கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 2, 2011

காங்கிரசாரை நான் கிண்டலாக பேசவில்லை;துரைமுருகன்


அமைச்சர் துரைமுருகன் 02.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’இன்றைக்குக் காலையில் வெளிவந்த ஒரு வார ஏடு, அண்ணா அறிவாலயத்திற்கு தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் குழுவினர் வந்த போது, நான் ஏதோ கிண்டலாகப் பேசியதாகவும், அதனால் காங்கிரஸ் தலைவர்கள் கோபமடைந்ததாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதுபோல எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. நான் பேசியதாக அந்த ஏடு எழுதியிருப்பதைப் போல நான் பேசவும் இல்லை.

இதனை அந்தக் கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நன்கறிவார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தக் குழுவினரைத் தவிர பேச்சுவார்த்தை நடைபெற்ற அறைக்குள் யாருமே வரவில்லை. அப்படியிருக்க இந்தச் செய்தியாளர்,

உள்ளே நடைபெறாத சம்பவங்களையெல்லாம் நடைபெற்றதைப் போல கற்பனையாக ஒரு உரையாடலை எழுதி எப்படியாவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனையாதா, அதனால் அம்மையாரின் ஜென்மம் சாபல்யம் அடையாதா என்று எண்ணுகின்றார்கள். அந்தச் செய்திகளைப் படித்து விட்டு அது உண்மையாக இருக்குமோ என்று யாரும் எண்ணி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயம் வந்தபோது அந்த ஏட்டிலே எழுதியிருப்பது போன்ற வார்த்தைகளைப்பேசவும் இல்லை, கிண்டலும் செய்ய வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

திமுக வேட்பாளர்கள் நேர்காணல்


தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்பவர்கள் வரும் 5ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 8ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்குகிறது என்று, திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 02.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் தந்தவர்களிடம் முதல்வர் கருணாநிதி வரும் 8&ம் தேதி முதல் நேர்காணல் நடத்த உள்ளார். மாவட்ட வாரியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடக்கும் நேர்காணலில் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து ஆராய்ந்து அறிகிறார். நேர்காணல் நடக்கும் நாள், மாவட்ட விவரம் வருமாறு:

இதன்படி மார்ச் 8ஆம் தேதி காலை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்,


மார்ச் 8ஆம் தேதி மாலை விருதுநகர், தேனி, திண்டுக்கல்


மார்ச் 9ஆம் தேதி காலை சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈடுரோடு


மார்ச் 9ஆம் தேதி மாலை நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர்


மார்ச் 10ஆம் தேதி காலை புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி


மார்ச் 10ஆம் தேதி மாலை கரூர், பெரம்பலூர், அரியலூர்


மார்ச் 11ஆம் தேதி காலை நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர்


மார்ச் 11ஆம் தேதி மாலை விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு


மார்ச் 12ஆம் தேதி காலை திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம்


மார்ச் 12ஆம் தேதி மாலை திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை


மார்ச் 13ஆம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் தொகுதிகளுக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் நேர்காணல் நடைபெறும்.

குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தை சேர்ந்த கழகச் செயலாளர், கழக நிர்வாகிகள், அந்தந்த தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, பகுதி, நகர கழக செயலாளர்கள் மட்டுமே நேர்காணலுக்கு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் தேதி மாற்றம்: திமுக தலைமைக் கழகம்



தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்பவர்கள் வரும் 5ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு புதுவை மாநில சட்டப் பேரவை பொதுத்தேர் தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 7ந் தேதி திங்கட்கிழமை வரை தலைமை கழகத்தில் விண்ணபித்திடலாம் என அறிவிக்கப்பட்டிருந்த தேதி மாற்றம் செய்யப்பட்டு 5ந் தேதி சனிக்கிழமைக்குள் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு புதுவை மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம்: பொதுத் தொகுதி ரூ.5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.2,500. வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவம் தலைமை கழகத்தில் ரூ.500 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.


முதல்வர் கலைஞருடன் மாநில தகவல் ஆணையர்கள் சந்திப்பு


முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட ராமையா, மனோகரன், ஆறுமுக நயினார் ஆகியோர் 02.03.2011 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அருகில் தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

திமுக கூட்டணியில் மூ.மு.கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு



திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரை மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் 02.03.2011 அன்று காலை சந்தித்து பேசினார். அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதற்கான உடன்பாட்டு ஏற்பட்டது. இதையடுத்து திமுக சின்னத்தில் ஒரு தொகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் போட்டியிடுவதற்கான உடன்பாடும் கையெழுத்தானது.

பின்னர் நிருபர்களிடம் ஸ்ரீதர் வாண்டையார் கூறியதாவது:
திமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி என்பது 2 நாளில் தெரிவிக்கப்படும். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்துவும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய செல்லமுத்து, “எங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்க கேட்டோம். கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் விட்டுக் கொடுக்கும்படி முதல்வர் கேட்டுக் கொண்டார். அதை ஏற்று விட்டுக் கொடுத்துவிட்டோம். திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இலவச மின்சாரம். க்ஷீ 7000 கோடி விவசாய கடன் ரத்து போன்ற சலுகைகளை வழங்கிய தி.மு.க. ஆட்சி தொடர பாடுபடுவோம் ” என்றார்.

தமிழ்நாடு, புதுச்சேரி ஏப்ரல் 13ல் தேர்தல்


தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அசாமில் 2 கட்டங்களாகவும், நக்சல் பாதிப்பு நிறைந்த மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. இந்த 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அறிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக் காலம் மே மாதத்தில் முடிகிறது. தமிழகத்தில் மே 16, கேரளாவில் மே 23, புதுச்சேரியில் மே 28ம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. குறிப்பாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பணி முடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 99.85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மொத்த தொகுதிகள் 234
மொத்த வாக்காளர்கள் 4,59,50,620
வாக்குச்சாவடிகள் 54,016
மனு தாக்கல் துவக்கம் மார்ச் 19 (சனி)
மனு தாக்கல் கடைசி நாள் மார்ச் 26 (சனி)
மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 (திங்கள்)
வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30 (புதன்)
வாக்குப்பதிவு ஏப்ரல் 13 (புதன்)
வாக்கு எண்ணிக்கை மே 13 (வெள்ளி)
முதல்முறை என்.ஆர்.ஐ.க்கு வாக்குரிமை
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்திய தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்க வழிவகை செய்யப்பட்டது. அவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், தேர்தலின் போது இந்தியாவில் இருப்பவர்கள் அல்லது இந்தியாவுக்கு வந்து வாக்களிக்க வேண்டும். இந்த விதி முதல்முறையாக தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் அமல்படுத்தப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக் காலம் மே மாதத்தில் முடிகிறது. தமிழகத்தில் மே 16, கேரளாவில் மே 23, புதுச்சேரியில் மே 28ம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. குறிப்பாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பணி முடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 99.85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகள், விழாக்கள், உள்ளூர் விடுமுறைகள், பருவநிலை போன்ற பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி டெல்லியில் 01.03.2011 அன்று
கூறுகையில், ‘’தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். நக்சல்கள் பாதிப்பு அதிகம் உள்ள அசாமில் 2 கட்டங்களாகவும் மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கும். இந்த 5 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும்” என்றார்.
இதன்படி தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 3 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கை இந்த மாதம் 19ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இவற்றில் எஸ்.சி.க்களுக்கு 44, எஸ்.டி.க்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் 140 தொகுதிகளில் எஸ்.சி. 14, எஸ்.டி.க்கு 2 தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் எஸ்.சி.க்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்.டி.க்களுக்கு இங்கு தனித்தொகுதி இல்லை.
ஏப்ரல் 13ம் தேதி நடக்கும் தேர்தலில் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 16 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தலை அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள் தேர்தல் செலவை கண்காணிக்கும் பார்வையாளர்கள், தேர்தல் நாளன்று காலை முதல் வாக்குப் பதிவு முடியும் வரை கண்காணிப்பில் ஈடுபட சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அத்துடன் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நிலை மைக்கு ஏற்பவும், பதற்றம் நிறைந்த தொகுதிகளிலும் துணை ராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட உள்ளனர்.

பெட்ரோலுக்கான விற்பனை விரி குறைப்பு: லிட்டருக்கு ரூ.1.38 குறையும்: கலைஞர்


பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள விற்பனை வரி 30 சதவிகிதத்திலிருந்து மூன்று சதவிகிதம் குறைத்து 27 சதவிகிதம் மட்டுமே வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது என்றும், பெட்ரோலைப் பயன்படுத்து வோருக்கு லிட்டர் ஒன்றுக்கு இவ்வாறு விற்பனை வரியைக் குறைப்பதின் காரணமாக ரூ. 1.38 காசு குறையும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப பெட்ரோலின் விலையினை உயர்த்தி அறிவிக்கின்றன. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை மனதிலே கொண்டு தமிழக அரசு தன்னால் இயன்ற அளவிற்கு அவ்வப்போது அதற்குரிய விற்பனை வரியினை குறைத்து அறிவிப்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.


உதாரணமாக 2006ஆம் ஆண்டில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியபோது தமிழகத்திலே டீசலின் மீதான விற்பனை வரியை 25 சதவிகிதத்திலிருந்து 23.43 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்தோம். அதுபோலவே, 2008ஆம் ஆண்டு மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது தமிழக அரசு 23.43 சதவிகிதத்திலிருந்து 21.43 சதவிகிதமாக தனது விற்பனை வரியைக் குறைத்துக் கொண்டது. பெட்ரோலிய பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தும் போது, மாநில அரசுக்கான நிர்வாகச் செலவும் அதிகமாகிறது.


மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உயர்த்துவதால், நடுத்தர மக்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு பெட்ரோல் மூலம் தனக்குக் கிடைக்கக் கூடிய விற்பனை வரியை ஓரளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதை மனதிலே கொண்டு தற்போது பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள விற்பனை வரி 30 சதவிகிதத்திலிருந்து மூன்று சதவிகிதம் குறைத்து 27 சதவிகிதம் மட்டுமே வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது. இதனால் ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு 210 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும்.

பெட்ரோலைப் பயன்படுத்து வோருக்கு லிட்டர் ஒன்றுக்கு இவ்வாறு விற்பனை வரியைக் குறைப்பதின் காரணமாக ரூ. 1.38 காசு குறையும். இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும். இவ்வாறு விற்பனை வரி குறைக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் உள்ள 27 சதவிகிதம் பெட்ரோல் மீதான விற்பனை வரி என்பது தென் மாநிலங்களிலேயே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏப்ரல் 15 திருநங்கையர் தினம்: கலைஞர் ஆணை

அரவாணிகள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் நாள் திருநங்கையர் தினமாக கடைப்பிடிக்கப்படும் என, முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்திலுள்ள அரவாணிகளுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பை அளிப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் சிறப்பான முறையில் செயல்படுத்தவதற்காக அரவாணிகள் நல வாரியம் முதலமைச்சர் கருணாநிதியால், 15.4.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது.


அரவாணிகளைச் சிறப்பிக்கும் வகையில், இந்த ஆணை வெளியிடப்பட்ட ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாளை திருநங்கையர் தினம் என அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்தது.

அக்கோரிக்கையினை மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்து, ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாள் திருநங்கையர் தினம் ஆகக் கடைப்பிடிக்கப்படுமென முதலமைச்சர் கருணாநிதி 01.03.2011 அன்று ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞருக்கு கேரள மீன்வளத்துறை பாராட்டு

நாட்டுப்படகு மீனவர்களுக்கு லிட்டர் ஒன்று ரூ.25 விலைக்கு மண்ணெண்ணெய் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தையும், முதல் அமைச்சர் கருணாநிதியையும், கேரள மீன்வளத்துறை அமைச்சர் சர்மா பாராட்டினார்.


இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் அடைக்கலம், திருவனந்தபுரம் சென்று கேரள அரசு தலைமைச் செயலகத்தில் கேரள மீன்வளம் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எஸ்.சர்மாவை சந்தித்து, தமிழகத்திலிருந்து கேரளா பகுதிக்கு சென்று மீன் பிடித்து வரும் தமிழக நாட்டுப்படகு மீனவர்களுக்கும், மானிய விலையில் மாதம் 200 லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும், அதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும், கேரள மீன்வளத்துறை அலுவலர்களுக்கு கருத்துரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அப்போது, நாட்டுப்படகு மீனவர்களுக்கு லிட்டர் ஒன்று ரூ.25 விலைக்கு மண்ணெண்ணெய் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தையும், முதல் அமைச்சர் கருணாநிதியையும், கேரள மீன்வளத்துறை அமைச்சர் சர்மா வெகுவாக பாராட்டினார். அத்துடன் தமிழக அரசின் திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு கேரள மாநில நாட்டுப்படகு மீனவர்களுக்கும் மத்திய அரசின் உதவியோடு தமிழகத்தைப் போன்று மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.