கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

சிக்குகிறது பி.ஜே.பி. 2001 முதல் 2009 வரை விசாரிக்க ஒரு நபர் கமிஷன் - மத்திய அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு


2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுப்படி - 2001 ஆம் ஆண்டிலி ருந்து தொலைத் தொடர் புத் துறை கொள்கை மற்றும் பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து விசாரிக்க ஒரு நபர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி வி.சிவராஜ் பாட்டீல் இதுகுறித்து ஆய்வு செய்து 4 வாரங் களில் அரசுக்கு அறிக்கை அளிப்பார் என்று மத் திய தொலைத் தொடர் புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

அதன் விவரம் வரு மாறு:-

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் சி.பி.அய். விசா ரணை மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஒதுக்கீடு தொடர் பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் மீண்டும் நேற்று முன்தினம் விசா ரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.அய். தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், சி.பி.அய். விசா ரணையை உச்சநீதிமன் றம் கண்காணிப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித் தார்.

மேலும் இந்த விசா ரணை குறித்து வரும் பிப்ரவரி மாதம் நீதி மன்றத்தில் சி.பி.அய். அறிக்கை தாக்கல் செய் யும் என்றும் அவர் கூறி னார்.

இதனைக்கேட்ட நீதிபதிகள், பா.ஜ.க. ஆட்சியில் இருந்த 2001 ஆம் ஆண்டு ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் நடந் தது என்ன என்பதை சி.பி.அய். விசாரித்தறிய வேண்டும் என்றனர். பா.ஜ.க. ஆட்சியில் இருந்த 2001 ஆம் ஆண்டு முதலே இருந்த விசாரணையை நடத்தினால்தான் விசா ரணை முழுமையான தாக இருக்கும் என்று தெரி வித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்; கடந்த 2001 ஆம் ஆண்டு முதல், அதா வது பா.ஜ.க. ஆட்சிக் காலம் முதலே ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீடுபற்றி சி.பி.அய். முழுமையாக விசாரிக்க வேண் டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசா ரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க, உச்சநீதிமன் றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.சிவராஜ் பாட் டீல் தலைமையில் ஒரு நபர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளதாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

புதுடில்லியில் 09.12.2010 அன்று அவர் இதுகுறித்து செய் தியாளர்களிடம் கூறிய தாவது:-

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் பற்றி விசாரணை நடத்துவதற்காக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி. சிவராஜ் பாட்டீல் தலை மையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள் ளது.

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டதில் தேவையான விதிமுறைகள் பின் பற்றப்பட்டதா? என்பதை இந்தக் கமிஷன் ஆராயும். தொலைத் தொடர்புத் துறை வகுத்த கொள்கைகள், நடைமுறைகள் மீறப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் இந்தக் கமிஷன் விசாரணை நடத்தும்.

மேல் நடவடிக்கை குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்! ஒரு நபர் கமிஷன் தனது விசாரணை அறிக்கையை 4 வாரங்களுக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யும். அறிக்கை கிடைத்ததும், தவறு நடந்து இருந்தால், எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி விரிவான ஆய்வை கமிஷன் மேற்கொள்ளும். மிகக் குறுகிய காலத்தில் சுயேச்சையான அமைப்பு ஒன்று பாரபட்சமற்ற முறையில் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கோருவது போல் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட் டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மற்றவர் களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி முடிப்பதற்குள் பல ஆண்டுகள் ஆகிவிடும். தகுதியில் லாமல் லைசென்சு பெற்ற நிறுவனங்கள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீசு அனுப்புவது போன்ற பணி களை இந்தக் கமிஷன் மேற் கொள்ளாது. அது போன்ற நடவடிக்கைகள் தனியாக மேற்கொள்ளப்படும்.

கமிஷன் செயல்படும் முறை பற்றி அதன் தலைவருடன் விவாதித்து விரைவில் இறுதி செய்யப்படும். - இவ்வாறு மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment