கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 30, 2011

தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் : கலைஞர் கருணை மனு


ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற மூன்று பேரையும் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
மனித உரிமைக்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான து�க்குத் தண்டனை தேவையில்லை என்றும், அதனை எல்லா நாடுகளும் ரத்து செய்து விடலாமென்றும் கருத்து தெரிவிக்காதோர் யாரும் இல்லை. உயர்ந்த பட்சத் தண்டனையான து�க்கு தண்டனைக்குப் பதிலாக, கொலைக் குற்றம் சாற்றப்பட்ட ஒரு கைதி எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அந்தக் குற்றத்தை எண்ணியெண்ணி தனக்குத் தானே வருந்துவதை விட து�க்குத் தண்டனையால் பெரிய பயன் ஒன்றும் விளைந்து விடப்போவதில்லை.
கொலைக் குற்றத்தில் ஒரு மனிதன் ஈடுபட்டிருப்பானேயானால், அவன் அதற்காக ஆயுள் முழுவதும் வருந்தி வாடுவதுதான், து�க்குத் தண்டனையை விடக் கடுமையானது என்பது மட்டுமல்ல, அந்த மனிதன் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினை வழங்கி, வழி வகுத்திடக் கூடியதுமாகும். இந்த எண்ணத்தின் அடிப்படையில் து�க்கு தண்டனையே கூடாது என்ற கருத்தை பல்லாண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன்.
இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரையில், தமிழீழப் போராளிகள் வெலிக்கடை சிறைச்சாலையிலே சித்திரவதை செய்யப்பட்டு, செத்து மடிந்த காலந்தொட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் போராளிகளும், சிங்கள ராணுவத்தால் தாக்குண்டு மாண்ட அப்பாவித் தமிழர்களும் தாய்த் தமிழகத்தில் உள்ள நம்மை கண்ணீர்க் கடலில் மிதக்க விட்ட போது போர் என்றால் இதெல்லாம் நடக்கும்தான் என்றெண்ணி நாம் கிடந்திடவில்லை.
மத்தியப் பேரரசுக்கு நாம் எழுதிய மனமுருக்கும் கடிதங்களும் பிரதமர் மற்றும் இந்தியத் தலைவர்கள் அனைவரிடமும் நேரில் எடுத்து வைத்த கோரிக்கைகளும் யாரும் அறியாதது அல்ல. அறியாதோர் போல நடிப்பது அரசியலுக்காகவே அன்றி வேறல்ல. அதனை விவாதிக்க விரும்பவும் இல்லை. விவாதிப்பதற்கான நேரமும் காலமும் இதுவுமில்லை.
அனைத்தையும் மறந்து விட்டு, இன்று நம் உள்ளத்தை உருக்கும் பிரச்னையாக உருவெடுத்திருக்கின்ற மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதைத் தடுத்து உதவிடும் பணி நம் கண் முன்னே பேருரு எடுத்திருக்கிறது. அந்தப் பணியை நிறைவேற்றித் தரும் பொறுப்பையேற்று து�க்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்போவதாகக் கூறப்படும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களைக் காத்தருள வேண்டும்.
இன்று நம்மிடையே இல்லாத இளந்தலைவர் ராஜீவ் காந்தியே இருந்தால்கூட, இந்தச் சூழலில் உண்மைத் தமிழர்களின் குரலுக்கு மதிப்பளித்து, �மறப்போம், மன்னிப்போம்� எனும் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப இந்த மூவரின் உயிரையும் அந்த மாமனிதர் காப்பாற்றியிருப்பார். இதை எண்ணி மரண தண்டனையை மாற்றியமைத்து, அவர்கள் உள்ளபடியே குற்றம் புரிந்திருந்தால் அதற்காக மனம் வருந்தும் நிலையில் அவர்கள் இதற்காக 20 ஆண்டு காலத்திற்கு மேல் சிறையில் இருந்ததையே ஆயுள் தண்டனையை விட அதிகமானதெனக் கருதி து�க்கு தண்டனையை ரத்து செய்தால், இந்த மனித நேயச் செயலை மனமாரப் புகழ்ந்து மகிழக் கூடிய இனமாக தமிழினம் இருக்கும்.
இந்த மூவரையும் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றும், து�க்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய து�ய வாழ்வினை மேற்கொண்டு அதனைத் தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் என்ற முறையிலும், அவர்களின் விடுதலைக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவன் என்ற அடிப்படையிலும், மத்திய, மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதை கருணை மனுவாகக் கருதிட வேண்டு கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment