கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

பக்கங்கள் நிறைந்திருக்கிறது திட்டம், நோக்கம் இல்லாத பட்ஜெட் - திமுக தலைவர் கருணாநிதி


“தமிழக பட்ஜெட் அறிவிப்பில் பக்கங்கள் நிறைந்திருக்கிறதே தவிர திட்டங்களோ, நோக்கங்களோ எதுவும் இல்லை” என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் குறித்து திமுக தலைவர் கருணாநிதி 04.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சி காலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, “அரசின் மொத்தக் கடன் ணீ1,01,541 கோடியாக அதிகரிக்கும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் கருணாநிதியின் 5 ஆண்டு சாதனை” என்று அறிவித்திருந்தார். இந்தக் கடனைக் குறைப்பதற்காக மதிப்பு கூட்டு வரியினை உயர்த்தினார். பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தினார்.
டாஸ்மாக் மது பானங்களின் விலையை உயர்த்தினார். மொத்தமாக 5200 கோடி ரூபாய்க்கு கூடுதல் வருமானத்தை அறிவித்தார்கள். அதன் பிறகு இந்த வரி உயர்வினால் பாதிக்கப்பட்ட ஒரு சில முதலாளிகள் நேரில் அம்மையாரை முறைப்படி சந்தித்த பிறகு, அந்த வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தார்கள்.
வரி உயர்வை அறிவித்த போது, கருணாநிதி ஒரு லட்சத்து ஓராயிரம் ரூபாய்க்கு கடன் வைத்து விட்டுப் போய்விட்டார். அதைக் குறைக்கப்போகிறோம் என்றார்கள். ஆனால் இன்றைய பட்ஜெட்டில் எந்த அளவுக்கு இந்த 3 மாத காலத்தில் குறைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் 2012 மார்ச் 31 அன்று மாநில அரசின் கடன் ரூ.1,18,801 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆக 3 மாதத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மதிப்பு அதிகமாகும் என்று பட்ஜெட் அறிக்கை கூறுகிறது. இது தான் ஜெயலலிதாவின் 3 மாத கால சாதனையா என்று அம்மையாரின் பாணியில் நான் கேட்க விரும்பவில்லை.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதைப் பற்றி திமுக அரசின் பட்ஜெட்டில் விளக்கமாக சொல்லவில்லை என்று அப்போது கருத்து தெரிவித்த ஜெயலலிதா, தற்போது படிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டிலும் அதைப்பற்றி விளக்கமாக எதுவும் கூறவில்லை. அதிலிருந்து ஊருக்குதான் உபதேசமோ என்று கேட்கத் தோன்றுகிறது. பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறை பற்றி வெளியிடும் போது மாணவர்களின் முக்கிய பிரச்னையாக உள்ள சமச்சீர் கல்வி முறை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஒவ்வொரு துறை சார்பிலும் அரசுக்கு அனுப்பிய குறிப்புகளை அப்படியே தொகுத்தும், கடந்த 3 மாத காலத்தில் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை ஒருங்கிணைத்தும் பட்ஜெட் என்ற பெயரில் பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார்கள். பக்கங்கள் நிறைந்திருக்கிறதே தவிர திட்டங்களோ, நோக்கங்களோ எதுவும் இந்த பட்ஜெட்டில் இருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
பகுத்தறிவுச் சுடர்
“திமுக ஆட்சியில் 5&2&11 அன்று தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் காலை 10.30 மணி அளவில் வைக்கப்பட்டபோது, அந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, காலை 10.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ராகு காலத்தை மனதிலே வைத்து நிர்ணயிக்கப்பட்டது என்றும் அது கருணாநிதியின் பகுத்தறிவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறியிருந்தார்.
ஆனால், இன்றைய தினம், பகுத்தறிவு சுடர் ஜெயலலிதா, பட்ஜெட் சரியாக 10.40 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து விட்டு பட்ஜெட்டை படிக்கச் செய்திருக்கிறார்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment