கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

தமிழக வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி - முதல்வர் கலைஞர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


மழை வெள்ள நிவாரண பணிகளுக்கு ஸி500 கோடி ஒதுக்கீடு செய்ய 07.12.2010 அன்று மாலை நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு தலா 2,500 முதல் 5,000 வரை, வீடுகளுக்கு ஸி1,500 , நீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ஸி8,000, மீனவர்களுக்கு ஸி2,500 முதல் 7,500 வரை நிவாரணம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் 07.12.2010 அன்று மாலை 4.40 மணி முதல் 5.40 மணி வரை புதிய தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.
வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறு தலும் அமைச்சரவைக் கூட்டத்தில் முதலில் தெரிவிக்கப்பட்டது. 9 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைப் பார்த்து திரும்பிய 8 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அறிக்கைகள் பற்றி நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் குடிசை அல்லாத வீடுகள் மற்றும் பயிர் சேதம் ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்கிடவும், சாலைகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைத் தற்காலிகமாக சீரமைப்பு செய்யவும் உத்தேசமாகத் தேவைப்படும் ஸி500 கோடி நிதி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பயிரிழப்புக்கும், சாலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்கவும் தேவையான ஸி1,607 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசிடமிருந்து கோரிப் பெற முடிவு செய்யப்பட்டது.
மழை, வெள்ளத்தால் இதுவரை 203 நபர்கள் இறந்துள்ளனர். இவர்களுக்கு நிவாரணமாக தலா ஸி2 லட்சம், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் இதுவரை 5068 கால்நடைகள் இறந்துள்ளன. கறவை மாடு, உழவு மாடு போன்றவை இறந்திருந்தால் ஸி10000 வீதமும், கன்றுக்குட்டிகளுக்கு ஸி5000 வீதமும், ஆடுகளுக்கு ஸி1000 வீதமும், கோழிகளுக்கு ஸி30 வீதமும் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும். இதுவரை 8,000 குடிசைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 40,000 குடிசைகள் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பல கிராமங்களில் மழைநீர் வடியாமல் உள்ள நிலையில், குடிசைகளின் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என்பதால், இவை ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு, முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு ஸி5,000 வீதமும், பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு ஸி2,500 வீதமும் நிவாரணமாக ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும்.
மேலும் 3 லட்சத்து 20 ஆயிரம் குடிசைகள் அல்லாத வீடுகளும் வெள்ள நீர் பெருகிய காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான நிவாரணமாக வீடு ஒவ்வொன்றுக்கும் தலா ஸி1,500 வீதம் உடனடியாக வழங்கப்படும். மீனவர்கள் படகு, கட்டுமரம், வலை ஆகியவை இந்தப் பெருமழை காரணமாக முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தால் புதிதாக வாங்குவதற்கு ஸி7,500 வீதமும், ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தால் பழுது பார்ப்பதற்கு ஸி2,500 வீதமும் நிவாரண உதவி வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், தொற்று நோய் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் சுகாதாரப் பணிகளை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ளும்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சிறப்பு ஆணையர்களின் அறிக்கையின்படி, சுமார் 15 லட்சம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்தவுடன், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் முழுமையாகக் கணக்கிடப்பட்டு, 50 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ஸி8,000 வீதமும், நெல் தவிர மற்ற பயிர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிலும் நிவாரணம் வழங்கப்படும்.
மேலும் மறுசாகுபடிக்குத் தேவையான விதை, உரம் போன்ற இடுபொருட்களைப் போதிய அளவு வழங்கவும், பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வேளாண்மைத் துறை மற்றும் கால்நடைத் துறை மேற்கொள்ளும்.
நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், வெள்ள பாதிப்பினை மதிப்பீடு செய்ய 9 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆணையர்கள் தொடர்ந்து நடைபெறும் வெள்ள நிவாரணப் பணிகளை கண்காணிப்பர். சிறப்பு ஆணையர்களின் அறிக்கையின்படி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெருத்த பாதிப்பிற்கு வடிகால் வசதி முறையாக இல்லாததுதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடலூரில் வெள்ளாறு, பரவனாறு, உப்பாறு ஆகிய ஆற்றுப் படுகைகளில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கான திட்டமும், காவிரி டெல்டா பகுதிகளில் கொள்ளிடம், அரிச்சந்திரா நதி, வெண்ணாறு, பாமிணியாறு, கோரையாறு, வளவனாறு, வெட்டாறு போன்ற டெல்டா பகுதிகளில் உள்ள ஆற்றுப் படுகைகளில் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையிலும், நீண்டகால வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் திட்டங்களைத் தீட்டி, வருங்காலத்தில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment