கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

தேர்தல் அமைதியாக நடைபெற தி.மு.க. முழு ஒத்துழைப்பு தரும் - தி.மு.க


தமிழக சட்டப் பேரவைக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.
தமிழக சட்டப் பேரவைக்கு வருகிற மே மாதம் பொது தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து முடிந்து வருகிற ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கூட்டம் 30.11.2010 அன்று கோட்டையில் நடந்தது. காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடந்த இந்த கூட்டத்திற்கு தலைமை தேர்தல் ஆணைய துணை ஆணையர் ஜெ.பி.பிரகாஷ் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய சட்ட ஆலோசகர் மன்டிரப்பா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அகர வரிசைப்படி அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, வக்கீல்கள் சண்முகசுந்தரம், பெ.வீ.கல்யாணசுந்தரம் (தி.மு.க.), ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் (அ.தி.மு.க.), தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), தமிழிசை சவுந்தரராஜன் (பாரதிய ஜனதா), முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, முத்துக்குமார் (பா.ம.க.), ராஜ்மோகன், வீரபாண்டியன் (இந்திய கம்யூ.), மகேந்திரன், ஆறுமுகநயினார் (மார்க்சிஸ்ட்) வக்கீல் ராஜ்மோகன், கீதா (தேசியவாத காங்கிரஸ்), மகேந்திரவர்மன் (பகுஜன் சமாஜ்) கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பொன்முடி (தி.மு.க.) கூறியதாவது:
தேர்தல் அமைதியாக நடைபெற தி.மு.க. முழு ஒத்துழைப்பு தரும். தேர்தல் தோல்வி காரணமாக சில கட்சிகள் வன்முறையை தூண்டக் கூடும். வாக்குசாவடி கைப்பற்றுதல், தில்லுமுல்லு, கள்ள ஓட்டு போன்றவற்றில் ஈடுபடக் கூடும். எனவே அமைதியாக தேர்தல் நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள், வாக்குச்சாவடி விவரங்களை வெளியிடக் கோரினேன். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது வாக்குச் சாவடி விவரங்களை இணைய தளத்தில் வெளியிடுவதாக கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment