கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை திமுக எடுத்துக் கொள்ளும் - முதல்வர் கருணாநிதி பேச்சு


கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் திருச்சபைகள் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை அடையாறு காந்தி நகரில் 23.12.2010 அன்று நடந்தது.
விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு கேக் வெட்டி, நல உதவிகள் வழங்கி பேசியதாவது:
இது கிறிஸ்துவ பெருவிழாவா அல்லது கோரிக்கை மாநாடா என்று வியப்புறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மழை வரும் என்று எதிர்பார்த்து முன்னெச்சரிக்கையாக பந்தல் அமைத்தீர்கள். ஆனால், மழை வராமல் இந்த விழாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறது. என்னை எஸ்றா சற்குணம், கிறிஸ்துமஸ் தாத்தா என்றார். பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, நான் கேட்டதெல்லாம் கொடுத்ததாகவும், திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டபோது, எடுத்துக்கொண்டதாகவும் கூறினர்.
இஸ்லாமிய சமுதாயத்துக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அறிவித்த நிலையில், அதைப்போல கிறிஸ்துவ சமுதாயத்துக்கும் அறிவித்தபோது பெருமகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்த்தது உண்டு. பொதுவாக கொடுத்தது குறைவு என்பார்கள். ஆனால், கொடுத்தது வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் கூறிய காரணத்தை புரிந்ததால் அதை ஏற்றேன். அந்த குழு தலைவர் ஜனார்த்தனம் ஏற்க தயங்கினார். உண்மை நிலைபுரிந்து அதை நாங்கள் ஏற்றோம். நீங்கள், கேட்டதெல்லாம் கொடுப்போம். திருப்பி தந்தாலும் ஏற்போம். நீங்கள் சொன்னபடி செய்வோம், நடப்போம் என்பதற்கு இந்த அரசு சான்றாக விளங்குகிறது.
இங்கே சில கோரிக்கை வைத்தார்கள். அதை நாங்கள் அலட்சியப்படுத்துபவர்கள் அல்ல. ஸ்டாலின் கூறியது போல, இந்த சமுதாயத்துடன் இன்று நேற்றல்ல நீண்ட கால தொடர்பு எங்களுக்கு உண்டு. நான் சார்ந்துள்ள அரசியல் இயக்கம், ஒரு கட்சி இயக்கம் அல்ல. ஒரு சமுதாய இயக்கம். எங்களுக்கு வழிகாட்டியவர்களில் பெரும் பகுதியினர் கிறிஸ்துவ சமுதாயத்தினர். அதில் ஒருவர் ஏ.டி.பன்னீர் செல்வம். இங்கே மூன்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இதை நிறைவேற்றும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசை ஆட்டி வைப்பவன் என்று இங்கே கூறினார்கள். நான் யாரையும் ஆட்டி வைப்பவனும் அல்ல, ஆடுபவனும் அல்ல.
நீங்கள் என்னை ஆட்டி வைப்பதால், நான் ஆட தயாராக இருக்கிறேன். கிறிஸ்துவ பெரியார்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டை நன்றி உணர்வோடு நினைக்கும் இயக்கம் இது. அதனால்தான், அண்ணா நடத்திய உலக தமிழ் மாநாட்டின்போது பல கிறிஸ்துவ பெரியார்களுக்கு கடற்கரையில் சிலைகள் வைக்கப்பட்டன. அவர்களில் ஒருவர் கால்டுவெல். அவர் நெல்லையில் வாழ்ந்தார். அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சாதாரணமல்ல. அடுத்த மாதம் அவரது நினைவு விழா நெல்லையில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள இருக்கிறேன். அவர் வாழ்ந்த வீடு நினைவிடமாக மாற்றப்படுகிறது. அவருக்கு சிலையும் திறக்கப்படுகிறது.
நீங்கள் என்னை ஆட்டி வைப்பதால், நான் ஆட தயாராக இருக்கிறேன். கிறிஸ்துவ பெரியார்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டை நன்றி உணர்வோடு நினைக்கும் இயக்கம் இது. அதனால்தான், அண்ணா நடத்திய உலக தமிழ் மாநாட்டின்போது பல கிறிஸ்துவ பெரியார்களுக்கு கடற்கரையில் சிலைகள் வைக்கப்பட்டன. அவர்களில் ஒருவர் கால்டுவெல். அவர் நெல்லையில் வாழ்ந்தார். அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சாதாரணமல்ல. அடுத்த மாதம் அவரது நினைவு விழா நெல்லையில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள இருக்கிறேன். அவர் வாழ்ந்த வீடு நினைவிடமாக மாற்றப்படுகிறது. அவருக்கு சிலையும் திறக்கப்படுகிறது.
இங்கே தலித் மக்கள் கிறிஸ்துவராக மதம் மாறியிருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய எல்லா உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டது நியாயமானது. யாராலும் மறுக்க முடியாது. இதை நாடாளுமன்றத்தில் எடுத்து சொல்லி, நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை திமுக எடுத்துக்கொள்ளும். காங்கிரஸ் துணையோடு இதை நிறைவேற்றி வைப்போம்.
சிறுபான்மை மக்களுக்கு தேவையான எல்லா காரியங்களையும், நன்மைகளையும் பெற்றுத்தர நான் என்னையே ஈடுகொடுக்க தயாராக இருப்பவன். போராடி பெறவும் தயங்காதவன். கோரிக்கை நிறைவேற்ற எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவன். அரசாங்க பொறுப்பில் இருந்தால், அதிகாரத்தை பயன்படுத்தவும், அரசின் தயவை நாடவேண்டியது இருந்தால் அணுகுமுறையை பயன்படுத்தியும் நிறைவேற்றும் நினைப்பு உடையவன்.
இரண்டிலும் முடியாவிட்டால், போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்றால் அதற்கும் தயாராக உள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் தவறாக கருதக் கூடாது. கருணாநிதி கிறிஸ்துவ மக்களை போராட்டத்துக்கு அழைக்கிறார் என்று கூறலாம். என்னை போராட்டத்துக்கு தலைமை தாங்க கிறிஸ்துவ மக்கள் அழைக்கிறார்கள் இதுதான் உண்மை. எனவே, நான் தயங்க மாட்டேன். அவர்கள் கோரிக்கையை நியாயமான கட்டளையாக நினைக்கிறேன். நியாயத்துக்காக கடைசிவரை குரல் தந்து இழிவு, பழி வந்தாலும் கவலைப்படாமல் சிலுவையை சந்தித்தார் இயேசு. அந்த திடகாத்திர நெஞ்சத்தை, எதையும் தாங்கும் உள்ளத்தை நாம் பெறுவோம். அந்த வெற்றியை இந்த விழாவில் பெறுவோம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment