கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

உள்நோக்கத்தோடு செய்தி வெளியிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை: ராஜாத்தியம்மாள்


செய்தியாளர்கள் சிலர், ராஜாத்தி அம்மாளிடம் 16.12.2010 அன்று சில மீடியாக்களில் வந்த ஒரு செய்தி பற்றி விளக்கம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஏற்கனவே, எனக்கு சொந்தமான “ராயல்” நிறுவனத்தில் பணியாளராக இருந்து, தற்போது பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்து கொண்டிருக்கும் சரவணன் என்பவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள “வோல்டாஸ்” நிறுவனம் குத்தகைக்கு இருந்த இடத்தை, அந்த இடத்தின் உரிமையாளரிடம் “பவர் ஆப் அட்டர்னி” என்ற முறையில் வாங்கி, மலேசிய நாட்டு தொழில் அதிபர் டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கு விற்றிருப்பதாக தெரிகிறது.
இந்த, டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கும் எங்கள் ராயல் நிறுவனத்துக்கும் எந்த விதமான கொடுக்கல் வாங்கலோ, தொடர்போ கிடையாது. ஆனால், அந்த இடத்தை நான் வாங்கியதைப் போல சில மீடியாக்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை உள்நோக்கத்தோடு வெளியிட்டு வருகின்றன. அவர்கள் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்களானால், அவர்கள் மீது வக்கீல்கள் மூலமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதாக இருக்கிறேன்.
இவ்வாறு ராஜாத்தி அம்மாள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment