கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

திமுக உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கும் வரை பேரவையை திமுக புறக்கணிக்கும் - மு.க.ஸ்டாலின்


திமுக உறுப்பினர்களுக்கு பேரவையில் ஒரே பகுதியில் இடம் ஒதுக்கும் வரை சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேரவையில் இருந்து 04.08.2011 அன்று வெளிநடப்பு செய்த பிறகு நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
ஆகஸ்ட் 4ம் தேதி பட்ஜெட் தாக்கல் என்று அறிவித்த பிறகு, ^4ஆயிரம் கோடிக்கு அதிமுக அரசு வரிகளை உயர்த்தியது. இதனால் பட்ஜெட்டில் புதுவரி விதிக்க வழியில்லை.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களின் அன்றாட அடிப்படை பிரச்னைகளில் அக்கறை காட்டாமல் திமுக ஆட்சியில் செய்த பல்வேறு நல்ல காரியங்களுக்கு குத்தகம் ஏற்படுத்தும் நோக்கத்திலேயே செயல்படுகிறது.
தலைமைச் செயலக இடமாற்றம், சமச்சீர் கல்வி, கலைஞர் காப்பீடு திட்டம், தமிழ் செம்மொழி ஆய்வு மையம் போன்றவைகளை சீர்குலைத்து வருகிறது. நில அபகரிப்பை தடுக்கிறோம் என்ற பெயரில் திமுகவினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர். பழிவாங்கும் பாதக செயலை கண்டித்து அறிவித்த அறப்போர் ஆர்ப்பாட்டத்துக்குகூட, இந்த அரசு அனுமதி தரவில்லை. லட்சக்கணக்கான கட்சியினரை கைது செய்தது. பின்னர் கட்சியின் எழுச்சியைமக்களின் உணர்ச்சியை கண்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க செய்தது.
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகள் பரிசீலித்துதான் சமச்சீர் கல்வி சட்டத்தை நிறைவேற்றினோம். திமுக அரசால் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வியை இந்த அரசு நடைமுறைபடுத்தவில்லை. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் வலியுறுத்தி பலமுறை எடுத்து சொன்ன பிறகும், அவர்களின் தோழமை கட்சிகள் உள்பட அனைவரும் எடுத்து சொல்லியும் கேட்காமல் சமச்சீர் கல்வியை அனுமதிக்க மாட்டோம் என்று வீண் பிடிவாதம் பிடிக்கும் மக்கள் விரோத அதிமுக அரசை கண்டிக்கிறோம்.
கடந்த சட்டசபை கூட்டத்தின்போது, சபையில் திமுக உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் அமர இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அந்த வேண்டுகோள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று பேரவை தலைவர் உறுதிமொழி கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றவில்லை. திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே பகுதியில் அமர்வதற்கு இடவசதி செய்து கொடுக்கும் வரை இந்த அவையின் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில்லை என்று திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:
* திருவாரூர் கண்டன பொதுக்கூட்டம் அறிவித்தபடி நடக்கும்.
* என்.கே.கே.பி.ராஜா கைது இந்த அரசின் பொய் வழக்குகளில் மேலும் ஒன்று.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment