கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 19, 2010

89வது பிறந்தநாள் நிதியமைச்சர் அன்பழகனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து







நிதியமைச்சர் அன்பழகனின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் கருணாநிதி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக நிதியமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகனுக்கு இன்று (19.12.2010) 89வது பிறந்த நாள். கீழ்ப்பாக்கம் கார்டன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருடன் அன்பழகன் கேக் வெட்டி கொண்டாடினார். இதையொட்டி கீழ்பாக்கம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான திமுக தொண்டர்கள் இன்று அதிகாலையிலேயே குவிந்தனர். முதல்வர் கருணாநிதி காலை 9.30 மணிக்கு அவரது வீட்டுக்கு நேரில் சென்று பூச்செண்டு கொடுத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மதிவாணன், டி.ஆர்.பாலு எம்.பி., சற்குணபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு, மேயர் மா. சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தொ.மு.ச. பேரவை தலைவர் செ.குப்புசாமி, பொதுச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி, தொழிற்சங்க நிர்வாகிகள் பரமசிவம், சுகுமாரன், செல்வராஜ், கணபதி, கிருஷ்ணன், குமாரசாமி, சடாட்சரம் பேரூர் நடராஜன், பி.டி.சி.பாலு, சிட்டிபாபு நடராஜன், சுப்பிரமணியம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடம், எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களில் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அய்யா நினைவிடத்தில்

இன்று (19.12.2010) பேராசிரியர் க. அன்பழ கனுக்கு 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆகும். இன்று காலை 7.30 மணிக்கு சென்னை பெரி யார் திடலுக்கு பேரா சிரியர் அவர்கள் வந்தார். அவரை திராவிடர் கழ கத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

நேராக அனைவரும் அய்யா நினைவிடத் திற்கு வந்தனர். அய்யா நினைவிடத்தில் தி.மு.க., தி.க. தோழர்கள் புடை சூழ பேராசிரியர் க. அன்பழகன் அய்யா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தினார்.

தமிழர் தலைவர் பொன்னாடை - வாழ்த்து

அதன்பின் அய்யா நினைவிடத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேராசிரியர் அவர்களுக் குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார். கழக டைரி மற்றும் கழக புதிய வெளியீடுகளையும், பழங்களையும் பேராசிரி யருக்கு வழங்கினார். பேராசிரியர் அன்புடன் பெற்றுக் கொண்டார்.

தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு நா. வீராசாமி, தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், தி.மு.க., அமைப்புச் செயலாளர் பெ.வீ. கல் யாணசுந்தரம், தி.மு.க., துணைப் பொதுச் செய லாளர் சற்குணபாண் டியன், தி.மு.க., தலைமைக்கழக செயலாளர் துறைமுகம் காஜா, திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, திராவிடர் கழக பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, எழும்பூர் பகுதி தி.மு.க., செயலாளர் ஏகப்பன் மற்றும் திரளான தோழர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பேராசிரியர் அவர் கள் தமிழர் தலைவரி டம் விடை பெற்றுச் சென்றார். அண்ணா நினைவிடத்தில் தோழர் கள், தோழியர்கள் புடை சூழ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தினார் பேராசிரியர்.



No comments:

Post a Comment