கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

சிறுபான்மை மக்கள் மீது அப்பட்டமான துவேஷமும் காழ்ப்புணர்வும் காட்டும் சோ, சு.சாமிகள்! - தமிழ்மய்யம் ஜெகத்கஸ்பார் கடும் தாக்கு


சிறு பான்மை மக்கள் மீது அப்பட்டமான துவேஷமும், காழ்ப்புணர்வும் காட்டும் சோ.ராமசாமி, சுப்பிரமணிய சாமிகளை ஏதோ அப்பழுக் கற்ற நடுநிலையான கருத்தா ளர்கள்போல் ஆங்கில ஊடகங்கள் காட்டிவருவது மிகப் பெரும் அறிவு மோசடி என்பதை அடையாளப்படுத் திக் காட்டினார் தமிழ்மய்யம் க.ஜெகத்கஸ்பார்.

செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

" தேசிய புலன் விசாரணை அமைப்பான சி.பி.அய். (CBI) 15.12.2010 அன்று காலை 9.30 மணி தொடங்கி எமது தமிழ் மய்யம் அலுவலகத்தில் தேடுதல் நடத்தியது. 2ஜி (2G) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் (spectrum) நிகழ்ந்ததாக பேசப்படும் ஊழல் பணம் தமிழ் மய்யத்திற்கும் வந்ததா என்பதை அறியவே இத் தேடுதல் என எமக்கு சொல்லப் பட்டது. 2ழு அலைக்கற்றை சர்ச்சைகளுக்கும் தமிழ் மய்யத்திற்கும் அதன் நிருவாக அறங்காவலர் அருட்திரு.ஜெ கத்கஸ்பார் அவர்களுக் கும் எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவிக்கிறோம். தமிழ் மய்யம் மற்றும் அருட்திரு.ஜெகத் கஸ்பார் மீது அத்தகைய அய்யப்பாடுகளை எழுப்புவது அபாண்டமானதும், உண்மை யற்றதுமாகும்.

தமிழ் மய்யத்தின் வரவு-செலவு

தமிழ் மய்யத்தின் வரவு செலவு கணக்குகள் உரிய முறையில் தணிக்கை செய்யப் பட்டவை, தமிழ் மய்யத்தின் நிகழ்ச்சிகள். திட்டங்கள் தொழில், வர்த்தகத்துறை புரவலர்களின் உதவியோடு (Sponsorships) நடப்பவை. எல்லா பணமும் காசோ லையாக மட்டுமே பெறுகிறோம். எனவே எங்க ளது கணக்குமுறை நேர்மை யானது. வெளிப்படையானது. தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் கலைப்பண் பாட்டுக் களத்திலும் ஏழை. எளிய மக்களுக்கான பணி யிலும் தமிழ்மய்யம் அமைப்பு அரிய பங்களிப்புகள் நல்கி யுள்ளது. திருவாசகம் சிம் பொனி. திருக்குறள் இசைத் தமிழ் என இசைத்தடம் பதித்த ஆக்கங்களும். நாட்டுப் புறக் கலைகளை மிகப்பெரிய அளவுக்கு மீட்டெடுத்த சென்னை சங்கமம் நிகழ்வு தமிழ்மய்யம் உருவாக்கி யவை. பல்லாயிரம் ஏழை, எளிய மாணாக்கருக்கு கல்வி உதவிக்கு வகை செய்யும் சென்னை மாரத்தானை மிகப்பெரிய அளவில் நடத்தி வருவதும் தமிழ் மய்யம் அமைப்பே. இத்தகு அளப் பரிய நற்பணிகள் செய்து வரும் தமிழ்மய்யம் மீது அரசியல் ஆளுமை களோடு இணைந்து செயல்படுகின்ற ஒரே காரணத் திற்காய் அய்யப்பாடுகள் சுமத்துவது, அநீதியான தாகும், சி.பி.அய் நடத்திய தேடுதல் மக்கள் மத்தியில் அத்தகைய அய்யப்பாடுகளை எழுப்பியிருக்குமென்ற வகையில் நற்பணிகள் பல செய்து வரும் தமிழ் மய்யம் அமைப்பு அதுபற்றிக் கவலையுறுகிறது. தமிழ் மய்யத்தின் அறங்காவலர்கள் யாவருமே சமூகத்தில் மதிப்பிற்குரியவர்கள். அவர்களைப் பற்றிய பெருமிதம் தமிழ் மய்யத்திற்கு உண்டு. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுடன் நல்ல காரியங்களுக்காய் இணைந்து இயங்குவதையும் மதிக்கிறோம். சென்னை சங் கமத்தை உருவாக்கியதில் அவர்களுடைய தலைமை வரலாற்றுச் சிறப்பு கொண்டதாகும். சி.பி.அய் தேடுதலுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு நல்கினோம், அவர்களும் எம்மை தன்மை யோடும். கண்ணியத்தோடும் நடத்தினர். எமது நன்றிகளை அவர்களுக்கு சமர்ப்பிக்கும் அதேவேளை அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு எப்போதும் தருவோம், அவர்களது சீரிய அணுகுமுறையில் எமக்கு நம் பிக்கை உண்டு, அதை விடவும் எங்களது சரியான செயல் பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

யார் இந்த சோ, சு.சாமிகள்?

சி.பி.அய். தேடுதலை பயன்படுத்தி நிரந்தர குழப்ப வாதிகளான சோ.ராமசாமி, சுப்ர மணியசாமி இருவரும் 2G அலைக்கற்றை பணம் தமிழ் மய்யம் ஊடாக விடுதலைப்புலி களுக்கு சென்றிருக்கலாம் என்பது போல் பேசி வருகின் றனர். விஷமத்தனமான இவர் களின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களது பேச்சு அவதூறு நோக்கும். திட்ட மிட்ட பொய்ம்மையும் கொண்ட தென குற்றம் சாற்றுகிறோம். அவர்களை சட்டரீதியாக எதிர் கொள்வோம். அதே வேளை சிறுபான்மை மக்கள்மீது அப்பட்டமான துவேஷமும். காழ்ப்புணர்வும் காட்டிவரும் இத்தகு வலதுசாரி சிந்தனை தீவிரவாதிகளை தேசிய ஆங்கில ஊடகங்கள் ஏதோ அப்பழுக்கற்ற. நடுநிலையான கருத்தாளர்களை போல் காட்டி வருவது மிகப்பெரும் அறிவு மோசடியாகும் என்பதையும் அடிக்கோடிட்டு வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம்.

நீண்ட காலமாகவே தமிழ் மக்களுக்கான எம் நற் பணிகளை முடக்க வேண்டி இத்தகைய தமிழர் விரோத வலதுசாரி சிந்தனைத் தீவிர வாதிகள் திட்டமிட்டு செய்து வரும் சதி பிரச்சாரங்கள் தமிழ் சமூகத்திற்கான எமது பணிகளை மேலும் வலுப்படுத்து மேயன்றி தளர்த்தாது என்பதை யும் தெரிவிக்க விழைகிறோம்.

தமிழ் மையத்தின் நிலையான நிதி ரூ.1 கோடி. மற்ற சொத்துக்கள் எதுவும் கிடையாது. மக்களின் நன்மதிப்பு தான் எங்கள் சொத்து. முதல் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்தபோது பலரும் உதவியது போல கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் ரூ.3 லட்சம் வழங்கியிருக்கிறார்கள்’’

இவ்வாறு கஸ்பார் கூறினார்.

No comments:

Post a Comment