கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

இலங்கை தமிழர் பிரச்னையில் கண்துடைப்பு நாடகம் நடத்தியது யார்? : கலைஞர் அறிக்கை


திமுக தலைவர் கருணாநிதி 13 .08 .2011 அன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை வருமாறு:
தி.மு.க ஆட்சியில் தினமும் அரிசி கடத்தல் பற்றி ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டிருந்தாரே, இப்போது அந்த பிரச்னை தீர்ந்து விட்டதா?
அம்மையார் அறிக்கை விடும் படலம் முடிந்து விட்டது. ஆனால் அரிசி கடத்தல் அதிகமாக நடக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடத்தப்பட்ட 145 டன் அரிசி புதுவை மாநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிமுக ஆதரவு ஏட்டில் 6ம் தேதி செய்தி வந்துள்ளது.
கேரள முதலமைச்சர் மீது விஜிலன்ஸ் குற்றச்சாட்டு என்றதும், விஜிலன்ஸ் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகிக் கொண்டிருக்கி றாரே?
அது கேரளா. இங்கே முதல்வர் மீது விஜிலென்ஸ் துறை சார்பில் பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. இருந்தாலும் விஜிலென்ஸ் துறையை முதலமைச்சர் ஜெயலலிதாதான் வைத்திருக்கிறார். அந்த துறை சார்பில் நடைபெறும் வழக்கிலும், தான் வகிக்கும் அந்த துறையின் சார்பில் மீண்டும் அந்த வழக்கில் விசாரணை நடத்த கோரிக்கை வைக்கி றார். இது முற்றிலும் நியாயமல்ல. கேரள முதல்வர் தன் மீது விஜிலன்ஸ் குற்றச்சாட்டு எழுந்ததும் அந்த துறையின் பொறுப்பிலிருந்து விலகி, விசாரணையை சந்திப்பேன் என்று சொல்லியிருக்கிறார். தான் தவறு செய்யவில்லை என்ற மன துணிச்சல் அவருக்கு இருக்கிறது.
நீங்களும்தான் முதல்வராக ஐந்து முறை இருந்தீர்கள். ஆனால் சட்டமன்றத்தில் தற்போது ஜெயலலிதாவை கொசு கடித்தால்கூட செய்தியாக வெளியிடுகிறார்களே?
பாவம், அன்றைய தினம் திமுக மீதும் என் மீதும் வசைமாரி செய்தி வெளியிட எதுவும் கிடைக்காமல் போயிருக்கும்.
உயிரோடு இருக்கும் வரையில், அவர்தான் அந்த கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று ஜெயலலிதாவே அறிவித்துக் கொண்டிருக்கிறாரே?
இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜனநாயகவாதி என்று அமைச்சர்கள் எல்லாம் மாலை ஏடுகளில் விளம்பரம் தரலாம்.
இது பேரவை தலைவரின் தவறு என்று ஜெயலலிதா அவையிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறாரே, அவ்வாறு தலைவர் மீது குற்றஞ்சாட்டலாமா?
ஜெயலலிதா முதல்வராக இருந்தால் குற்றமும் சாற்றலாம். நீங்கள் உங்கள் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ளுங்கள். நான் அமர வேண்டும் என்றும் சொல்லலாம். உறுப்பினர்கள் கேட்கின்ற கேள்விகளைத்தான் பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர் முதன் முதலாக கேள்வி கேட்கிறார்.
அவருக்கு அரசின் சார் பில் சாதகமான பதிலைச் சொல்கின்ற கேள்வியைத்தான் பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த விதியின் கீழ் என்பதுதான் தெரியவில்லை. எல்லாம் தமிழகத்தின் தலைவிதி. அது மாத்திரமல்ல. உறுப்பினர்களுக்கு பேரவை விதிமுறைகள் தெரியவில்லை என்றும், அதைப் பேரவைத் தலைவர் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும், அதை அவர் செய்யாததால் முதல் அமைச்சரே செய்ய வேண்டியிருக்கிறது என்றும் முதலமைச்சர் நொந்து கொண்டிருக்கிறார். பாவம் முதல் அமைச்சர்.
இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை கண் துடைப்பு நாடகங்கள் என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறாரே?
1956ம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு.க பொதுக்குழுவில் அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான். 24&8&1977ல் சென்னை மாநகரிலே ஒரே நாள் அறிவிப்பில் ஐந்து லட்சம் பேரைத் திரட்டி இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக பிரம்மாண்டப் பேரணி நடத்தக் காரணமாக இருந்தவனும் நான்தான்.
1981ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்ததும், 13&8&1981ல் இந்திய பிரதமருக்கு தந்தி அனுப்பியதும் நான்தான். இதே இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக 81 ஆகஸ்ட் 15ல் அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்டதும் நான்தான்.
25&7&1983ல் வெலிக்கடை சிறையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற 35 தமிழர்களை படுகொலை செய்தபோது சென்னையில் 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரைக் கூட்டி மாபெரும் பேரணி நடத்தக் காரணமாக இருந்ததும் நான்தான்.
மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறை காட்டிட வேண்டுமென்பதற்காக 10&8&1983ல் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தது பேராசிரியரும் நானும்தான். 16&5&1985ல் காஞ்சிபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக மறியலில் கைது செய்யப்பட்டேன்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை அடுத்து சென்னையில் ஊர்வலம் நடத்தி, அதன் தொடர்ச்சியாக நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப் பெறச் செய்ததும் நான்தான்.
இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டி 1986ம் ஆண்டு மே மாதம் மதுரையில் டெசோ சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்தியது யார்? நான் தான்.
1989 டிசம்பரில் இலங்கைப் பிரச்னைக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண வேண்டுமென்று விரும்பி, அன்றைய பிரதமர் வி.பி.சிங் யோசனையில், பல்வேறு போராளிக் குழுவினரையும் தனித்தனியாகச் சந்தித்து உரையாடிவிட்டு, 19&12&1989ல் டெல்லியில் பிரதமரைச் சந்தித்து விவரங்களைக் கூறியதும் நான்தான்.
1990ம் ஆண்டு ஜூனில் நான் டெல்லியில் முகாமிட்டு, பிரதமரிடம் வலியுறுத்தியதன் தொடர்பாக, 19ம் தேதி மாலையில் பிரதமர் வி.பி.சிங் தனது இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.
அந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, கேரள முதல்வராக இருந்த நாயனார், ஒரிசா பிஜூ பட்நாயக், அசாம் மகந்தா, இமாசலப் பிரதேச சாந்தகுமார், சிக்கிம் பண்டாரி, புதுவை முதல்வராக இருந்த டி. ராமச்சந்திரன் மற்றும்
மத்திய அமைச்சர்கள் அருண் நேரு, முப்தி முகமது சயீத், முரசொலி மாறன், குருபாதசாமி, தினேஷ் கோசுவாமி, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன் மற்றும் இந்தியத் தலைவர்களான அத்வானி, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத், வாஜ்பாய், சிட்டபாசு எம்.பி., சாமர் முகர்ஜி எம்.பி., இந்திரஜித் குப்தா, பரூக்கி ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கைப் பிரச்னை குறித்து அனைத்து விவரங்களையும் அவர்களிடம் விளக்கியதும் நான்தான்.
23&4&2008ல் தி.மு.க ஆட்சியில் சட்டப் பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 6&10&2008ல் பிரதமர் மன்மோகன்சிங்கை தொடர்பு கொண்டு பேசினேன். இலங்கைத் தூதரை மத்திய அரசு உடனடியாக நேரில் அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தமிழர்களைக் கொல்வது குறித்து, இந்தியாவின் மன உளைச்சலை தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் நான்தான்.
2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாத்திரம் 7&12&2006, 23&4&2008, 12&11&2008, 23&1&2009 தேதிகளில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக பேரவையில் தீர்மானங்களை முன்மொழிந்தது நான்தான்.
14.10.2008ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியதும் நான்தான். 15.10.2008ல் பிரதமருக்கு இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து கடிதம் எழுதியதும் நான்தான். 13.11.2008ல் உணவுப் பொருட்கள், துணிவகைகள் மற்றும் மருந்து பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்காக கப்பல் மூலம் அனுப்பி வைத்ததும் நான் தான்.
2009ம் ஆண்டு பேரவையில் தீர்மானம் வந்தபோது தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட தயார் என்று அறிவித்தவன் நான்தான். இதையெல்லாம் நான் செய்தது கண் துடைப்பு நாடகமாம். எது உண்மை நாடகம் தெரியுமா?
16&4&2002ல் சட்டப் பேரவையில் ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை பிடித்து, நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசை தமிழகச் சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் ஜெயலலிதா.
17&1&2009ல் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா.
4&11&2007ல் மைனாரிட்டி தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வன்முறை கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது என்றும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு மறைமுகமாக கருணாநிதி ஆதரவு தருகிறார் என்றும் பல முறை தெளிவுபடுத்தியிருக்கிறேன் என்று அறிக்கை விடுத்தவர் ஜெயலலிதா. கண் துடைப்பு நாடகம் ஆடுவது யார் என்று இப்போது தெரிகிறதா?
அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக விடாமல் தடுத்தது நீங்கள்தான் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே?
பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி காலத்தையும் கண்ணியத்தையும் வீணாக்க விரும்பவில்லை.

நான் எழுதிய ''தொல்காப்பியப் பூங்கா'' புத்தகத்திறக்ôக - ''தொல்காப்பியர்'' விருதினை எனக்கு வழங்கி - அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையையும் அறியாதவர்கள் இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள்?


இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment