கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, December 6, 2010

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் : அடையாள அட்டை வழங்கும் தேதி


கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கும் தேதி 7ம் தேதிக்கு பதில் 8ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு 04.12.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010 - 11 முதல் 2015 - 16 வரையிலான 6 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுக ளாக மாற்றிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2010 - 11ம் ஆண்டில் முதல் கட்டமாக 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் பெற தகுதி வாய்ந்த எஞ்சிய குடிசை வாழ் மக்களுக்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் டிசம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை அடையாள வழங்க அரசு முடிவு செய்து அறிவித்திருந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் 7ம் தேதி சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, இந்த திட்டத்திற்கான அடையாள அட்டை 8ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை ஒரே கால கட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிகளில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் மாவட்டங்கள்:
மதுரை - மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி,
கரூர் மற்றும் பெரம்பலூர் - மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் டி.நெப்போலியன்,
நாமக்கல் - மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.காந்திசெல்வன்,
தஞ்சாவூர் - மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் அமைச்சர் கோ.சி.மணி
திருநெல்வேலி - சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் மற்றும் அமைச்சர் மைதீன்கான்,
சேலம் - அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்
வேலூர் - அமைச்சர் துரைமுருகன்
விழுப்புரம் - அமைச்சர் க.பொன்முடி
திருச்சி - அமைச்சர் கே.என்.நேரு
கடலூர் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கோயம்புத்தூர் - அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி
திண்டுக்கல் - அமைச்சர் இ.பெரியசாமி
கன்னியாகுமரி - அமைச்சர் என்.சுரேஷ்ராஜன்
திருவண்ணாமலை - அமைச்சர் தண்டராம்பட்டு எ.வ.வேலு
ராமநாதபுரம் - அமைச்சர் சுப.தங்கவேலு
விருதுநகர் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
காஞ்சிபுரம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சிவகங்கை - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
கிருஷ்ணகிரி - அமைச்சர் தங்கம் தென்னரசு
நாகப்பட்டினம் - அமைச்சர் உபயதுல்லா
ஈரோடு - அமைச்சர் என்.செல்வராஜ்
திருப்பூர் - அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன்
அரியலூர் - அமைச்சர் பூங்கோதை
தூத்துக்குடி - அமைச்சர் கீதாஜீவன்
புதுக்கோட்டை - அமைச்சர் தமிழரசி
திருவள்ளூர் - அமைச்சர் கே.பி.பி.சாமி
திருவாரூர் - அமைச்சர் உ.மதிவாணன்
நீலகிரி - அமைச்சர் கா.ராமச்சந்திரன்
தர்மபுரி - சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி.துரைசாமி
தேனி - அரசு தலைமை கொறடா சக்கரபாணி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment