முதலமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி யில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலப்புத்தாண்டு 2011 புலரும் திருநாள் ஜனவரித் திங்கள் முதல் நாள் உலகம் முழுவதும் மிகுந்த எழுச்சி யோடு கொண்டாடப்படுகிறது.
சென்னையில் பிரம்மாண் டமான வடிவில் தமிழக சட்டப் பேரவை, தலைமைச் செயலக வளாகம் புதிய கட்டடம் திறப்பு விழா, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மகிழ கோவையில், உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு, சென்னையில், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா, மாமன்னர் ராசராச சோழன் கட்டிய, தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு நிறைவு விழா, சென்னையின் மய்யப் பகுதியில், செம்மொழிப்பூங்கா தொடக்க விழா என்பனவாக தமிழர் வரலாற்றில் என்றும் நின்று நிலவிடும் அரிய நிகழ்வுகளை வரலாற்றில் பதித்துவிட்ட பெருமிதத்தோடு 2010 ஆம் ஆண்டு நம்மிடம் விடை பெற-வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு கட்டியம் கூறியபடி 2011 ஆம் ஆண்டு நம்மை எதிர்நோக்குகிறது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் கதா நாயகன் எனப் பாராட்டி வரவேற்கப்பட்ட தேர்தல் அறிக்கை யில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி; அந்த வாக்குறுதிகளுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவுடன் வாரம் 5 முறை முட்டை கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, திருமணத் திட்டங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, அவசரகால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், நலமான தமிழகம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இஸ்லாமியர்க்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு, அருந்ததியர்க்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு, மாற் றுத் திறனாளிகள் நலன் காத்திடத் தனித் துறை, அருந்ததியர் நலவாரியம் உட்பட உழைப்பாளர் குடும்பங்கள் நலம் பெற 33 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் எனப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது இந்த அரசு.
இந்த அடிப்படையில், இந்தப் புத்தாண்டிலும் தொடர்ந்து தொண்டாற்றி தமிழர் நலம்காத்து, தமிழகத்தின் வளம் பெருக்கி என்றும் வெற்றிகள் குவித்திடுவோம் எனும் உணர் வோடு தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாள் நல் வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
- இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment