கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

சி.பி.அய்.க்குப் பயப்படவில்லை விசாரணைக்குத் தயார்! - ஆ.இராசா உறுதியான பதில்


சி.பி.அய். விசாரணைக்கு நான் பயப்படவில்லை; அந்த விசாரணையைச் சந்திப்பேன் என்றார் ஆ.இராசா.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, நீராராடியா மற்றும் சிலரை நேரில் விசாரணைக்கு ஆஜராக சி.பி.அய். நோட்டீசு அனுப்பியுள்ளது. ஆ.இராசாவுக்கு இந்த நோட்டீசு அவருடைய வீட்டில் வழங்கப்பட் டது.

இதுகுறித்து ஆ.இராசாவிடம் செய் தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு:

கேள்வி: நீங்கள் விசா ரணைக்கு நேரில் ஆஜ ராகவேண்டும் என்று சி.பி.அய். நோட்டீசு அனுப்பியுள்ளதே?

பதில்: நான் சி.பி. அய்.க்கு பயப்படவில்லை. என்னிடம் கேள்விகள் கேட்க வேண் டும் என்று சி.பி.அய்.யிடம் இருந்து தகவல் வந்துள்ளது. சோதனைக்குப்பிறகு இவ்வாறு கேள்விகள் கேட்பது வழக்கமான நடைமுறைதான். உட னடியாக அவர்களுக்கு நான் பதில் கடிதம் அனுப்பியுள்ளேன்.

நான் சென்னையில் தான் இருக்கிறேன். சில தனிப்பட்ட வேலைகள் மற்றும் மருத்துவ பரி சோதனைக்காக சென் னைக்கு வந்துள்ளேன். சி.பி.அய்.க்கு வசதியான தேதியை தெரிவித்தால் நான் வருகிறேன் என்று பதில் அனுப்பி இருக்கி றேன். எனவே, புதிய தேதியை முடிவு செய் வது சி.பி.அய்.யிடம்தான் இருக்கிறது. நான் ஒரு வழக்கறிஞர். எனக்கு இந்த நடைமுறைகள் எல்லாம் தெரியும். நான் சட்டத்தின்படி நடப் பேன். சட்டத்தை மீற மாட்டேன்.

கேள்வி: நீங்கள் முன் ஜாமீனுக்கு விண்ணப் பித்திருக்கிறீர்களா?

பதில்: நான் குற்ற வாளி அல்ல. நான் முன் ஜாமீன் பெற விண்ணப் பம் அனுப்பியுள்ளேன் என்ற கேள்விக்கே இட மில்லை. சி.பி.அய். விசா ரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக் கிறேன். சி.பி.அய்.க்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்குவது நன்றாக தெரியும்.

கேள்வி:டில்லியில் நடக்கும் காங்கிரஸ் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசும் போது, குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம் என்று பேசியிருக்கிறாரே?

பதில்: இதற்கு நான் கருத்து சொல்ல பொருத்த முள்ளவன் அல்லன்.

கேள்வி: முதலமைச் சர் கலைஞரை சனிக் கிழமை சந்தித்து பேசி யிருக்கிறீர்களே?

பதில்: இது ஒரு தலை வருக்கும், தொண்ட னுக்குமுள்ள சந்திப்பு. தொண்டன், தலைவரை சந்திப்பது இயற்கை யானதுதான்.

மேற்கண்டவாறு ஆ.இராசா கூறினார்.

No comments:

Post a Comment