கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: 2001-2008 வரை விசாரணை நடத்துக! - சி.பி.அய்.க்கு உச்சநீதிமன்றம் ஆணை


2001 ஆம் ஆண்டு முதல் 2008 வரையிலான அனைத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்து, விசாரிக் குமாறு சி.பி.அய்.க்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர், கடந்த நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசா ரணை நடத்த நாடாளு மன்ற கூட்டுக்குழு அமைக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வந்தன.

ஆனால், ஸ்பெக்ட் ரம் விவகாரத்தில் நாடா ளுமன்ற பொதுக் கணக் குக் குழு தற்போது நடத்தி வரும் விசார ணையே போதுமானது என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாகத் தெரி விக்கப்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததால், எதிர்க்கட்சி களின் அமளி காரண மாக நாடாளுமன்றத் தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப் பட்டு வந்தன.

இந்நிலையில் காங் கிரஸ் எம்.பி.க்கள் கூட் டத்தில் திருமதி சோனியா காந்தி பேசும்போது கூட்டுக்குழு விசாரணை கிடையாதென்று திட்ட வட்டமாக அறிவித்தார்.

மேலும் 2001-2009 வரை நடந்த அலைக் கற்றை ஒதுக்கீடு பற்றி விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி பதி வி.சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட் டது.

உச்சநீதிமன்றம் கண்காணிக்கும்

இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.அய். நடத்தி வரும் விசாரணையை, உச்சநீதி மன்றம் கண்காணிப் பதா - இல்லையா என் பது தொடர்பான மனு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர டங்கிய அமர்வு முன்னி லையில் 16.12.2010 அன்று விசார ணைக்கு வந்தது.

அப்போது ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீடு தொடர் பாக, சி.பி.அய். மற்றும் அமலாக்கப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், வருமான வரித்துறையினர், தங்களது புலனாய்வு அறிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகத் துக்கு வழங்கவேண்டும் என்றும், உள்துறை அமைச்சகம் அதனை சி.பி.அய்.யிடம் அளிக்க வேண்டும் என்றும் நீதி பதிகள் தெரிவித்துள்ள னர். அத்துடன் முதல் கட்ட விசாரணை விவ ரங்களை, மூடி முத்தி ரையிட்ட உறையில் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும், சி.பி.அய். மற்றும் அம லாக்கப்பிரிவினருக்கு நீதிபதிகள் உத்தரவிட் டனர்.

ஸ்பெக்ட்ரம் தொடர் பான விசாரணைகளை உச்சநீதிமன்றம் கண் காணிக்கலாம் என மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதால், தனியாக விசாரணைக் குழு தேவையில்லை என் றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment