கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

மழை நிவாரணப் பணிகள் அறிக்கையோடு நில்லாமல் செயலிலும் நடக்கிறது


திமுக அரசு வெறும் பார்வையிடல், அறிக்கை என்ற அளவோடு நில்லாமல் செயல் அளவிலும் நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டு வருகின்றது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 30.11.2010 அன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
கூட்டணியை விட்டு காங்கிரஸ் பிரிந்தால், அந்தக் கட்சிக்குத் தான் அதிக இழப்பு என்று நீங்கள் வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசியதாக ஒரு சில நாளேடுகள் செய்திகள் வெளியிட்டுள்ளனவே?
என்னுடைய பேச்சில் முதல் பகுதியை அந்த ஏடுகள் பெரிதாக வெளியிட்டு விட்டு, இரண்டாவது முக்கியமான பகுதியை அப்படியே மறைத்துள்ளன.
நான் பேசும்போது, Òதிமுக இங்கே கூட்டணிக்கு தலைமை வகிப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், ஏதேதோ பேசுகிறார்கள். அதைத் தட்டிக் கேட்கவும், அடக்கவும் டெல்லியிலே இருக்கின்ற தலைவர்கள், பெரியவர்கள் வர வேண்டியிருக்கிறது. அல்லது அவர்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், இங்கே இருக்கின்ற சில விஷமிகள், தூண்டிவிட்டு திமுகவுடன் இருக்கின்ற உறவை எப்படியாவது கெடுக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். அப்படிக் கெடுத்தால், இந்த உறவைத் துண்டித்தால், அது யாருக்கு நஷ்டம் என்றால் துண்டிக்கின்றவர்களுக்குத்தான் நஷ்டமாகும்.
இன்னும் சொல்லப்போனால், துண்டிக்கின்றவர்களுக்கும், துண்டிக்கப்படுகின்றவர்களுக்கும் சேர்த்து இரண்டு பேருக்கும் நஷ்டம். ஏனென்றால் நாம் இரு சக்திகளும் மதவாத சக்திகளை எதிர்க்கின்ற சக்திகள்Ó என்றுதான் பேசியிருக்கிறேன். பேச்சின் பின் பகுதியை விட்டு விட்டு காங்கிரசுக்குத் தான் இழப்பு என்று நான் பேசியதைப்போல செய்தி வெளியிட்டு இரண்டு கட்சிகளுக்கு மிடையே பூசலை உண்டாக்க எண்ணுகிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
பெருமழை காரணமான வெள்ள நிவாரணப் பணிகளில் ஆட்சியாளர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பதாக ஒரு நாளேடு தலையங்கம் எழுதியிருக்கிறதே?
நவம்பர் 23ம் தேதி அறிக்கையினைத் தொடர்ந்து 25ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரி களை அழைத்து வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து நீண்ட நேரம் விவாதித்தேன். பயிர்கள் நீரில் மூழ்கியது பற்றி விவாதிக்கப்பட்டு, நீர் வடிந்த பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பயிர்ச் சேதம் குறித்து மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கவும் முடிவெடுக்கப்பட் டது.
பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நிவாரண நிதி வழங்கியிருக்கிறார்கள். இன்றைய தேதி வரை உயிரிழந்த 103 பேர்களுடைய குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கால்நடைக ளுக்கான நிவாரண நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24ம் தேதியன்று நடைபெற்ற வேளாண்துறை அலுவலர் மாநாட்டில். கடுமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த ஆண்டு நிலவரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்திருக்கிறேன்.
நேற்றைய தினம் காலையில் கூட நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளரிடமும், அதிகாரிகளிடமும் பேசி வெள்ளச்சேத விவரங்கள் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உடனடியாக தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஸீ2 லட்சம் வீதமும், உயிரிழந்த கால்நடைகளுக்கு தலா ஸீ10 ஆயிரம் வரையிலும் தேவையான இடங்களில் உணவு வழங்கியும், தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரிடர் தொடர்பான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக ஸீ100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன்.
வேலூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றி உருக்கமாகப் பேசியிருந்தீர்கள். அந்தக் கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்கள், அந்தப் பேச்சில் அக்கறை செலுத்தாவிட்டாலும், தொண்டர்கள் உண்மையிலேயே எண்ணிப் பார்ப்பார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் அவ்வாறு நினைக்கிறேனோ இல்லையோ, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க மாநில முதல் அமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யா பொதுக் கூட்டம் ஒன்றில் பேசி நாளிதழில் வெளிவந்திருந்தது.
அதில், Òகம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான நெருக்கம் குறைந்துவிட்டது. தொண்டர்களும் பொதுமக்களிடம் நெருங்கிப் பழகுவது இல்லை.
இது கம்யூனிஸ்ட் தலைவர்கள் செய்துள்ள பெரிய தவறு. இதனை மக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதுவே கடந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்துள்ளது. மக்களை மதிக்காதவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி விடுவது நல்லதுÓ என்று தன் உள்ளத்து வேதனையை வெளிப்படுத்தி யிருக்கிறார்.
பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், நிருபர்கள் போன்றவர்களுக்கு நீங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் ஏராளமான சலுகைகளையும் உதவிகளையும் செய்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செய்தியாளர்கள் மட்டும் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் தாக்கி எழுதுவதையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்களே, அதற்கு என்ன காரணம்?
நான் மிக மிகச் சாதாரணமான, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, தமிழகத்தின் முதல் அமைச்சராக ஐந்தாவது முறையாகவும் பதவிப் பொறுப்பில் இருக்கிறேன். ஏழையெளிய மக்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு நன்மைகளைச் செய்து வருகிறேன் என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் காரணம்.
குடிசைகளிலே உள்ளவர்கள் அனைவருக்கும் காங்க்ரீட் வீடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 அவசர சிகிச்சை ஊர்தித் திட்டம் , புதிதாக தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நினைவாக ஆசியாவிலேயே பெரிய நூலகம் ,செம்மொழி மாநாடு, செம்மொழிப் பூங்கா என்று வருவதை எல்லாம் அவர்களால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்.
என்னைத் தாக்கி அவ்வாறு தொடர்ந்து எழுதி வருகின்ற அந்தப் பத்திரிகையாளர்களின் பெயர்களையெல்லாம் ஒரு தாளில் எழுதி, அதை ஒரு முறை படித்துப் பாருங்கள். அவர்கள் ஏன் அவ்வாறு என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் எழுதுகிறார்கள் என்பது உங்களுக்கே புரியும்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத் தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு ஒரு உள்நோக்கம் கற்பித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?
அந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட்கள் கட்சியின் ஆதரவு பெற்ற சி.ஐ.டி.யு. சங்கம் தோற்றுவிட்டது என்பதில் நான் மகிழ்ச்சியடையவில்லை, வருந்துகிறேன் என்று பேசினேன். அது என்னுடைய பண்பு. தி.மு.க. பெற்ற வெற்றிக்கு உள்நோக்கம் கற்பித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூறுகிறார் என்றால், அது அவருடைய பண்பு.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment