கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

முதல்வருடன் கிறிஸ்தவ பேராயர் சந்திப்பு


தமிழக முதல்வர் கருணாநிதியை 16.12.2010 அன்று அவரது இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மரியாதை நிமித்தமாக சந் தித்து பேசினார். அவரு டன் சட்டமன்ற உறுப் பினர் ரவிக்குமார் இருந்தார்.
அதேபோல கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் எஸ்.இனிக்கோ இருதயராஜ் சந்தித்து இந்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். அவருடன் இந்திய சமூக நீதி இயக் கத் தலைவர் பேரா யர் எஸ்ரா சற்கு ணம், சென்னை மயிலை உயர்மன்ற மா வட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, சி.எஸ்.ஐ. பேராயர் தேவசகாயம், ஏ.ஜி. சபை போதகர் பி.மோகன், பென்தகொஸ்தே திருச்சபையின் தலைவர் சார்லஸ் பின்னி ஜோசப், தமிழ்நாடு சிறுபான்மை மேம்பாட்டு கழக தலைவர் ஆ.சேவியர் அருள்ராஜ், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை, வசந்தி ஸ்டான்லி எம்.பி ஆகியோர் உடன் இருந்தனர்.

மு.க.தமிழரசு உடல் நலம் - முதல்வர் விசாரித்தார் :

முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு உடல் நலமின்றி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்வர் கருணாநிதி 16.12.2010 அன்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப் படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் இரா.வெங்கடாசலம், தமிழரசின் மனைவி மோகனா தமிழரசு உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment