கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

திமுக&காங். இடையே சிண்டு முடிய பார்க்கிறார் - ஜெயலலிதா முதல்வர் கருணாநிதி அறிக்கை


சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழகத்தின் வெள்ள சேதங்கள் குறித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மாநில அரசின் அறிக்கையை 09.12.2010 அன்று தலைமை செயலாளர் மாலதி வழங்கினார். அருகில் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரதேவன்

முதல்வர் கருணாநிதி 09.12.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., எம்.எல்.ஏ., மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டதாக வெளியான செய்திக்கு நான் தெளிவாக நேற்றைய தினமே பதில் அறிக்கை கொடுத்திருந்தபோதிலும், அதே குற்றச்சாட்டு மீண்டும் வந்திருப்பதால், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த வீட்டுமனைகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
ஜெயலலிதா ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என்.நாராயணன், ஐ.ஏ.எஸ்.க்கு 1993ம் ஆண்டு 4,115 சதுர அடி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் என்பவருக்கு பெசன்ட்நகர் பகுதியில் 1995ம் ஆண்டு 4,535 சதுர அடி, முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமிலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993ம் ஆண்டு 2,559 சதுர அடி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதிக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம், அ.தி.மு.க. தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.எம். வேலுச்சாமி மனைவி பானுமதிக்கு கோவையில் 1993ம் ஆண்டு வீடு, 2004ம் ஆண்டு தேவாரம், கே.விஜயகுமார், ஆர். நடராஜ் உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சோளிங்கநல்லு£ரில் தலா 4800 சதுர அடி, நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலுக்கு 2005ம் ஆண்டு சோளிங்கநல்லூரில் இரண்டு மனைகள், சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே. செல்வராஜ்க்கு 1994ம் ஆண்டு கொட்டிவாக்கத்தில் 2,692 சதுர அடி, முன்னாள் முதல்வரிடம் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜனுக்கு 1995ம் ஆண்டு திருவான்மியூரில் 6,784 சதுர அடி. ஆதிராஜாராமுக்கு 1995ல் 3,101 சதுர அடி, 1993ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சரஸ்வதிக்கு அண்ணா நகரில் 880 சதுர அடி, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு அண்ணா நகரில் 950 சதுர அடி, எம்.ஜி.ஆருடைய டிரைவர் பூபதிக்கு நந்தனத்தில் 3,600 சதுர அடி, எஸ்.ஆண்டித் தேவரின் மனைவி பிலோமினாவுக்கு 1994ல் மதுரையில் 1,500 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. 2005ம் ஆண்டு பலருக்கு இரண்டு மனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உள்ளது.
தி.மு.க ஆட்சியில் வீட்டுமனைகள் ஒதுக்கீட்டில் தவறு நடந்து விட்டதாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட பத்திரிகையாளர்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யாருக்கு இத்தகைய வீடுகள், மனைகள் தரப்பட்டன என்ற முழு விவரத்தையும் இனியாவது வெளியிட்டால், அவர்களின் பத்திரிகா தர்மத்தைப் பாராட்டலாம்.
எந்த அளவிற்கு ஜெயா குழப்பம் அடைந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் தேடி வேறெங்கும் செல்லத் தேவையில்லை. அவருடைய அறிக்கையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 6.12.2010 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை எப்படித் தொடங்குகிறது தெரியுமா?
Òரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, வெள்ளத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், தன்னுடைய Òஇளைஞன்Ó திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் உல்லாசமாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதிÓ & இப்படித்தான் 6ம் தேதிய ஜெயா அறிக்கை தொடங்குகிறது.
8.12.2010 அன்று மீண்டும் ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அந்த அறிக்கை எப்படித் தொடங்குகிறது தெரியுமா?
Òரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது எப்படி நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதேபோல் கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் ஆனந்தமாக பொழுதைக் கழித்து இருக்கிறார் கருணாநிதிÓ & இந்த இரண்டு அறிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். 6ம் தேதி வெளியிட்ட அறிக்கையை எப்படித் தொடங்கினோம் என்பது கூடத் தெரியாமல், 8ம் தேதி அறிக்கையைத் தொடங்குகிறார் என்றால், அதற்கென்ன காரணம்? ஆத்திரமா? அறியாமையா? திரைப்படத் துறை விழாவிலே நான் கலந்து கொண்டுவிட்டேன் என்ற வயிற்றெரிச்சலா? அல்லது தன்னை யாருமே அழைக்கவில்லையே என்ற பொறாமையா?
அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் என்ன சொல்கிறார் தெரியுமா? Òஇதில் திடுக்கிட வைக்கும் உண்மை என்னவென்றால், ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான்Ó என்று எழுதியிருக்கிறார். அம்மையாரின் ஆட்சியில்தான் இவர் கலந்து கொள்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அமைச்சரவையிலே உள்ள அத்தனை பேரும் லந்து கொள்வார்கள். ஏன், தற்போது முதல்வராக இல்லாத காலத்திலே கூட, இவர் கோவை, திருச்சி, மதுரை நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டபோது, இவரது அமைச்சரவை முன்னாள் சகாக்கள், இன்றைய அ.தி.மு.க. முன்னணியினர் அத்தனை பேரும் கலந்து கொண்டார்கள்.
ஆனால் இப்போது என்ன நிலைமை? 7ம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டம். 5ம் தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்ட திமுக ஆய்வுக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்ற முறையில் நிதியமைச்சர், பொருளாளர் என்ற முறையில் துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் என்ற முறையில் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் என்ற முறையில் துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அமைச்சர்களில் அன்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியரைத் தவிர மற்ற நான்கு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நான்கு பேரைத் தவிர 6ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்காக ஸ்டாலினை அழைத்துச் செல்வதற்காக வந்த அமைச்சர் பொன்முடி, அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் கலந்து கொண்டார்கள். மொத்தம் 29 அமைச்சர்களில் ஆறேழு பேர்தான் கலந்து கொண்டார்கள்.
அந்த ஆறேழு பேரிலும், துணை முதல்வர், பொன்முடி ஆகியோர் நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு 9 மணிக்கு மேல் புறப்பட்டு விட்டனர். விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், கடலு£ர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்த்து நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு, மீண்டும் 7ம் தேதி அமைச்சரவையிலே கலந்து கொள்ள வந்துவிட்டார்கள்.
வெள்ள நிவாரணப் பணிகளைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டினை ஜெயலலிதா கூறியிருக்கிறார். அதுவாவது உண்மையா? அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அன்றாடம் வெள்ளப் பகுதிகளையெல்லாம் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். அதன்படி, தமிழக அமைச்சரவையே விவாதித்து பல்வேறு உதவிகளைச் செய்ய முடிவெடுத்துள்ளது. மத்திய அரசிடம் உதவி கோரிப் பெறுவதென முடிவெடுத்து, அதற்கான கடிதமும் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளிலே நான் அக்கறை செலுத்தவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுகிறார் என்றால், அதிலே ஏதாவது பொருள் இருக்கிறதா? கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, தமிழ்நாட்டில் பிணங்கள் விழுந்தபோது, கோவா கடற்கரையில் கும்மியடித்துக் கொண்டு ‘டூயட்’ பாடிக்கொண்டிருந்தவர் இதே ஜெயலலிதா.
கூட்டணிக் கட்சியை நான் ஏதோ மிரட்டுவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே வழக்கம் போல கூறியிருக்கிறார். பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது விடுதலை நாளன்று கூட ஜெயலலிதா மிரட்டியதாகவும், தனது வாழ்நாளிலேயே ஜெயலலிதாவோடு கூட்டணி இருந்த காலம்தான் மோசமான காலம் என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று ஜெயா நினைக்கிறாரா?
நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை ஒப்புக்கொள்கிற வரையில் எதிர்க் கட்சிகளின் போராட்டம் ஓயாது என்று ஜெயலலிதா, எதிர்க்கட்சிகளுக்கு இவர்தான் ஏகத் தலைவி என்று தானாகவே கற்பனை செய்து சொல்லியிருக்கிறார். நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று சொல்வார்களே அதுபோலத்தான் எப்படியாவது, ஏதாவது நடக்காதா, அதன் மூலமாக தனக்கு விடிவு காலம் பிறக்காதா என்றுதான் ஏங்குகிறார்.
இதற்கிடையே திமுக அரசின் சார்பில் செய்யப்படும் சாதனைகள், திட்டங்கள் கண்டு அசூயை கொண்டு, மற்றவர்கள் என்னைப் பாராட்டினால் இவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியிலே என்னைப் பாராட்டியதை எப்படி அவரால் பொறுத்துக்கொள்ள முடியும்? அதனால்தான் அறிக்கையிலே அநாகரிகமான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்.
இறுதியாக ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது, Òதான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்குத் தெரியும்Ó என்று எழுதியிருக்கிறார். செய்த பாவங்களின் பலனை தற்போதே அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா என்னுடைய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஏதோ அவரது வார்த்தை மூலம் சொல்லியிருந்தால், அதற்காக கவலைப்படுபவன் அல்ல இந்தக் கருணாநிதி.

No comments:

Post a Comment