கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 11, 2014

தமிழ் வித்தகர் கலைஞருக்கு இணை ஏது

எத்தனை தலைவர்கள் இருந்தாலும்
தமிழ் வித்தகர் கலைஞருக்கு இணை ஏது
சேவையும் தியாகமும் தீரமும் வீரமும்
இவர் போல் எவருக்கும் கிடையாது !
வாழ்வாங்கு வாழவும் கலைஞரே ஆளவும்
வாழ்த்துவோமே வாழ்த்துவோமே !!!

வாழிய கலைஞர் நற்றொண்டு

வாட்டும் சிறையில் நலிந்தாலும்
கொடும் வஞ்சகர் கொடுமையில் மலிந்தாலும்
காட்டிக் கொடுப்போர் தொடர்ந்தாலும்
கடமை கண்ணியம் காக்க உயிர் வாழும்
வாழிய கலைஞர் நற்றொண்டு
அவர் வாழ்க வாழ்கவே பல்லாண்டு !


பகுத்தறிவென்னும் பாசறை

பகுத்தறிவென்னும் பாசறையில்
நடை பழகி எழுந்த செம்பருதி
அவர் வகுத்த திட்டம் தமிழ்நாட்டின்
வாழ்வு செழித்தது வளம் பெருகி
சோதனை ஆயிரம் சூழ்ந்தாலும்
அதை துணிந்து வெல்லும் மனஉறுதி !
வாழிய கலைஞர் வாழியவே !!

வாழிய கலைஞர் வாழியவே


வறியவருக்கும் வாழ்வளிக்கும்
கொடும் வஞ்சகருக்கும் இடமளிக்கும்
உரியவருக்கு பயனளிக்கும்
நல்உத்தமருக்கு துணையிருக்கும்
மேடையில் வீசிடும் பூங்காற்று
அவர் பேச்சுக்கள் எல்லாம் தேன் ஊற்று
வாழிய கலைஞர் வாழியவே...


நூறாண்டு வாழவும் கலைஞரே ஆளவும் வாழ்த்துவோமே வாழ்த்துவோமே !!!



கன்னித்தமிழில் கனல் பறக்கும்
புதுக்கவிதை நடையில் புகழ் மணக்கும்
கலைஞர் எழுத்தில் கலந்திருக்கும்
உயர் கருத்துசெரிவில் நயம் இருக்கும் !
சித்திரை மாதத்து முழுநிலவு என
ஜொலிக்கும் கலைஞர் மொழியழகு !!
நூறாண்டு வாழவும் கலைஞரே ஆளவும்
வாழ்த்துவோமே வாழ்த்துவோமே !!!

தொல்லைகளுக்கிடையே முல்லை சிரிப்பு

தொல்லைகளுக்கிடையே முல்லை சிரிப்பு
நீ தொட்ட துறைகள் எல்லாம் தேன் சுரப்பு
எல்லையே இல்லாதது உன் சிறப்பு
தலைவா ஜெயாவை விரட்டுவது உன் பொறுப்பு !
வாழிய தலைவா வாழிய பல்லாண்டு

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்



மடியேந்தும் பிச்சைக்கெல்லாம் வாழ்வு கொடுத்தார்
அவர் மற்றவர் போல் வாழ்வதற்கு வசதி கொடுத்தார் !
அன்புத் தலைவர் கலைஞர் வாழிய வாழியவே !!