கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? : மு.க.ஸ்டாலின் விளக்கம்


சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது ஏன் என்பதற்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க, வாய்ப்பு வழங்காததை கண்டித்து, 16 .08 .2011 அன்று திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், அவைக்கு வெளியே சட்டப்பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களுக்கு ஒரே வரிசையில் இருக்கை ஒதுக்காத காரணத்துக்காக, பட்ஜெட் தாக்கலின்போது வெளிநடப்பு செய்தோம். பட்ஜெட் மீதான விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து, மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
கேள்வி நேரத்தின்போது, அதிமுக மற்றும் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக மீது குற்றம்சாட்டி பேசினர். கேள்வி நேரத்தின்போது குற்றம் சாட்டியோ, கேலி செய்தோ பேசக்கூடாது என்பது மரபு. இதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்காமல், தொடர்ந்து பேச அனுமதித்தார்.
எங்கள் கட்சியின் கொறடா சக்ரபாணி, இதுபோன்ற பேச்சை அனுமதிக்கக் கூடாது என்று கூறினார். உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, அப்படித்தான் பேசுவேன் என்று பதில் அளிக்கிறார். என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த துரைமுருகனை பார்த்து வேண்டும் என்றே, பாடி லாங்வேஜ் மூலம் கிண்டல் செய்கிறார் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டினர். செய்யாத ஒன்றை செய்ததாக கூறியதால், துரைமுருகன் விளக்கம் தர முற்பட்டார். சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அந்த நேரத்தில் முதல்வர் தவிர, அனைத்து அமைச்சர்களும் கூச்சல் போட்டனர்.
தொடர்ந்து பேசிய சரத்குமார், தகாத வார்த்தைகளால் முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி விமர்சித்தார். அதையும் சபாநாயகர் அனுமதித்தார். அதிமுக எம்எல்ஏ வளர்மதி, தேவையற்ற சில வார்த்தைகள் கூறியபோது, எழுந்து பேச முற்பட்டேன். என்னை அனுமதிக்கவில்லை.
சபாநாயகரின் போக்கை கண்டித்தும், கேள்வி நேரத்தின் போது குற்றம்சாட்டி மற்றும் கேலி செய்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,

சட்ட சபையில் நடப்பதை பல கேமராக்கள் படம் எடுத்துக்கொண்டிருக்கின்றன. நான் கேலி செய்கிறமாதிரியோ, உடலை வலைத்தோ, கையை, காலை ஆட்டியோ, பிறர் உள்ளம் புண்படுகின்ற அளவுக்கு செய்திருந்தால், அதை டிவியிலே காட்டினால் நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் அப்படியில்லாமல் வேண்டுமென்றே திட்டமிட்டு சொன்னாரே அந்த அமைச்சர் இதனை நிரூபிக்கத் தவறினால் அவருடைய பதவியை ராஜினாமா செய்ய தயாரா என்ற சவாலை நான் விடத் தயாராக இருக்கிறேன். நாங்கள் உள்ளே உட்காருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆகையினால் எப்படியாவது இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகவே நாங்கள் இதனை கருதுகிறோம் என்றார்.



அவையில் கிண்டல் செய்ததாக துரைமுருகன் மீது பொய் குற்றச்சாட்டு
:

சட்டப்பேரவையில் �பாடி லேங்குவேஜ்� மூலம் கிண்டல் செய்ததாக திமுக உறுப்பினர் துரைமுருகன் மீது அமைச்சர் குற்றச்சாட்டு கூறியதையடுத்து பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் 16 .08 .2011 அன்று கேள்வி நேரத்தின்போது திருவெறும்பூர் தொகுதி தேமுதிக உறுப்பினர் செந்தில்குமார், திருச்சி&தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் துவாக்குடி& பால்பண்ணை இடையே சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து ஒரு கேள்வி கேட்டார். அதற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உறுப்பினரின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக உறுப்பினர் மனோகரன் துணைக் கேள்வியை கேட்க சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதித்தார். மனோகரன் பேசும்போது, திமுக ஆட்சியில் சட்டங்களை திருத்தம் செய்தனர் என்று சொன்னார்.
அதற்கு திமுக கொறடா சக்கரபாணி எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். (அப்போது, திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் போட்டனர். பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும் கோஷம் போட்டனர். இதனால் அவையில் கூச்சல் ஏற்பட்டது.)
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி:
துரைமுருகன் பாடி லேங்குவேஜ் மூலம் அவையில் கிண்டல், நக்கல் செய்கிறார்.
சபாநாயகர்:
பாடி லேங்குவேஜ் மூலம் கிண்டல் செய்வது உறுப்பினர்களின் உரிமையைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக அமைச்சர் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அவையில் கிண்டல் செய்வதை அனுமதிக்க முடியாது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர் கே.பி.முனுசாமி:
துரைமுருகன் அவையில் நக்கல் பண்ணிக்கொண்டும் காலை ஆட்டிக்கொண்டும் இருக்கிறார். ஒரு உறுப்பினருக்கு இது அழகல்ல. ஒரு மூத்த உறுப்பினர் இதுபோன்று நடந்து கொள்வதை தயவு செய்து நிறுத்த வேண்டும். துரைமுருகன் செய்வதை பார்த்து மற்றவர்களும் செய்ய நேரிடும்.
சரத்குமார்:
அவர்களின் தலைவர் எப்படியோ அதைப்போல் அவர்களும் நடந்து கொள்கிறார்கள்.
(இதைக்கேட்டதும் துரைமுருகன் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றார். இதனால், அவையில் தொடர்ந்து கூச்சல் எழுந்தது.)
அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்:
உறுப்பினர் மனோகரன் கடந்த ஆட்சியில் உள்ள சட்ட திட்டங்கள் குறித்து பேச ஆரம்பிக்கும்போதே திமுக உறுப் பினர்கள் பிரச்னையை ஆரம்பித்து விட்டார்கள். சபையின் விதிக்கு உட்பட்டு, சபையின் மரபுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தாமல் அவை நடவடிக் கைகளில் பங்கேற்க வேண்டும்.
அப்போது, துரைமுருகன் மீண்டும் ஏதோ பேச முற்பட்டார். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.
சபாநாயகர்:
நீங்கள் என்ன செய்தீர்களோ அதற்குத்தான் அமைச்சர் பதிலளித்தார்.
(இந்த கூச்சல் நடந்துகொண்டிருக்கும்போது முதல்வர் ஜெயலலிதா அவைக்குள் வந்து அமர்ந்தார்)
அப்போது, ஆயிரம் விளக்கு தொகுதி வளர்மதி (அதிமுக) எழுந்து, “நியாயத்தை பற்றி துரைமுருகன் பேசுகிறார். இதே அவையில் எங்களது கட்சி தலைவர் இந்த அவைக்கு வந்தபோது அவரது சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சி செய்த துச்சாதனன் கூட்டத்துக்கு தலைமையேற்றவர் தானே அவர்” என்றார்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment