கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

வீட்டு வசதி வாரிய மனைகள் & வீடுகள் விற்பனை அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்படவில்லை -


சென்னை, ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்தில் மேலவை கூட்ட அரங்கை முதல்வர் கருணாநிதி 08.12.2010 அன்று அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அருகில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
வீட்டு வசதி வாரிய வீடுகள் அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் 08.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
அரசு விருப்புரிமையின் கீழ் (நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீt ஞிவீsநீக்ஷீமீtவீஷீஸீணீக்ஷீஹ் னிuஷீtணீ) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள், மனைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக கற்பனையாக, வேண்டுமென்றே, உள் நோக்கத்துடன் சில நீதியரசர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு சில ஏடுகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது ஏதோ இப்போது தி.மு.க ஆட்சியில் மட்டும் நடைமுறைப்படுத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்க அந்த நாளேடுகள் முயற்சி செய்கின்றன. அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது பல ஆண்டுகளாக, எல்லா ஆட்சிகளிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சத விகிதம் விண்ணப்பம் செய்வோருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதி 15 சதவிகித வீடுகள் மற்றும் மனைகளை அரசு விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்கிறது.
திருமணம் ஆகாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், மாற்று திறனாளிகள், சமூக சேவகர்கள், சமூகத்தில் சிறப்பு வாய்ந்தோர், தனியாக வசிக்கும் முதியோர், பொது நிறுவனங்களில் பணி புரிவோர் , மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவோர், பத்திரிகையாளர்கள், அரசு வங்கிகள் ஈட்டுறுதி நிறுவனங்களில் பணி புரிவோர், அனைத்து வாரியங்களில் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தவிர) பணிபுரிவோர் , உள்ளாட்சி நிறுவனங்கள் நகராட்சிகளில் பணிபுரிவோர், ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், விடுதலை போராட்ட தியாகிகள், மொழி காவலர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் ஆகியோருக்கு விண்ணப்பம் மற்றும் கைவசம் உள்ள மனைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த 15 சதவீதம் அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இவை சலுகை விலையிலும், குலுக்கல் முறையைவிட குறைவான விலையிலும், வேண்டியவர்களுக்கு இனாமாகவும் வாரி கொடுத்து விட்டதை போல நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
விலை நிர்ணயம் செய்யும்பொழுது நடைமுறையில் உள்ள விலை, சந்தை விலை, பத்திரப்பதிவு அலுவலக வழிகாட்டி மதிப்பீடு விலை ஆகியவற்றுள் எது அதிகமோ அதை இறுதி விலையாக வாரியம் நிர்ணயம் செய்கிறது.
அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டிலும் அதே முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. விருப்புரிமை அடிப்படையில் மனை பெற்றவர்கள், அந்த விலை மிகவும் அதிகம் என்று தெரிவித்து மனையையே திரும்ப ஒப்படைக்கிற நிலைமையும் உள்ளது. ஒதுக்கீடு பெறுவோர் முழு விலையையும் செலுத்தி விற்பனை பத்திரத்தை பெற்றுக் கொண்ட பிறகு அந்த மனையை எந்த விதமாக பயன்படுத்த வேண்டும் என்று வாரியம் எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை. அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டினால் அரசுக்கோ வாரியத்திற்கோ எந்த நிதியிழப்பும் இல்லை. விதிமுறைகளை மீறி அரசு விருப்புரிமை ஒதுக்கீடுகள் நடைபெற்றதாக சொல்வது விஷமத்தனமானது.
‘விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அதை குறிப்பிட்டு புகார் கொடுத்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று வருவாய் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் விளக்கியுள்ளார். வாரியத்தின் சார்பில் வாடகை வீடுகளும் இதுபோல விருப்புரிமை அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்பட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் திமுக அரசு பொறுப்புக்கு வரும்போதெல்லாம் பத்திரிகையாளர்களுக்காக சலுகை விலையில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த உண்மைகளை சில செய்தி யாளர்கள் மறைத்து விட்டு அரசின் மீது களங்கம் சுமத்த முற்படுவது விந்தையிலும் விந்தையாகும்.

No comments:

Post a Comment