கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, December 31, 2010

2 ஜி அலைக்கற்றை ஆளாளுக்கு முரணாகப் பேசுவது ஏன்? தூத்துக்குடியில் கி.வீரமணி கேள்வி


2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச் சினையில், ஆளாளுக்கு ஒரு தொகை சொல் வதிலேயே முரண்பாடு என்பதை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆதாரத்துடன் விளக்கி னார்.
தூத்துக்குடியில் நேற்று (30.12.2010) நடை பெற்ற பொதுக்கூட்டத் தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தமது உரை யில் குறிப்பிட்டதாவது:

ஆளாளுக்கு ஒன்று

தி.மு.க அரசுக்கு எதிராக 2 ஜி ஸ்பெக்ட் ரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வரும் பார்ப்பன ஊடகங் களின் சூழ்ச்சி பற்றியும், பொதுக்கூட்டத்தில் பல்வேறு கருத்துகளை தமிழர் தலைவர் எடுத் துக் கூறினார். சி.ஏ.ஜி அறிக்கையில் கூறியுள்ள படி ரூ.1,76,000 கோடி என்கின்றார் பொதுக் கணக்குத் துறை தலைமை அதிகாரி. அருண் ஷோரி ரூ.30,000 கோடிதான் என்கிறார். ஆடிட்டர் ஜெனரல் கூறும்போது ரூ.57,600 கோடி என் கிறார். ஜெயலலிதா ரூ.1,80,000 கோடி என் கிறார். தா.பாண்டியன் ரூ.2,00,000 கோடி என் கிறார். இதுபோல் ஆளா ளுக்கு ஒன்று சொல் கிறார்கள். இன்னும் தேர்தல் வந்தால் இது ரூ.5,00,000 கோடியாகக் கூட சொல்லுவார்கள்.

பித்தலாட்டம்

இது அத்தனையும் பித்தலாட்டம்தான்! கொடநாட்டில் மாதக் கணக்கில் ஓய்வெடுத்து உட்கார்ந்துகொண்டு மக்களுக்கே சம்பந்த மில்லாது இருக்கின்ற இந்த அம்மையார், கலைஞர் ஏலகிரி சென் றதை குற்றம் சாற்று கிறார். இரவில்கூட தலை மைச் செயலகம் சென்று பணியாற்றக்கூடிய வர்தான் முதலமைச்சர் கலைஞர். தி.மு.க வை போல் கட்டுப்பாடான அரசியல் கட்சியை இந்த உலகத்திலேயே பார்க்க முடியுமா? பி.ஜே.பி மாதிரி அல்ல. தி.மு.க கட்டுப்பாடா னது இந்த ஆட்சியை யாரும் தவிர்க்க முடி யாது. 2011இல் இந்த ஆட்சி வரப்போவது உறுதி என்றுகூறி, மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறினார்.

பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் பாலவிநாயகர் கோவில் தெருவில் 30.12.2010 அன்று மாலை 6.00 மணிக்கு தி.மு.க அர சுக்கு எதிராக 2 ஜிஸ் பெக்ட்ரம் ஒரு கரு வியா? என்ற தலைப் பில் மாபெரும் விளக் கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு தி.க. மண்டலத் தலைவர் பொறியாளர் சி.மனோ கரன் தலைமை வகித் தார். தி.க. மாவட்டத் தலைவர் பேரா. இர. கனகராசு வரவேற்புரை வழங்கினார். மண்டலச் செயலாளர் மா. பால் ராசேந்திரம் மாவட்ட தி.க.செயலாளர் மு. முனியசாமி தி.க பொதுக் குழு உறுப்பினர் தி.ப. பெரியாரடியான் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். திராவிடக்கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி எம்.ஏ. பி.எல். அவர்களும் திரா விடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக் கரசு அவர்களும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். பொதுக் கூட்டத்தில் மாவட்டத் துணை தலைவர் பொ.செல்வ ராஜ், நகர தி.க செய லாளர் சி.மணிமொழி யன் ப.க. செயலாளர் ப.பழனிச்சாமி, பொதுக் குழு உறுப்பினர் ச.சக்தி வேல், நகர ப.க. செய லாளர் சு.புத்தன், விளாத் திகுளம் ஒன் றிய தி.க தலைவர் த. நாகராஜன், மாவட்ட இளைஞரணி தலை வர் ஆ. மாரிமுத்து மாவட்ட இளைஞ ரணி செயலாளர் க.சு. மணி, மாவட்ட மாண வரணி தலைவர் சு.கண் ணன், நகர ப.க. துணைத் தலைவர் சு.சுப்புராஜ் மகளிர் பாசறை அமைப்பாளர் பி.சாந்தி நகர துணைச் செயலாளர் த.பெரி யார்தாசன் உமரிக் காடு தி.க தலை வர் சி.சுந்தரேசன், திருவை ஒன்றிய தலை வர் திருமலைக்குமரேசன் திருவை ஒன்றியச் செய லாளர் பொன்னை நாரா யணன் வழக்கு ரைஞர் என்.செல்வம் முடுக் குகாடு புவனேசு வரன் ஆகிய தோழர் கள் கலந்து கொண் டனர். நிறைவாக தி.க. தலைவர் இரா. ஆழ் வார் நன்றி கூறினார்

No comments:

Post a Comment