கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 2003 முதல் ஒரே கொள்கைதான் பின்பற்றப்படுகிறது - கபில் சிபல்


2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜே.பி.சி) விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருவதன் பின்னணியைப் பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. கபில்சிபல் வினா எழுப்பினார். ஜே.பி.சி மூலமாக எந்த ஒரு நோக்கமும் நிறை வேறாது என்றும்; எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் பிரச்சினைகளை ஆழ்ந்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைகள் நடைபெற்றிருக் கின்றன. ஆனால், அந்த விசாரணைகள் மூலமாக எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்பது நாள்தோறு:ம சர்ச்சைகளை எழுப்புவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சாதனமே தவிர வேறல்ல என்று திரு. கபில் சிபல் பத்திரி கையாளர்களிடம் தெரிவித்தார்.மேலும், அர், ஜே.பி.சி. என்பது-ஜனநாயகத்தை ஸ்தம் பிக்கச் செய்வதற்கு எதிர்க்கட்சியினர் பின்பற்றும் வெறும் அரசியலே தவிர வேறல்ல என்று விளக்கினார்.

அரசியல் சட்ட அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பிடமிருந்து வெளிவருவதால், இந்தியத் தலைமைக் கணக்காயரின் அறிக் கையை, ஆழமாகப் பரிசீலனை செய்திடத் தான் வேண்டும் என்றும்; எனினும், அந்த அறிக்கையை வெறும் கருத்து அல்லது அபிப் பிராயம் என்ற அளவில்தான் கொள்ள வேண் டும் என்றும் திரு. கபில்சிபல் தெரிவித்தார். தலைமைக் கணக்காயரின் அறிக்கை வேதம் அல்ல. பொதுக் கணக்குக்குழு, தலைமைக் கணக்காயர் செய்யும் பரிந்துரை களின் பொருத்தத்தையும், தகுதியையும் ஆய்வு செய்யும்.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்பது ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் அமைக்கப் படுவதாகும். அக்குழு பல பிரச்சினைகளில் முடிவெடுத்திட முடியாது. நிதி இழப்பு என்று சொல்லப்படுவது கருத்தியலானது (ஞசநளரஅயீவஎந) தான். ஏலமுறை பின்பற்றப் படாததால், இழப்பின் அளவை நிர்ணயம் செய் வதற்கான அளவுகோல் எதுவும் இல்லை. நிருவாக ரீதியான முடிவுகள் குறித்தும் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குற்ற நடவடிக்கைகள் குறித்து புலன் விசா ரணை அமைப்புகள் விசாரித்து வரு கின்றன. நாடாளுமன்றக் கூட்டுக்குழு டெலிகாம் கொள் கையின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெதுவும் மேற்கொள்ள இயலாது. ஏனெனில், அது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த தாகும் என்று திரு. கபில்சிபல் விளக்கினார்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் மேற் பார்வையில் புலன் விசாரணை நடை பெறலாம் என்ற கருத்துக்கு மத்திய அரசு எதிரானதல்ல. தேசியத் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (கூசுஹஐ), அலைக் கற்றை ஒதுக்கீட்டுக் கொள்கையை வகுத்திட வேண்டுமென்று; 2003ஆம் ஆண்டிலேயே தேசிய ஜனநாயக் கூட்டணி முடிவெடுத்தது. சரியாக அதன்படியே அனைத்தும் நடைபெற்றிருக்கின்றன.

மத்திய அரசை வெளியேற்றுவதற் கான உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. ஆனால், அப்படிச் செய்ய முடியவில்லலை யென்றால், அரசு முறையாகச் செயல்படுவ தைத் தடுத்திடும் உரிமை எதிர்க்கட்சி களுக்குக் கிடையாது என்று திரு. கபில் சிபல் தெரிவித்தார்.

1.12.2010 நாளிட்ட இந்து நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி.

நன்றி: முரசொலி, 2.12.2010

No comments:

Post a Comment