கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 25, 2011

திருச்சி மத்திய சிறையில் திமுகவினருடன் மு.க.அழகிரி சந்திப்பு


திருச்சி மத்திய சிறையில் உள்ள திமுகவினரை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி 24.08.2011 அன்று சந்தித்து பேசினார்.
திருச்சி மத்திய சிறையில் அட்டாக் பாண்டி, எஸ்.ஆர். கோபி, முன்னாள் அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சந்தித்து பேசுவதற்காக 24.08.2011 அன்று மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன் ஆகியோர் திருச்சி வந்தனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி ஆகியோரும் வந்தனர்.
திருச்சி வந்த மத்திய அமைச்சர்களை, மாவட்ட திமுக சார்பில் இளைஞரணி செயலாளர் அன்பில் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் கே.என்.சேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் மத்திய சிறைக்கு சென்ற மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன், சிறையில் இருந்த அனிதாராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.கோபி ஆகியோரை சந்தித்தனர். திருச்சி சிறையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே விசாரணை கைதிகளை சந்திக்க அனுமதி வழங்கப்படும். செவ்வாய், வியாழன் ஆகிய 2 நாட்களில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டோர் மற்றும் தண்டனை கைதிகளை பார்க்க அனுமதி வழங்கப்படும்.
24.08.2011 அன்று புதன்கிழமை என்பதால் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள அட்டாக் பாண்டியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. சிறையில் உள்ள திமுகவினரை பார்க்க சென்ற மத்திய அமைச்சர்களுடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, ஆகியோரும் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் 3 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறி மூர்த்தியை விட மறுத்தனர். இதையடுத்து, மூர்த்தி சென்று பார்த்து விட்டு வந்த பின்னர் கே.என்.நேரு சிறைக்குள் சென்று திமுகவினரை சந்தித்தார்.

No comments:

Post a Comment