கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 11, 2014

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்



மடியேந்தும் பிச்சைக்கெல்லாம் வாழ்வு கொடுத்தார்
அவர் மற்றவர் போல் வாழ்வதற்கு வசதி கொடுத்தார் !
அன்புத் தலைவர் கலைஞர் வாழிய வாழியவே !!

ஏழை புன்சிரிப்பே லட்சியம்

குடும்பம் அல்ல கழகம் தான் முக்கியம் என்றார்
ஏழை புன்சிரிப்பே தான் கொண்ட லட்சியம் என்றார் !
வறுமையில் வாடுவோரை வாழ்வித்த தலைவா வாழிய பல்லாண்டு !!

சூன் 3

சூன் 3


மனதிற்கு மலர்ச்சி நாள்
மக்களுக்கு மகிழ்ச்சி நாள்
வண்ணத்தமிழுக்கு வளர்ச்சி நாள்
தமிழினப் பகைவர்களுக்கு தளர்ச்சி நாள்

Saturday, August 24, 2013

அன்னைத் தமிழின் அரவணைப்பில்

02.08.1986 அன்று அ.தி.மு.க ஆட்சியின் அவலத்தால் ஏற்பட்ட வறட்சித் துயரை துடைத்திட மதுரை விரகனூரில் கழகத்தின் சார்பில் கஞ்சித்தொட்டி திறந்து வைப்பதற்காக தலைவர் கலைஞர் மதுரை வந்து பாண்டியன் ஹோட்டலில் தங்கி இருந்தார்.

அப்போது அருப்புகோட்டை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கபட்டிருந்தது (அருப்புக்கோட்டையில் ஐயா வே.தங்கப்பாண்டியன் அவர்களும், நெல்லையில் ஐயா ஏ.எல்.சுப்பிரமணியன் அவர்களும் கழக வேட்பாளர்களாக களம் கண்டார்கள்). அதனால் தலைவரை சந்தித்து தேர்தல் நிதி அளித்திட எனது தந்தையார் குரு. இராமச்சந்திரன் ஐந்து வயது கூட நிரம்பாத என்னையும் உடன் அழைத்து சென்றார்.

தலைவருக்கு அருகில் இருந்த ஐயா பி.டி.ஆர் அவர்கள் என் தந்தையை நன்கு அறிந்தவர் என்ற வகையில் தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். என் தந்தை எனது கையால் தலைவரிடம் நிதியை கொடுக்கச் செய்தார். எனது உண்டியல் சேமிப்பான ரூ. 20 ஐ தலைவரிடம் வழங்கினேன். இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப தலைவர் கேட்ட கேள்விகளுக்கு தயங்கமால் பதில் சொன்னேன். அந்த உரையாடல் இதோ 


தலைவர் : உன் பெயர் என்ன?


நான் : வைரமுத்து. வீட்ல வைரகுரு நு கூப்பிடுவாங்க 


தலைவர் : வைரமுத்தா? அப்ப பாட்டு எல்லாம் எழுதுவியா?


நான் : இல்ல. பாடுவேன்


தலைவர் : எங்க ஒரு பாட்டு பாடு 


நான் : பாளையம்கோட்டை சிறையினிலே            
           பாம்புகள் பல்லிகள் நடுவினிலே            
           அஞ்சாமல் இருந்தவர் யாரு            
           அந்த தலைவரின் புகழினை பாடு 


தலைவர் மகிழ்ந்து என் முதுகில் தட்டிக் கொடுத்தார். 05.08.1986 அன்று தேதியிட்ட முரசொலியில் வெளியான நிதி அளித்தோர் பட்டியலில் எனது பெயர் (இரா. வைரகுரு) இடம் பெற்றது. அந்த நாளிதழை என் வாழ்வின் அரிய பொக்கிசமாய் போற்றி பாதுகாக்கிறேன். 


என் தாத்தா அ.இரா. குருசாமி, ஆசிரியர் (ப.நி) அவர்களுக்கும் தலைவர்
என் தந்தை குரு. இராமச்சந்திரன், ஆசிரியர் (ப.நி) அவர்களுக்கும் தலைவர்
எனக்கும் தலைவர் 
என் மகள் வை.மு.கவின்மதி மற்றும் மகன் வை. மு. நற்குணநிதிக்கும் தலைவர்
அவர் தான் கலைஞர் ! 


பின் குறிப்பு : தலைவருடனான தனது முதல் சந்திப்பை பற்றி எழுதி என்னையும் எழுத தூண்டிய அண்ணன் சரவணகுமார் அவர்களுக்கு நன்றி...

Sunday, June 2, 2013

கலைஞர் 90 - வரலாறு

ஆகலாம் தொண்ணூறு
ஆற்றலிலோ பதினாறு
அரசியலில் வரலாறு
அகிலமே, அவருக்கு வாழ்த்து கூறு

#இன்னும் ஒரே நாள்...

கலைஞர் 90 - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு 
சொந்தப் பணத்தில் ரூ.1 கோடி நன்கொடை அளித்து 
தமிழ் வளர்ச்சிக்கு வழி செய்த 
தன்னிகரற்ற தலைவரே வாழ்க வாழ்க

Saturday, June 1, 2013

கலைஞர் 90 - பொற்கிழி

தமிழில் சிறந்த படைப்புகள் உருவாகவும்
தரமான படைப்பாளிகளை ஊக்குவிக்கவும்
வருடந்தோறும் பொற்கிழி வழங்கிட 
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்திற்கு 
"ஒரு கோடி ரூபாய்" நன்கொடை அளித்த 
ஒல்காப் புகழ் தலைவரே வாழிய பல்லாண்டு

#இன்னும் 3 நாட்கள்..