கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

உயர்நீதிமன்ற நீதிபதி மிரட்டப்பட்ட பிரச்சினை - முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் விளக்கம்


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மிரட்டப்பட்ட தாக கூறப்படும் பிரச்சி னையில், நான் எந்த உண் மையையும் மறைக்க வில்லை என்று உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு மோசடி வழக் கில் கைது செய்யப்பட் டிருந்த சி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி விசாரணை நடந்தது. அவர்கள் சார் பில் வழக்கறிஞரும், பார் கவுன்சில் தலைவருமான ஆர்.கே.சந்திரமோகன் ஆஜரானார். அப்போது அவர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். ரகுபதியை மிரட்டிய தாக புகார் எழுந்தது.

ஜாமீன் கோரியுள்ள கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் ஆகியோர் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ஆ.இராசா வின் குடும்ப நண்பர்கள் என்றும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கும்படி வழக்கறிஞர் சந்திர மோகன் கேட்டதாக வும், ஒரு செல்போனை கொடுத்து, அதில் அமைச் சர் ராசா லைனில் இருப் பதாகவும், அவருடன் நீதிபதி பேச வேண்டும் என்று சந்திரமோகன் மிரட்டியதாகவும், தான் அதற்கு மறுத்து விட்ட தாகவும் நீதிபதி ரகுபதியே தெரிவித்து இருந்தார்.

இது குறித்து, அப் போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல்.கோகலே வுக்கு, நீதிபதி ரகுபதி கடிதம் எழுதினார்.

அப்போது உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த கே. ஜி.பாலகிருஷ்ணன் இது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோக லேவிடம் விளக்கம் கேட் டார். நீதிபதி கோகலே வும் தனது விளக்கத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பினார்.

இந்த நிலையில், கடந்த வாரம் முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணைய தலை வராகவும் பணியாற்றி வரும் கே.ஜி.பாலகிருஷ் ணனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட் டனர். அதற்கு அவர், நீதி பதி கோகலே அனுப்பிய அறிக்கையில், நீதிபதி ரகுபதியை மிரட்டிய தாக முன்னாள் அமைச் சர் ராசாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அவரது இந்த தக வலை, தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யாக பணியாற்றி வரும் சென்னை உயர்நீதிமன் றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கோகலே மறுத் தார். தான் அனுப்பிய அறிக்கையுடன் இணைத்து அனுப்பிய நீதிபதி ரகு பதியின் கடிதத்தில், இரா சாவின் பெயர் 2ஆவது பாராவிலும், 3ஆவது பாராவிலும் 2 இடங் களில் உள்ளது. ஆகவே இராசாவின் பெயரை நீதிபதி ரகுபதி குறிப்பிட வில்லை என்று நீதிபதி பாலகிருஷ்ணன் கூறுவது தவறு என்று கோகலே ஒரு அறிக்கை மூலம் விளக்கம் அளித்து இருந் தார்.

நீதிபதி கோகலேயின் அறிக்கை குறித்து நேற்று முன்தினம் அய்தராபாத் சென்றிருந்த உச்சநீதிமன் றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ் ணனிடம் செய்தியாளர் கள் கேட்டனர். அதற்கு அவர், நீதிபதி ரகுபதி தனக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று தான் தெரிவித்தேன். கோகலே சிறந்த நீதிபதி. அவர் சரியான அறிக் கையைத்தான் எனக்கு அனுப்பினார் என்று தெரிவித்தார்.

நேற்றும் இதுகுறித்து பாலகிருஷ்ணன் விளக் கம் அளித்தார். அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: நீதிபதி கோகலே அனுப்பிய அறிக்கையை நான் முழுவதும் படித் தேன். அதில் அமைச்சர் ஆ.ராசா பெயர் இடம் பெறவில்லை. அவர் நீதி பதியை மிரட்டியதாக கூறப்படும் பிரச்சினை யில் நான் எந்த உண்மை யையும் மறைக்கவில்லை. உண்மை திரித்து கூறப் படக்கூடாது, நீதித்து றையை இதில் தொடர்பு படுத்த முகாந்திரம் இருக் கக்கூடாது என்பதற்காக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சட்ட அமைச்சர் வீரப்ப மொய் லிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ஆம் தேதியே அனுப்பி விட் டேன். இவ்வாறு பால கிருஷ்ணன் அறிக்கை யில் தெரிவித்து உள்ளார்.

கே.ஜி.பாலகிருஷ்ணனின் இந்த அறிக்கை குறித்து, நீதிபதி கோகலேவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் நேரடி யாக பதில் அளிக்காமல், இது தொடர்பாக நான் ஏற்கெனவே அறிக்கை அளித்து விட்டேன் என்று மட்டும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment