்று பார்க்கின்ற இயக்கம் அல்ல.

கலைஞரின் நாகை உரை

சமீபத்தில் நாகப்பட்டினத்திலே கலைஞர் அவர்கள் உரையாற்றுகின்றபொழுது சொன்னார்கள், ஆட்சி என்பது திராவிடர் இயக்கக் கொள்கையை இலட்சியத்தை செயல்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பு என்று அவர்கள் சொன்னார்கள்.

அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க...

ஓர் இலட்சியத்தை ஓர் இலக்கு நோக்கி செல்லக்கூடியது. ஜாதி ஒழிந்த சமுதாயம் அமையவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று பாடுபடக் கூடிய ஆட்சி -திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னார்கள்.

மக்களைத் தயார்படுத்தக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் தேர்தலிலே நிற்காத ஒரு இயக்கம். திராவிடர் இயக்கக் கொள்கையை நிறைவேற்ற மக்களை ஆயத்தப்படுத்தக் கூடிய இயக்கம். மக்களை தயார்படுத்தக் கூடிய இயக்கம், இந்த இயக்கம்.

தந்தை பெரியார் அவர்களுடைய குருகுலத்திலே பயின்றவர்தான் அண்ணா, கலைஞர், நாங்க ளெல்லாம். அதனால்தான் தி.மு.க. ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர் அண்ணா. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணத்திற்கு சட்டவடிவம் கொடுத்தவர் அண்ணா. அதேபோல, இன்றைக்கு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் கலைஞர் அவர்கள். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்றியவர் கலைஞர்.

தந்தை பெரியாரின் திட்டங்கள் எல்லாம் அண்ணா, கலைஞர் ஆட்சியில் சட்டமாக மலர்ந்தன. காஷ்மீரில் இருக்கின்ற பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் - கன்னியாகுமரியில் இருக் கின்ற பார்ப்பானுக்கு நெறி கட்டும்.

ஓட்டை உடைசல் கிடைக்காதா?

அதனால்தான் ஊடகத்தை தங்களுடைய பிடியிலே வைத்திருக்கின்ற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும் கலைஞர் ஆட்சியை குறை சொல்ல ஒரு ஓட்டை, உடைசல் கிடைக்காதா, எந்தத் துரும்பாவது கிடைக்காதா என்ற எண்ணத்துடனேயே பார்க்கிறார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற வில்லை என்று கேட்பதுதான் இதற்குமுன் எதிர்க்கட்சியினரின் வழக்கம். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால், தேர்தல் வாக்குறு திகளை ஏன் நிறைவேற்றினீர்கள் என்று கேட்கிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏராளமான வாக்குறுதிகளை கலைஞர் நிறை வேற்றியிருக்கிறார். சொன்னதையும் நிறைவேற்றி யிருக்கிறார். சொல்லாததையும் நிறைவேற்றி யிருக்கிறார். காரணம் என்ன? கலைஞர் அவர்கள் அடித்தட்டு மக்களுக்காகவே சிந்தித்து, சிந்தித்து பல காரியங்களை சிறப்பாக செய்து வருகிறார்.

யார் முடிவு செய்வது?

ஆறாவது முறையாக கலைஞர்தான் மீண்டும் முதல்வராக வரப் போவதைப்பற்றி ஏதோ குளிர்சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு எழுதுகிறவன் முடிவு பண்ணுகிற விசயமல்ல.

குடிசை வீட்டிலிருந்து கான்கிரீட் வீட்டிற்கு மாறியிருக்கிறார்களே ஏழை, எளிய கிராமப்புற மக்கள் அந்த மக்கள்தான் நிர்ணயிக்கப் போகிற வர்கள். ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போடப்படும் என்று அறிவித்தார் கலைஞர்.

இதெல்லாம் நடக்குமா? ஏதோ கொஞ்ச நாளைக்குப் போடுவார்கள். அவர்களால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. நிறுத்திவிடு வார்கள் என்று சொன்னார்கள். ஆனால், கலைஞர் அவர்களோ, ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பதை மேலும் குறைத்து ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை இன்றைக்கும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிந்திக்கிறார்

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களின் நல்வாழ்விற்காக நாள்தோறும் சிந்தித்துப் பணியாற்றிக் கொண்டு வருகின்றார். ஒரு பக்கம் சமூகப் புரட்சியை செய்துகொண்டு வருகின்றார். இன்னொரு பக்கம் பொருளாதார வளர்ச்சியை செய்து கொண்டு வருகின்றார் என்று கூறினார். திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு இந்த சமுதாயத்தின் நிலை எப்படியிருந்தது?

நாடகம் பார்க்க உரிமை இல்லை

இந்த வட சென்னையில் சொல்லுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். இது 1899 ஆம் ஆண்டு போடப்பட்ட நோட்டீஸ். வடசென்னை யானை கவுனி பகுதியில் லட்சுமி விலாஸ் நாடக சபை சார்பில் அபிராம சுந்தரி நாடகம். இந்த நாடகத்தை ஏன் பார்க்க வர வேண்டும்? இந்த நாடகத்தில் உள்ள கதையின் முக்கிய பகுதி என்ன என்பதை போட்டுவிட்டு நாடகம் பார்ப்பதற்குரிய கட்டணம் சோபா ஒரு ரூபாய். சேர் 12 அணா. இன்டர்மீடியட் சேர் 8அணா. காலரி 4 அணா. புருஷாளுக்குப் பாய் 4 அணா ஸ்திரீகளுக்கு ஜமக்காளம் 3 அணா என்று இப்படி கட்டணங் களைப் போட்டுவிட்டு கடைசியாக குறிப்பு என்று இந்த நோட்டீசில் போட்டிருக்கிறார்கள்.

பஞ்சமர்களுக்கு நாடகம் பார்க்க அனுமதி இல்லை என்று போட்டிருக்கிறார்கள். நாடகம் பார்க்க என்ன ஜாதி சர்டிபிகேட்டுடன் தான் வர வேண்டுமா? இன்றைக்கு யாராவது அந்த மாதிரி சொன்னால் புழல் சிறையில்தான் அடைக்கப் படுவார்கள்.

நூறு வருடத்திற்கு முன்பு இருந்த நிலை மாறியிருக்கிறதே இதற்கு யார் காரணம்? வருடா வருடம் ஆயுத பூஜைகள் வந்ததினால் ஏற்பட்ட மாறுதலா? அல்லது வருடா வருடம் தீபாவளி வந்ததினால் ஏற்பட்ட மாறுதலா?

திராவிடர் இயக்கத்தின்

அபாரத் தொண்டு திராவிடர் இயக்கத்தின் அபாரமான தொண்டு உலகத்திலேயே இப்படி ஒரு மனித நேய இயக்கத்தைக் காண முடியாது. மேலை நாடுக ளிலே ஆயுதம் ஏந்தி புரட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் இந்த நாட்டிலே மாபெரும் சமுதாயப் புரட்சியை செய்தவர் தந்தை பெரியார்.

கலைஞர் செய்த காரியம்

முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ராமகோபாலன் கீதை புத்தகத்தைக் கொடுக்க வருவதாக தகவல் வந்தது. அவர் வரட்டும் யாரும் தடுக்காதீர்கள் என்று கலைஞர் சொல்லிவிட்டார். உடனே அண்ணா அறிவாலயத்தில் இருந்து நான் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வாங்கி வைத்துக் கொண்டார். ராமகோபாலன் வந்து கலைஞரை சந்தித்தார். இந்த நூலை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று வந்தேன். இந்த நூலை நீங்கள் படிக்க வேண்டும் என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு இந்த நூலை வீரமணி எழுதியிருக்கின்றார் இதை நீங்கள் படிக்க வேண்டும் என்று ராமகோபாலனிடம் கொடுத்தார். அவர் அதிர்ச்சியோடு வாங்கிக் கொண்டார். இந்த செய்தியை கலைஞர் அவர்கள் தான் எனக்கு உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னார். பிறகு நண்பர்களும் நடந்த சம்பவத்தை எனக்குச் சொன்னார்கள். அந்த அளவுக்கு வேகமான, விவேகமான சிந்தனையாளர் கலைஞர் அவர்கள்.

அவமானங்களைப் பெற்றதால் பிறந்த இயக்கம்

எனவே அவமானங்களைப் பெற்றதால் திராவிட இயக்கம் பிறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனிதனுடைய காலிலே போடப்பட்ட பொரு ளாதார விலங்கு கண்ணுக்குத் தெரியும் மனிதனு டைய கைகளிலே போடப்பட்ட அரசியல் விலங்கு கண்ணுக்குப் பளிச்சென்று தெரியும். ஆனால் மூளையிலே போடப்பட்ட அடிமை விலங்கு அவ்வளவு சுலபமாக கண்ணுக்குத் தெரியாது.

திராவிட இயக்கம் ஏன் பிறந்தது?

அதன் வேலை முடிந்ததா?

அதன் வேலை தொடர வேண்டுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவர் ஒரு ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கி அவனுக்குப் பரிசு விழுந்தால் லட்சாதிபதி ஆகிவிடாலம். ஆனால் ஒருவனுக்குள்ள ஜாதி அவன் இறந்துவிட்டால் சுடுகாட்டுக்குச் சென்று அவனை எரித்த பிறகும் அவன் சாம்பலாகிறானே தவிர, ஜாதி சாவதில்லை. இராணுவ அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்கள் முன்னாள் முதல்வர் சம்பூர்ணானந்த் சிலையை உத்தரப்பிரதேசத்தில் திறக்கச் சென்ற பொழுது அங்குள்ள உயர் ஜாதி மாணவர்கள் இவரை அவமானப்படுத்தி அனுப்பினார்கள்.

பாபுஜெகன்ஜீவன்ராம் குமுறினார்

தாழ்ந்த ஜாதிக்காரன் நீ அமைச்சராகி விட்டால் எங்களுடைய ஷூக்களுக்கெல்லாம் யார் பாலிஷ் போடுவது என்று அவமானப்படுத்தி அனுப்பினர். சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் தந்தை பெரியார் பிறந்த மண் என்று சொல்லி அவருடைய மனக் குமுறலைக் கொட்டினார்.

அதனால்தான் கலைஞர் அவர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் திறந்து வைத்தார். அது மட்டுமல்ல, இந்த நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சி நடத்திக் கொண்டு வருகின்றார்.

தியாகராயரும், டி.எம்.நாயரும்

சர்.பிட்டி.தியாகராயர் காங்கிரஸ்காரர். பெரிய பக்திமான். டி.எம்.நாயர் நாத்திகவாதி. இரண்டு பேரும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நின்றபொழுது பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் தோற்கடித்தார்கள். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் இருவருமே எலியும் பூனையும் போல இருந்தவர்கள். இவரும் கீரியும், பாம்பும் போல இருந்தவர்கள்.

சர்.பிட்டி.தியாகராயர் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பெரிய தொகையை நன்கொடையாக வழங்கினார்.

கும்பாபிஷேக விழாவிற்கு இவர் சென்றார். பார்ப்பனர்கள், இவரை கும்பாபிஷேக மேடையில் ஏற்றுவார்கள் என்று சர்.பிட்டி.தியாகராயர் நினைத்தார். இவரைப் பார்ப்பனர்கள் ஏற்றவில்லை. இவரிடம் கணக்குப் பிள்ளையாக இருந்த பார்ப்பனரை மற்ற பார்ப்பனர்கள் கும்பாபிஷேக மேடையில் ஏற்றினார்கள்.

இந்த அவமானத்தை பார்ப்பனர்களின் ஆணவத்தை உணர்ந்த தியாகராயர் உடனே காரை எடு என்று சொல்லி டி.எம்.மாதவன் நாயர் வீட்டிற்குச் சென்றார். இவர் எதற்கு இங்கு வந்திருக்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை.

டி.எம்.நாயரைக் கண்டவுடன் கட்டிப்பிடித்துக் கொண்டார் சர்.பிட்டி.தியாகராயர். திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு இவைதான் காரணங்கள்.

நாயரின் ஸ்பர்டாங் ரோடு பேச்சு

டாக்டர் டி.எம்.நாயர் 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் சென்னை ஸ்பர்டாங் சாலைப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு நிகழ்த்தினார். சேத்துப்பட்டிற்கு அருகில்தான் இருக்கிறது ஸ்பர்ட்டாங் ரோடு.

டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய சொற்பொழிவில் அரிய செய்தி ஒன்றைச் சொல்லுகின்றார். இந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான நம் திராவிடர் இனம், மற்றொன்று, நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும் போது, வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம்! (நீங்கள் கை தட்டியது போல்தான் அன்றைக்கும் கூட்டத்தினர் வெட்கம், வெட்கம், ளுயஅந, ளுயஅந என்று ஆரவாரித்துக் கைதட்டினர்)

இத்தகைய இழிதகைமை கொண்ட ஆரிய இனம், நாட்டின் இந்தப் பகுதிகளில் திருட்டுத் தனமாக நுழைவதற்கு என்றே, அவர்களுடைய கடவுள்களால் இயற்கையாகவே, ஏற்படுத்தப்பட்டு விட்டதோ என்று எண்ண வேண்டிருக்கிறது. வட இந்திய மலைப் பகுதிகளான இமயமலை, இந்துகுஷ்மலை ஆகியவற்றின் இடையிடையே உள்ள கைபர் கணவாய், போலன் கணவாய் முதலிய கணவாய்களின் வழியாகத் தாங்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு சாரை சாரையாக உள்நுழைந்து, வழி நெடுக, மேய்த்துக்கொண்டே வந்து ஆங் காங்குப் பரவி முகாம் அடித்துக்கொண்ட வர்கள்தாம், இந்த ஆரியப் பரதேசிகள் (கைதட்டல்! ஆரவாரம்!) என்று பேசியிருக்கின்றார். சமுதாய ஏற்றத்தாழ்வு, நிலையை மாற்றத்தான் திராவிட இயக்கம் பிறந்தது.

2011இல் மீண்டும் கலைஞர் ஆட்சி

1917இல் டாக்டர் டி.எம்.நாயர் சொன்ன செய்தியை நடைமுறைப்படுத்தியவர் நமது கலைஞர் அவர்கள். அதனால்தான் அனைத்து ஜாதியி னரையும் அர்ச்சகராக்க சட்டம் இயற்றினார்.

எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டுமென்று பாடுபடுகின்ற இயக்கம்தான் திராவிட இயக்கம். 2011ஆம் ஆண்டு திராவிட இயக்க ஆட்சி கலைஞர் ஆட்சி-மலர்வது உறுதி. ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் கலைஞர்தான் இந்த நாட்டை ஆளப்போகின்றார். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.

தி.மு.க. இலக்கிய அணி நிகழ்ச்சி

வடசென்னை மாவட்ட தி.மு.க இலக்கிய அணியின் சார்பில் திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் 1.11.2010 அன்று திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை ராயபுரம் அறிவகத்தில் மிகச்சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழர் தலைவரை வாயிற்படியிலேயே நின்று பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அடுத்து நிகழ்ச்சி தொடங்கியது. வடசென்னை மாவட்ட தி.மு.க இலக்கிய அணி செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அடுத்து வடசென்னை மாவட்ட தி.மு.க செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து வட சென்னை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் திராவிடர் இயக்க வரலாற்றை எடுத்துக் கூறினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திராவிட இயக்க வரலாற்றை விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இரா.மதிவாணன், கட்பீஸ் அ.பழனி, டன்லப் ரவி, அ.மணிவேலன், வி.எஸ்.ரவி, ஆர்.டி.சேகர், செ.தமிழ்வேந்தன், டி.வி.சதீஷ்குமார், தா.இளைய அருணா ஆகியோரும் மற்றும் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் செ.வை.ர.சிகாமணி, வடசென்னை மாவட்ட தலைவர் கொடுங்கையூர் தங்கமணி, மாவட்டச் செயலாளர், தி.வேசு.திருவள்ளுவர், கடலார் வேலாயுதம் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு ஐ.ஓ.பி. சார்பில் வங்கி தலைவர் வழங்கினார்


முதல்வர் நிவாரண நிதிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் க்ஷீ1 கோடி நிதியை வங்கி தலைவர் நரேந்திரா வழங்கினார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள எம்.நரேந்திரா, முதல்வர் கருணாநிதியை நேற்று (01.11.2010) சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயை வழங்குவதாக தெரிவித்து, அதற்குரிய காசோலையை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் எஸ். மாலதி, உள்துறை முதன்மை செயலாளர் கு.ஞானதேசிகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர்கள் நுபுர் மித்ரா, ஏ.கே.பன்சால், பொது மேலாளர் கீதா பி.ஷெட்டி ஆகியோர் உடனிருந்தனர்

காலை, மாலை நேரங்களில் மாணவர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் - முதலமைச்சர் கலைஞர் உத்தரவு


சென் னையில் 12 வழித்தடங் களில் காலை, மாலை ஆகிய நெரிசல் நேரங் களில், பள்ளி மாணவ-மாணவியருக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவ - மாணவியர், மாநகர பேருந்துகளையே நம்பி உள்ளனர். காலை நேரத் தில் மாநகர பேருந்து களில், அலுவலகம் செல் வோர், கல்லூரிகளுக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினருடன், பள்ளி மாணவர்களும் பயணம் செய்ய வேண்டி இருப்ப தால் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள் ளது. மேலும் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

இவற்றை கருத்தில் கொண்டு, பள்ளிக்கூட வாசலில் இருந்து பேருந் துகள் புறப்பட்டுச் செல் லும் வகையில் ஏற்பாடு செய்யலாமா?

பள்ளிக்கூடங்களின் நேரத்தை மாற்றி அமைக் கலாமா?

பள்ளி மாணவர்களுக்கு தனிச் சேவையை இயக் கலாமா?

என்பது போன்ற பல் வேறு பரிசீலனைகளை அரசு மேற்கொண்டு வந் தது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, சென்னை கோட்டையில் தலை மைச் செயலாளர் எஸ். மாலதி தலைமையில், உள்துறை, பள்ளிக் கல்வி, போக்குவரத்து துறை அதிகாரிகளின் கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற் றது. இந்தநிலையில், சென்னை பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக் குவது தொடர்பாக முத லமைச்சர் கலைஞர் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று (01.11.2010) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மாநகரில் பள்ளி மாணவர்கள், பள் ளிக்குச் செல்லும்பொழு தும், வீடு திரும்பும் போதும் பேருந்துகளில் ஏற்படும் நெரிசல் கார ணமாக பயணம் செய்வ தில் சிரமம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும் நோக்குடன்-பள்ளி களுக்கு மாணவ, மாண வியர் சென்று வருவதற்கு வசதியாக, `23சி', `29ஏ', `11ஜி', `12பி', `21எல்', `27டி', `29சி', `47', `5பி', `6டி', `37பி', `38சி' ஆகிய 12 வழித் தடங்களில் காலையில் இரண்டு நடைகளும், மாலையில் இரண்டு நடை களும் பள்ளி மாணவ, மாணவியர்க்கான சிறப்பு பேருந்துகளை உடனடியாக இயக்கிட முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது எப்படி? - முதல்வர் கருணாநிதி விளக்கம்


தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு எப்படி அளிக்கப்படுகிறது என்பது குறித்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுமான வரையில் பெயர்ச் சொல்லாவது தலைப்பாக கொண்டுள்ள படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணமாக ‘சிவாஜி’, ‘ஏகன்’, ‘பாஸ்(எ) பாஸ்கரன்’, ‘கோவா’, ‘எந்திரன்’ போன்ற படங்களை கூறலாம்.
ஆனால் இந்த துறையில் அறிமுகமாகி படங்களின் தயாரிப்பாளராகவும் அல்லது படங்களுக்கு இயக்குனராகவும் கதை, உரை யாடல் எழுதுபவராகவும் வளர தலைப்பட்டுள்ள சில கலைஞர்கள், கேளிக்கை வரி விலக்குக்கான அரசின் நிபந்தனையை புரிந்து கொள்ளாமல் உள்ளனர். வேண்டுமென்றே திட்டமிட்டு, திரைப்பட தலைப்புகளில் அறவே தமிழ்மொழி அல்லாத பெயர்களை சூட்டுகின்றனர். அவற்றுக்கு கேளிக்கை வரிவிலக்கு உண்டென்று பிரசாரம் செய்கின்றனர்.
அதன் அடிப்படையில் இரண்டு தரப்பினர் விவாதித்துக் கொண்டு, அவர்களில் ஏதோ ஒரு தரப்பினருக்கு வரிவிலக்கு விவகாரத்தில் அரசு துணை இருப்பது போன்ற ஒரு செய்தியை, அரசியல் நோக் குடன் வெளியிட்டு வருவது இப்போது வழக்கமாகியுள்ளது.
திரைப்படங்களின் பெயர் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்து அறிவிக்க, தமிழிக அரசின் வணிகவரித் துறை செய லாளர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பதற்கு முன்பு, சில படங்களுக்கு அந்த விதிகளை மீறி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வருகிற செய்திகளுக்கு அரசு பொறுப்பல்ல.
அந்த குழு ஒப்புக்கொள்ளாத எந்தவொரு பெயரையும் திரைப்படங்களுக்கு வைத்து வெளியிடப்படுமேயானால், வரிவிலக்கு பற்றி கூறுவதற்கு அந்த பட தயாரிப்பாளர்களுக்கு உரிமை கிடையாது. அவர்கள் முழு வரியையும் செலுத்தியே ஆக வேண்டும். தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கு பற்றி மட்டுமே இந்த விளக்கமாகும். எந்தவொரு படத்தையும் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய அரசின் தணிக்கை போர்டுதான் வழங்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

றீ4.75 கோடி வருவாய் கடல்சார் வாரியம் சார்பில் முதல்வரிடம் வழங்கப்பட்டது


கடல்சார் வாரியம் சார்பில் தமிழக அரசுக்கு றீ4.75 கோடியை முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதியால் 1997ம் ஆண்டு தமிழ் நாடு கடல்சார் வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் மேம்பாட்டுக்காக 2007ல் சிறு துறைமுகங்களுக்கான கொள்கையை தமிழக அரசு வகுத்தது. இதன் பயனாக தமிழகத்தில் சிறு துறைமுகங்களின் எண்ணிக்கை 11ல் இருந்து 22ஆக உயர்ந்தது. இத்துறைமுகங்கள் மூலம் 2009&10ம் ஆண்டில் 11.75 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இதுவே ஒரு ஆண்டில் கையாளப்பட்ட சரக்குகளில் மிக அதிக அளவு. இதனால் தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் மொத்த வருவாய் றீ22.57 கோடி உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. 2009 &2010ம் ஆண்டின் வருவாயில் இருந்து தமிழக அரசுக்கான வருவாய் பங்கு தொகையாக றீ4.75 கோடி காசோலையை முதல்வர் கருணாநிதியிடம், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சார்பில் அதன் தலைவரும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநா தன் நேற்று (01.11.2010) வழங்கினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் எஸ்.மாலதி, தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மை செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், உள்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் கோ.சந்தானம், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் எஸ்.சாய்நாத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Monday, November 1, 2010

சிரிக்க முடியாதவர்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள்: கலைஞர் பேச்சு



சென்னை வள்ளுவர் கோட்டம் சாலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகளிர்க் சுய உதவிக்குழுக்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னை தெரசா மகளிர் வளாக திறப்பு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கைவினைப்பொருட்கள் கையேட்டினை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

இவ்விழாவில் அவர், ’’இந்த இனிய மாலை நேரத்தில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தொகுப்பாக ஆற்றியிருக்கின்ற பணிகளையெல்லாம் நினைவு கூர்ந்திடவும், இன்னும் மேலும் ஆற்றவிருக்கின்ற பணிகளுக்கான விதை நடவும்; நாம் இந்த இனிய நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற ஒரு வாய்ப்பைப் பெற்று, உங்களுடைய ஆதரவை - உங்களுடைய அன்பை - உங்களுடைய வாழ்த்துக்களைப் பெறுகின்ற ஒரு நிலையில்;

இந்த விழாவிலே கலந்து கொண்டு, இந்த அருமையான - எழில் ததும்புகின்ற மாளிகையை - வளாகத்தை - அதுவும், அன்னை தெரசா பெயரில் அமைந்திருக்கின்ற வளாகத்தை - திறந்து வைப்பதிலே மிகுந்த பெருமையடைகின்றேன்; மகிழ்ச்சியடைகின்றேன்.


இந்த வளாகத்திற்கு என்ன பெயர் வைப்பது என்ற வினா எழுந்தபோது, எனக்கு நினைவுக்கு வந்தது “அன்னை தெரசா” அவர்களுடைய பெயர் என்பதை தம்பி ஸ்டாலின் இங்கே எடுத்துச் சொன்னார். அந்த நினைவுகூட எனக்கு எப்படி வந்தது என்றால்;

அன்னை தெரசாவினுடைய நூற்றாண்டு விழாவை - தமிழகத்திலே நம்முடைய கழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டுமென்று நானும், அருமை நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் பேசிக் கொண்டிருந்த மறுநாளைக்கு மறுநாள் - இந்தக் கட்டிடத்திற்கான திறப்பு விழா பற்றிய செய்தி வந்த காரணத்தால், அந்தப் பேச்சின் தொடர்ச்சியாக, இந்தக் கட்டடத்திற்கு ஏன் அன்னை தெராசாவினுடைய பெயரையே வைக்கக்கூடாது என்று எழுந்த ஆவலின் காரணமாக, இந்தப் பெயர் இன்றைக்கு அமைந்திருக்கிறது என்பதை நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.


இந்த விழா, சென்னை மாநகரில் - ஒரு பெரிய கட்டடத்தை அமைத்திருக்கிறோம் என்ற அந்த பெரும் உணர்ச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. என்னைப் பொறுத்தவரையில்,


இங்கே தம்பி தயாநிதி மாறன் எடுத்துக் காட்டியதைப்போல், மறைந்த கழகத்தினுடைய மாமேதைகளிலே ஒருவராகத் திகழ்ந்த தம்பி முரசொலி மாறன் - மகளிர் சுயஉதவிக் குழுக்களை நாம் அமைக்க வேண்டுமென்று எடுத்துச் சொன்னதன் காரணமாக, 1989 ஆம் ஆண்டு தருமபுரியிலே இந்தச் சுயஉதவிக் குழுவிற்கான தொடக்க விழா நடைபெற்று - இன்றைக்கு இங்கே எடுத்துக் காட்டியதைப்போல, ஏறத்தாழ 4 இலட்சத்து 74 ஆயிரத்து 874 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்ற அளவிற்கு வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றோம்.


இந்தக் குழுக்களிலே இருக்கின்ற ஏழை மகளிர் எத்தனை பேர் என்பதை எண்ணும்போது, பெருமையாக இருக்கிறது. 73 இலட்சத்து 60 ஆயிரம் ஏழை மகளிர் குழுக்களிலே உறுப்பினர்களாக இன்றைக்கு இருக்கின்றார்கள்.

இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் விற்பனையை மேம்படுத்திடவும், சென்னை மாநகரில் ஒரு நிரந்தரமான விற்பனை வளாகத்தை அமைத்திட வேண்டும் என்ற நோக்கத்திலும், அன்னை தெரசா மகளிர் வளாகம் உருவாக்கப்பட்டு - உள்ளாட்சி மன்றங்களின் நாளான இந்நாளில் இந்த மாளிகை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும்.

இந்த மன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவ்வப்போது, அரசுப் பொறுப்பிலே இருக்கின்ற நம்முடைய துணை முதலமைச்சர் அவர்கள் சிந்தித்து, செயலாற்றி, இத்தகைய பெருவளர்ச்சியை இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்து இதனை வளர்த்திருக்கிறார்.


சுருக்கமாகச் சொல்லவேண்டுமேயானால், தமிழகத்திலே இன்றைக்கு ஆல்போல் தழைத்திருக்கின்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் காரணமாக - இதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது இன்றைய துணை முதலமைச்சருடைய உழைப்புதான் (பலத்த கைத்தட்டல்) என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.


கழக ஆட்சி மகளிர் முன்னேற்றத்திற்கு - மகளிர் உரிமைகளுக்கு எப்படியெல்லாம் துணை நிற்கும் - துணை நின்றது என்பதை எனக்கு முன்னாலே இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 1973 ஆம் ஆண்டில், கழக ஆட்சியில் தமிழகக் காவல் துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அப்போது அருள் அவர்கள் ஐ.ஜி-யாக இருந்தார்.

அந்த நேரத்திலேதான் பெண்களைக் காவல் துறையிலே சேர்க்க வேண்டும்; அவர்களைப் பயன்படுத்திட வேண்டும் என்று எண்ணம் கொண்டு; அதற்கு ஐ.ஜி. அருள் அவர்களும் தன்னுடைய ஆதரவைத் தந்து, முயற்சி மேற்கொண்டு - அப்போது தமிழகக் காவல் துறை பெண்களை உள்ளடக்கியதாக அமைந்தது. அதனுடைய வளர்ச்சி இன்றைக்கு எங்கே வந்திருக்கிறது என்றால், அந்தத் துறையினுடைய தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) ஒரு பெண்மணியே பொறுப்பேற்றிருக்கின்றார்கள்.

அந்த அளவிற்குக் காவல் துறையிலே பெண்களுக்குச் சுதந்திரம்; பெண்களுக்கு உரிமை; பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள ஆட்சி இந்த ஆட்சி ஆகும்.


காவல் துறையிலே மாத்திரமல்ல; தமிழகத்தைக் காக்கும் துறையான தலைமைச் செயலகத் துறையிலேயே ஒரு பெண்மணிதான் இன்றைக்குத் தலைமைச் செயலாளராக இருக்கிறார்.

(கைதட்டல்) உள்ளபடியே தமிழகத்தில் இது போற்றத்தக்க, புகழத்தக்க ஒரு சம்பவம். தலைமைப் பொறுப்பிலே உள்ள அதிகாரிகள் இரண்டு பேரில் - ஒரு பெண்மணி தலைமைச் செயலாளராகவும், இன்னொரு பெண்மணி காவல் துறைக்குத் தலைமை இயக்குநராகவும் (கைதட்டல்) இருப்பதை எண்ணி எண்ணி நாமெல்லாம் மகிழலாம். மகிழ முடியாதவர்கள் வேண்டுமானால் கோர்ட்டுக்குச் செல்வார்கள்.

அது பெண் மக்கள் முன்னேற வேண்டும் என்கின்ற கருத்துடையவர்களால் செய்யப்படுகின்ற காரியமா என்பதை - அவர்களை ஆதரிக்கின்ற இதழாளர்கள், ஏட்டாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமென்று, மகளிருக்கான வளாகத்தை - மாளிகையைத் திறந்து வைத்திருக்கின்ற இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்தியாவிலேயே முதன்முதலாக - மற்றவர்கள் யாரும் வருத்தப்படக் கூடாது - இந்தியாவிலேயே முதன்முதலாக என்றால், பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்குக் கோபம் வந்தாலும் வரும்.

ஏனென்றால், ஒரு சிறந்த தேசிய கட்சியைச் சேர்ந்த ஒரு பெருந் தொண்டர் அவர்; திறமை மிக்க முன்னணி வீரர் அவர். அதனால்தான் சொல்கின்றேன். இந்தியாவிலேயே கழக ஆட்சியில்தான் முதல்முறையாக பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கப்பட்டது. (கைதட்டல்) வழங்கியது மாத்திரமல்ல; அதற்கென ஒரு தனிச் சட்டம் நிறைவேற்றி, பெண்களுக்கு ஒரு தனிச் சிறப்பை வழங்கியது.


அதுமாத்திரமல்ல; இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் கழக ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்டு; பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலைவாய்ப்பினைப் பெற வழிவகுக்கப்பட்டது என்பதையும் மறந்து விடக்கூடாது.


1996 ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான், இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளிலே மகளிர்க்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அடித்தளம் அமைத்தோம் என்பதையும் - ஏறத்தாழ 40 ஆயிரம் மகளிர், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகின்றார்கள் - அரசியல் விழிப்புணர்வையும் பெற்றுவருகின்றார்கள் என்பதையும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


அந்த வகையிலே, இந்த மகளிர் குழுக்கள் எல்லா விதமான பெருமைகளையும் பெற்றுள்ள குழுக்களாகும். நான் இங்கே தரப்பட்ட மலரைப் புரட்டிப் பார்த்தேன். புரட்டிப் பார்த்துவிட்டு, துணை முதலமைச்சர் தம்பி ஸ்டாலினிடத்திலே அதிலேயுள்ள சில படங்களைச் சுட்டிக்காட்டி - “இந்தப் படம் மிக அருமையாக இருக்கிறது;

அது மரத்தால் செய்யப்பட்ட - மகளிர் உழைப்பால் - மகளிர் திறமையால் செய்யப்பட்ட சில படங்கள் - சில கட்டிடங்கள்; சில பொம்மைகள். இவைகளெல்லாம் மகளிருடைய திறமையால், மகளிருடைய உழைப்பால் செய்யப்பட்டவை” - என்று சொல்லிவிட்டு - “மரத்தால் செய்யப்பட்ட இந்தக் கட்டிடத்தினுடைய பொம்மை ஒன்றை நம்முடைய புதிய சட்டப் பேரவைக் கட்டிடத்திலே வைக்க வேண்டும்” (கைதட்டல்) என்றும் நான் தம்பி ஸ்டாலினிடத்திலே சொல்லியிருக்கின்றேன். அவ்வளவு நேர்த்தியாக - அவ்வளவு அழகானதாக - அவ்வளவு மேன்மையுள்ளதாக - அந்தச் சிற்பங்களை அவர்கள் செய்திருப்பதைப் பார்க்கும்போது, நான் உள்ளபடியே வியப்படைகின்றேன்.


இந்தச் சிற்பிகள் பெண்களாக - அதிலும், இந்த மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்களாக இருப்பதை எண்ணும்போது, நான் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


இப்போது ஏறத்தாழ 73 இலட்சம் பேர் தமிழகத்திலே இந்தக் குழுக்களிலே செயல்படுகிறார்கள் என்றால், இந்த 73 இலட்சம் பேரும் சாதாரணமானவர்கள் அல்ல; சாதாரண, சாமான்ய மக்களைச் சார்ந்தவர்கள் என்றாலும்கூட, அவர்கள் இந்தக் குழுவிலே இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அவர்களைத் தனித்தனியாக மகளிர் என்று யாரும் கருதாமல், அவர்களெல்லாம் ஒரு பெரும் சேனை; பெரிய பட்டாளம்; பெரும் படை. அந்தப் படை தமிழ்நாட்டில் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு - பெண்களுடைய எழுச்சிக்கு - பெண்களுடைய எதிர்காலத்திற்கு

வழிவகுக்கக்கூடிய - எத்தகைய இடையூறுகள் வந்தாலும், அவற்றை வென்று நிற்கக்கூடிய - வலிமை பொருந்திய சேனை என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அப்படிப்பட்ட படை வலிமையால், இன்றைக்கு இந்த மகளிர் குழு - இவ்வளவு பெரிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதையும் - இந்த வளர்ச்சிக்குக் காரணமான தம்பி ஸ்டாலின் உட்பட மற்ற அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நாம் பெண்களை மதிப்பவர்கள்; பெண்களைப் பாராட்டுகின்றவர்கள்; பெண்களுக்கு எல்லாவிதமான உரிமைகளையும் தரக்கூடியவர்கள்; அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கக்கூடியவர்கள்; அவர்களை வாழ்த்தக் கூடியவர்கள் என்பதற்கு அடையாளம்தான்; மகளிர் சமுதாயத்திற்காக - பெண்கள் சமுதாயத்திற்காக என்று மாத்திரமல்ல; ஆண்களும் உள்ளிட்ட ஏழையெளியோர் சமுதாயத்திற்காக - நலிவடைந்த மக்களுக்காக - அவர்களுடைய நலனை அடிப்படையாக வைத்து நாளும் தொண்டாற்றிய - மறைந்தும் மறையாத மாதரசு அன்னை தெரசா அவர்களுடைய பெயரால் - அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்ற நேரத்தில் - அந்த நூற்றாண்டு நாள் விழா தமிழக அரசின் சார்பாகவே கொண்டாடப்படும் (கைதட்டல்) என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


அன்னை தெரசா ஒரு தாய்தான். அவர் இந்தியாவிலே பிறக்காத ஒரு தாயாக இருக்கலாம். வெளிநாட்டிலே பிறந்து - இந்திய மக்களுக்குப் பாடுபட்ட ஒரு தாயாக இருக்கலாம். எங்கே பிறந்தாலும், தாய் தாய்தான்.

அப்படிப்பட்ட அன்னைக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றுவோம்; ஆற்றுகின்ற நேரத்திலே அவர் வழிநின்று நடப்போம் என்ற சூளுரையை மேற்கொள்வோம் என்பதை இங்கே எடுத்துக் காட்டி; “அன்னை தெரசா வாழ்க! அவருடைய பெயரால் இங்கே அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் நல்ல பல காரியங்கள் விளைந்திடுக! அந்தக் காரியங்கள் விளைந்திட ஊக்கத்தோடு செயலாற்றிடுக!” என்று இதற்குக் காரணமான அனைவரையும் பாராட்டி, வாழ்த்தி, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்’’என்று பேசினார்.

விழாவுக்கு தலைமை தாங்கி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் ரூ.8 கோடியே 29 லட்சமும், தமிழக அரசு சார்பில் றீ7 கோடியே 3 லட்சமும் கொண்டு ரூ.15 கோடியே 32 லட்சத்தில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் உற்பத்தி பொருட்கள் சென்னையில் நடந்த கண்காட்சியில் றீ1.87 கோடி அளவில் விற்பனையாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு றீ17 கோடியே 52 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. 29 மாவட்டங்களில் வணிக வளாகங்களும் 22 இடங்களில் கூடுதல் வணிக வளாகங்களும் 286 கிராம அங்காடிகளும் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.
கிராமங்களில் மேலும் 90 அங்காடிகள் கட்டப்பட்டு வருகிறது. அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாநில அளவில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. 2007ல் இதை அறிவித்து, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கட்டிட திறப்பு விழாவுக்கு முதல்வரிடம் தேதி கேட்ட போது, உடனே தந்ததுடன் அன்னை தெரசாவின் பெயரையும் சூட்டினார். இது எங்கள் துறைக்கு கிடைத்த பெருமையாகும். பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் அரசு இது. இந்த அரசுக்கு தொடர்ந்து நீங்கள் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:

மகளிர் சுய உதவிக் குழு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 1989ல் எனது தந்தை முரசொலி மாறன் வங்கதேசத்துக்கு சென்றிருந்தார். அங்கு முகமது யூனுஸ் என்பவர் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி அது சிறப்பாக செயல்பட்டதையும், அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதையும் முதல்வர் கருணாநிதியிடம் எனது தந்தை தெரிவித்தார். அதை ஏற்று 1989ல் தர்மபுரியில் மகளிர் சுய உதவிக் குழுவை முதல்வர் கருணா நிதி தொடங்கினார்.
இன்று உலகின் எங்கும் இவ்வளவு குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. இன்று உலகிலேயே இல்லாத அளவுக்கு பெரும் இயக்கமாக இது மாறியுள்ளது. இதற்கு காரணம் முதல்வரும், துணை முதல்வரும் தான். அவர்களுக்கு இதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும். முதல்வர் கோடு போட்டார். துணை முதல்வர் ரோடு போட்டார். இந்த குழுக்களுக்காக றீ3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்க்கிறது.
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

விழாவில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசும் போது, “மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு விழாக்களில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 97 மணி நேரம் மேடையில் நின்று சுழல் நிதி தந்துள்ளார். இது கின்னசில் இடம்பெறும் சாதனையாகும்” என்றார்
ஊரக வளர்ச்சித் துறை செயலர் அலாவுதீன் வரவேற்றார். தலைமை செயலாளர் மாலதி, மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கைவினை பொ ருள் கையேட்டினை முதல் வர் கருணாநிதி வெளியிட, துணை முதல்வர் மு.க.ஸ்டா லின் மற்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் சுய உதவிக் குழுக்களுக்கு றீ2 கோடியை முதல்வர் கருணாநிதி கடனாக வழங்கினார். மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் கோபால் நன்றி கூறினார்.


மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தீய நம்பிக்கையில் அறிக்கை வெளியிடுகிறார் ஜெயலலிதா - முதல்வர் கருணாநிதி


முதல்வர் கருணாநிதி நேற்று (31.10.2010) வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2002ல் காவிரி ஆணையத்தை, செயல்படாத ஆணையம் என்றும் பல் இல்லாத ஆணையம் என்றும் முதல்வர் என்கிற தன் நிலை மறந்து வர்ணித்தவர் ஜெயலலிதா. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில், “காவிரி ஆணையம் தன் கடமையை செய்யவில்லை, கர்நாடகத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறது, எனவே அதன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றும் கூறினார்.
இந்தப் பிரச்சினையில் பிரதமரின் செயல்பாடும் திருப்தியாக இல்லை என்றும், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதாதான், இன்றைக்கு ஏதோ காவிரி நதிநீர் ஆணையத்தின்மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவரைப் போல பாசாங்கு செய்துகொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
காவிரி ஆணையம் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சபர்வால், அர்ஜித் பசாயத் ஆகியோர், ‘‘பிரதமருக்கு 2002 நவம்பர் 5ஆம் தேதியிட்டு ஜெய லலிதா எழுதிய கடிதத்தை படித்து வேதனைப்பட் டோம். ஒரு மாநில முதல்வராக இருப்பவர் அதற்குரிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். காவிரி ஆணையத் தலை வரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லியிருப்பது சரியல்ல. இன்னும் 4 நாட்களுக்குள் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி, காவிரி ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று தெரிவிக்க வேண்டும். ஆணையத்தைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் ஜெயலலிதா சொன்ன கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
அப்படியே ‘‘பல்டி’’ அடித்து, ‘‘காவிரி ஆணையத்தின்மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆணையத் தலைவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். பிரதமர் மற்றும் காவிரி ஆணையம் பற்றி நான் தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்று பிரதமருக்குக் ஜெய லலிதா கடிதம் எழுதினார்.
இன்றைக்கு, ‘‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுக்குமேயானால், கர்நாடகத்தில் உள்ள அணைகளின் மதகு களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளக் கூடிய அதிகாரத்தை காவிரி மேலாண்மைக் குழுவுக்கோ அல்லது காவிரி நதிநீர் ஆணையத்துக்கோ வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்’’ என்று ஜெய லலிதா கூறுகிறார்.
நடுவர் மன்றத் தீர்ப்பினை நிறைவேற்றும் பொறுப்பினை காவிரி நதிநீர் ஆணையத்திடம் ஒப்படைக்கலாம் என்றும் இது வரை அவர் மேற்கொண்டு வந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக & கடந்த காலத்தில் அவர் சொன்னவற்றையெல்லாம் பொதுமக்கள், குறிப்பாக காவிரி விவசாயப் பெருங்குடி மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தீய நம்பிக்கையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் ஒன்று அமைத்திட வேண்டும் என்று முதல் முதலாக 17.1.1970ல் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது நான்தான். 8.7.1971 அன்று நடுவர் மன் றம் அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் முதல்முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்ததும் நான்தான்.
1989ல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, பிரதமராக இருந்த வி.பி.சிங், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் நான்தான். உச்சநீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கில், மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம் கேட்டபோது, வி.பி.சிங் தொலைபேசியிலே 1990ல் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, நடுவர் மன்றம்தான் வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தினேன். எனது வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசும் உச்சநீதிமன்றத்திலே கருத்தறிவித்து, அதன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இவ்வாறு காவிரி நடுவர் மன்றம் அமைய முழுமுதல் காரணமாக இருந்தது நான் என்பதை காவிரிப் பிரச்சினை பற்றிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.
நடுவர் மன்றத்தின்மூலம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று 28.7.1990 அன்று திமுக ஆட்சியிலேதான் கேட்கப்பட்டது. இடைக்காலத் தீர்ப்பு தர தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் தெரிவித்தபோது, திமுக ஆட்சியில் 10.1.1991 அன்று உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, அதன் விளைவாக, அதிகாரம் உண்டு என்ற தீர்ப்பு கிடைத்தது.
4வது முறையாக நான் முதல்வராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான், 1998ஆம் ஆண்டில் 9 மணி நேரம் இடைவிடாமல் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய், தமிழகம்& கர்நாடக அரசுகளுடன் கலந்து பேசி, அதன் விளை வாக காவிரி நதிநீர் ஆணை யமும், கண்காணிப்புக் குழு வும் அமைக்கப்பட்டன.
அதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் அனுமதியையும் பெற்றவன் நான். அப்போது, மத்திய அரசுக்கு தோழமைக் கட்சியாக அதிமுக இருந்தது. எனினும், பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல்வர், கர்நாடக முதல்வர் ஆகியோரது கூட்டு முயற்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்து ஏடுகளும் வரவேற்றன.
ஆனால், ‘‘நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தால்கூட கர்நாடகாவில் அவர்களாகவே அணையைத் திறந்தால்தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும்” என்று 21.3.1991ல் சொன்னவர் ஜெயலலிதாதான், இன்றைக்கு நடுவர் மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசை குறை கூறியிருக்கிறார்.
2001 முதல் 2006 மே மாதம் வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, எத்தனை ஆண்டுகள் காவிரியில் ஜூன் 12 ஆம் தேதியே மேட்டூர் அணையை விவசாயத்திற்காக திறந்திருக்கிறார். 2002ஆம் ஆண்டில் 6.9.2002 அன்றும் 2003ஆம் ஆண்டில் 7.10.2003 அன்றும் 2004ஆம் ஆண்டில், 12.8.2004 அன்றும் 2005ஆம் ஆண்டில், 4.8.2005 அன்றும் தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஜெயலலிதாவைப் போல எந்தப் பிரச்சினையிலும் எடுத்தேன் கவிழ்த் தேன் என்ற பாணியிலும் ஏனோதானோ என்ற முறை யிலும் நடந்துகொள்ள எப் போதும் நினைத்ததில்லை.
இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு போதிய நீர் வரத்து இல்லாத நிலை ஏற்பட்டபோது, கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பின்வருமாறு கடிதங்கள் அனுப்பியதோடு மட்டும் நின்று விடாமல், கர்நாடக முதல்வருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு கர் நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
தலைமைச் செயலாளரிடமிருந்து கர்நாடக தலைமைச் செயலாளருக்கு 3.7.2010 அன்றும் என்னிடமிருந்து கர்நாடக முதல்வருக்கு 18.7.2010 அன்றும் பொதுப்பணித் துறை முதன் மைச் செயலாளரிடமிருந்து கர்நாடக அரசு நீர் ஆதாரத் துறை முதன்மைச் செயலாளருக்கு 24.9.2010 அன்றும் கடிதங்கள் எழுதப்பட்டன.
மீண்டும் கர்நாடக முதல்வருடன், நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஆணையிடுமாறு கேட்டுக் கொண்டதுடன், அவருக்கு நேர்முகக் கடிதம் ஒன்றையும் 2.10.2010 அன்று அனுப்பினேன்.
அதன் பின், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக் கால ஆணையின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு, இடர்ப் பாடு காலத்தில் தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைப்படி தண்ணீரை விடு விக்க வேண்டிய முழு விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கர்நாடக தலைமைச் செயலாளருக்கு 4.10.2010 அன்று அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்துவரும் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் கர்நாடக முதல்வருக்கு சம்பா பயிருக்குத் தேவை யான தண்ணீரை விடுவிக்க கடிதம் ஒன்றை, 25.10.2010 அன்று எழுதி, அக்கடிதத்துடன் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி மற்றும் பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் 26.10.2010 அன்று கர்நாடக முதல்வரை நேரடி யாக சந்தித்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இந்த முயற்சிகளுக்கிடையே, மத்திய அரசு தலையிட்டு, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை விடுவிக்க அறிவுறுத்தக் கோரியும், காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட வேண்டியும்; தமிழக முதலமைச்சரிடமிருந்து இந்தியப் பிரதமருக்கு 29.8.2010 நாளிட்டு கடிதமும் மற்றும் அதிகாரிகள் நிலையில் 13.8.2010 மற்றும் 24.9.2010 நாளிட்டு கடிதங்களும் அனுப்பப்பட்டன.
காவிரிப் பிரச்சினையில், திமுக அரசு ஆற்றிவரும் பங்களிப்புகளின் ஆழத்தையும், அருமையையும் ஜெயலலிதாவின் எதிர் மறை அணுகுமுறையையும், ஆண வப் போக்கையும் தமிழக விவசாயிகள் நன்றாக அறிந் 1397776754 வைத்திருக்கும்போது, சட்டப்பேரவைத் தேர்தலை மனதிலே வைத்துக் கொண் டு, உள்நோக்கத்தோடு காலந்தாழ்த்தி இப்போது அவர் வெளியிடும் பொருளற்ற அறிக்கைகளை எல்லாம் மக்கள் கிஞ்சிற்றும் பொருட்படுத்த மாட்டார்கள்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்