ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனிநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கை முடக்குவதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது:
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை முடக்க முயற்சி நடக்கிறது. இதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்படும் கோரிக்கை மனுக்களை நிராகரிக்க வேண்டும்.
இவ்வழக்கின் தற்போதைய நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மேல் விசாரணை தேவையில்லாதது. அதுபோன்ற விசாரணையை அரசு வக்கீலுக்கு தெரியாமலேயே விசாரணை அதிகாரி நடத்த முயற்சித்து வருகிறார் அதற்கு தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெகன்னாதன், இம்மாதம் 4ம் தேதிவரை மேல்விசாரணை எதுவும் நடத்தக்கூடாது என தடை விதித்திருந்தார். இந்நிலையில், 03.08.2011 அன்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை அதிகாரிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் நானையா, தவிர்க்க முடியாத காரணங்களால் விசாரணையை 9ம் தேதிக்கு ஒத்திவைக்க கோரினார். அதை ஏற்ற நீதிபதி, விசாரணையை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment