கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, December 6, 2010

அன்னை தெரசாவின் கொள்கைகளைப் பின்பற்றும் வகையில் செயல்பட வேண்டும் : முதல்வர் கலைஞர் பேச்சுதமிழக அரசின் சார் பில் அன்னை தெரசா நூற்றாண்டு விழா 04.12.2010 அன்று சென்னையில் நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவுக்கு முதல் அமைச் சர் கலைஞர் தலைமை தாங்கி, அன்னை தெரசா படத்தை திறந்துவைத்து பேசினார்.

விழாவில் அவர் பேசியதாவது :

அன்னை தெரசா வைப் பற்றித் தமிழகத் தில் நாம் பேசுகிறோம் அவருக்கு விழா கொண் டாடுகின்றோம். அவர் களுடைய அருமை, பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, அவ் வழியில் அனைவரும் நடக்க வேண்டுமென்று உறுதி எடுத்துக்கொள் கின்றோம். ஆனால், நாம் ஒரு நாள் மாத்திரம் இந்த விழாவைக் கொண் டாடி, அன்னை தெரசா வினுடைய அரும்பெரும் தியாகங்களைப் போற்றி, அவரது வழி நடப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டால் மாத்திரம் போதாது எடுத்துக் கொண்ட உறுதியைக் காற்றிலே பறக்க விடா மல், தேர்தல் காலத்து உறுதியாக ஆக்காமல், என்றென்றும் அதை நெஞ்சிலே நிறுத்தி, அந்த உறுதியை நிறை வேற்றுவோம் நடை முறைப்படுத்துவோம் என்று இந்நாளில் உங் களோடு சேர்ந்து நான் உறுதி எடுத்துக்கொள் கின்றேன்.

நான் சிறுபான்மைச் சமுதாயத்தை என்றைக் குமே பாராட்டுபவன் ஆதரிப்பவன். அந்தச் சமுதாயத்திற்காக இன்று நேற்றல்ல நீண்ட நெடுங் காலமாக உழைத்துக் கொண்டிருப்பவன். நானும் பெரும்பான் மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவன் அல்ல சிறு பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவன். மிகமிகப் பின்தங்கிய சமுதா யத்தைச் சேர்ந்தவன் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வன்.

அப்படிப்பட்ட சிறு பான்மைச் சமுதாயத்திற் காக, அந்தச் சமுதாயத் திலே பிறந்த தாய் உலகத் தின் அன்னை என்று போற்றப்படுகின்ற தெர சாவுடைய நூற்றாண்டு விழா என்றால் மகி ழாமல் இருக்கமுடி யாது. அதை நினைத்து உறுதிகளை மேற்கொள் ளாமல் இருக்க முடி யாது. அன்னை தெரசா ஈகையின் உருவம் அன்னை தெரசா ஏழைகளைக் கண்டு இரங்குகின்ற சுபா வம் படைத்தவர் அன்னை தெரசா நோயாளி களைப் பார்த்தால், அந்த நோய் தனக்கே வந்தது என்று எண்ணிக் கவலைப்படுபவர். அப்படிப்பட்ட அருமை யான ஒரு மாதரசு அன்னை தெரசா. அன்னை தெரசா என்று ஒருவர்தான் இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள் ளம் தரிசாக இருக்கும். தரிசாக இருப்பதெல் லாம், தெரசா அல்ல. உண்மையிலேயே நல் லுள்ளம் படைத்த, உண்மையிலேயே இனிய இதயம் படைத்த, உண் மையிலேயே இளகிய இதயம் படைத்த, உண் மையிலேயே ஈவு இரக் கம் கொண்ட இதயத் திற்குச் சொந்தக்காரர் அன்னை தெரசா. அவரு டைய புகழுக்கு அவர் பெற்ற விருதுகளே சான்று. அத்தகைய அன்னை யாருக்கு இன்றைக்கு நாம் எடுத்துள்ள இந்த விழா போதாது. எல்லா மாநிலங்களிலும் இந்த விழா நடைபெற்றிருக்க வேண்டும் இந்திய அள வில் நடைபெற்றிருக்க வேண்டும். அதைத்தான் பீட்டர் அல்போன்ஸ், மத்திய அரசை விட்டுக் கொடுக்காமல், மத்திய அரசின் சார்பில் நாங் கள் ஏற்கனவே அன்னை தெரசா உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டு விட்டோம் என்று சொல்லியிருக்கிறார். நாணயத்தை வெளியிடு கின்றவர்கள், நாணய மாக மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ப தற்காக நாணயத்தை வெளியிட்டிருக்கின்றார்கள். அந்த நாணயத்தை வெளியிட்டது மாத்திர மல்ல நாடு முழுவதும் அன்னை தெரசாவினு டைய விழாவைக் கொண் டாடியிருக்க வேண்டும். இந்த அரசைப் பொறுத்தவரையில், அண்மையிலே மகளி ருக்காகக் கட்டப்பட்ட ஒரு பெரிய கட்டிடத் திற்கு, அன்னை தெரசா மகளிர் வணிக வளாகம் என்று நான் பெயர் சூட் டியதை நீங்களெல்லாம் மறந்திருக்க மாட்டீர் கள். ஆதரவற்ற மகளி ருக்குத் திருமண உதவித் திட்டத்திற்கு அன்னை தெரசாவினுடைய பெயர் சூட்டப்பட்டு; ஆதரவற்ற மகளிர் திரும ணத்திற்காக ரூ.25 ஆயி ரம் இந்த அரசின் சார் பாக நிதியாக வழங்கப் படுகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். அவரைப் பற்றி மேற்கு வங்க மாநில முதல்வராக மட்டுமல் லாமல், விடுதலைப் போராட்டத் தளபதி களில் ஒருவராகவும் விளங்கி இந்திய நாடு முழுமையும் புகழோடு திகழ்ந்த டாக்டர் ராய், தமது 80-ஆவது பிறந்த நாள் செய்தியில் அன்னை தெரசாவைப் பற்றி இப் படிக் குறிப்பிடுகிறார்: இந்த என் பிறந்த நாளில் இந்த முதிய வயதில் முதன்முதலில் யாரைப் பற்றிய நினைவு எனக்கு வந்தது தெரியுமா? நாட் டின் விடுதலைக்காக எந்தத் தலைவரோடு ஒன்றி நின்று போராடி னேனோ, அந்த காந்தி யடிகளின் நினைவுகூட எனக்கு வரவில்லை; என் உயிருக்குயிரான உற்ற தோழர் இந்திய நாட் டின் தலைமை அமைச் சர் ஜவஹர்லால் நேரு பற்றிய எண்ணமும் என் நெஞ்சில் எழவில்லை; ஏன் எனக்கு மிகவும் நெருக்கமான என் உற் றார், உறவினர் எவரைப் பற்றிய சிந்தனையுமே எனக்கு வரவில்லை. ஆனால், எனது அலுவல கத்துக்குச் செல்லும் அந்த மாடிப்படிகளில் நான் காலடி வைத்து ஏறும்போது, ஒரே ஓர் எளிய உருவம் மட்டுமே என் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருந்தது. திக்கற்ற ஏழைகளையும், நோயாளி களையும், குழந்தை களையும், காப்பாற்றுவ தற்காக அவர்களின் கண்ணீரைத் துடைப்ப தற்காக, தம் வாழ்வையே ஒப்படைத்துக் கொண்டு அல்லும்பகலும் அய ராது உழைக்கிறாரே, அந்த அன்னை தெரசா வின் மெலிந்த வடிவமே, என் இதயம், மூளை எல்லாவற்றையுமே சுற்றி வளைத்துக் கொண்டு விட்டது என்று ராய் தன்னுடைய பிறந்த நாள் செய்தியிலே அன்றைக் குக் கூறினார்கள். அந்த வங்கத்திலே இந்த விழாவைக் கொண் டாடவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை. வங்க மும் இந்தியாவிலே ஒரு பகுதிதான். எனவே, தமி ழகத்திலே நாம் கொண் டாடினால் என்ன? வங் கம் கொண்டாடினால் என்ன? நாம் இங்கே கொண்டாடுவதும், வங்கம் கொண்டாடு வதைப் போலத்தான். ஏழையெளியவர்களை, பாட்டாளிகளை, நிர்க் கதியாக நிற்பவர்களை, மனிதர்களை மனிதர் களாக மதிக்க வேண்டு மென்பது அன்னை தெரசாவினுடைய கொள்கை. அந்தக் கொள்கையின்படி, நாம் நடந்துகொள்கின்ற காரணத்தால்தான், அன்னை தெரசாவினு டைய விழாவை எடுக் கின்ற யோக்கியதை நமக் கிருப்பதாக தகுதி நமக்கு இருப்பதாக, நாமே எண்ணிக்கொள்கின்றோம். நாம் இங்கே மனிதர்களை மனிதர்களாக எண்ணுகின்றோம் அதனால்தான் அன்னை தெரசாவினுடைய விழாவை எடுக்கின்ற தகுதி நமக்கு இருப்ப தாகச் சொல்கிறோம். வங்கத்திலே அந்த அம் மையார் அங்குள்ளவர் களுக்காகப் பாடுபட்டு, பணியாற்றி, சிறந்த தேச சேவகி, சமூக சேவகி என்ற அந்தப் பெயரைப் பெற்ற அந்த வங்கத்தில் மேற்கு வங்கத்தில் இன் னமும் மனிதனை வைத்து மனிதன் இழுக்கின்ற கைரிக்ஷா இருக்கிறது. இங்கே அம்மையாரு டைய விழாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால், கைரிக்ஷாவை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா கொடுத்துவிட்டு, மனிதனை வைத்து மனிதன் இழுப்பதா என்று காந்தியடிகள் கேட்ட கேள்விக்கு பதி லளித்துவிட்டு, அந்தத் தகுதியோடு நாம் அன்னை தெரசாவினு டைய விழாவைக் கொண் டாடிக் கொண்டிருக்கி றோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் எம்.பி பேசியதாவது:
இந்த விழாவை கொண்டாடுவதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏழைகளுக்காக அன்னை தெரசா தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவர் தொடங்கிய பணி 120 நாடுகளில் நடந்து வருகிறது. தெரசாவின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அன்னை தெரசா சபை மண்டலத் தலைவர் மங்களா, சிறுபான்மை ஆணையர் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, பேராயர்கள் சின்னப்பா, எஸ்றா.சற்குணம், எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், முஸ்லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.No comments:

Post a Comment