கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 28, 2011

ஜெயலலிதாவை பாராட்டுவதில் கம்யூனிஸ்ட்கள் இடையே போட்டி : கலைஞர் அறிக்கை


திமுக தலைவர் கருணாநிதி 27.08.2011 அன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை வருமாறு:
தி.மு.க ஆட்சியில் சிலருக்கு முறைகேடாக வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் புகார் கூறியிருக்கிறாரே?
அமைச்சரே சுட்டிக் காட்டியிருக்கின்ற தி.மு.க. தொழிற்சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பூச்சி முருகன். அமைச்சரே கூறியதைப் போல ஸீ6000சம்பளம் பெறுபவர். அப்படிப்பட்ட நிலையிலே உள்ளவர் களுக்குத்தான் தி.மு.க ஆட்சியில் வீட்டுவசதி வாரிய மனைகள், அதுவும் முதலமைச்சர் தனது விருப்புரிமை அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும், இஷ்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய லாம் என்ற விதிமுறைப்படி உள்ளவைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நிலைமை?
அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என்.நாராயணன் ஐஏஎஸ்க்கு 1993ம் ஆண்டு 4115 சதுர அடி மனை ஒதுக்கப்பட்டது உண்டா இல்லையா? தற்போது அ.தி.மு.க. அமைச்சராக உள்ள செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் என்பவர் பெயரில் பெசன்ட் நகர் பகுதியில் 1995ம் ஆண்டு 4535 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது உண்டா இல்லையா?
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதிக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம் தரப்பட்டதா இல்லையா? அதைப்போலவே முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மனைவி நூர்ஜமீலாவுக்கு, எஸ்.எம்.வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கொடுக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் என்று எடுத்துக் கொண்டால் தேவாரம், ஆர்.நடராஜ் முதல் அமைச்சரிடம் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜன் என்று நீண்ட பட்டியலே உள்ளதே. நான் அவைகளை எல்லாம் தவறு என்று சொல்லவில்லை. முதலமைச்சருக்கு உள்ள விருப்புரிமையின் அடிப்படையில் தரப்பட்டவை.
ஆனால் இதிலே குற்றச்சாட்டு கூறப்பட்டதும் இனிமேல் இவ்வாறு விருப்புரிமை அடிப்படையிலே மனைகளை ஒதுக்குகின்ற அதிகாரத்தையே தேவையில்லை என்று ரத்து செய்தோம். ஆனால் அரசுக்கு அந்த விருப்புரிமை ஆணை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேதான் தரப்பட்டது.
அண்ணா நகரில் அ.தி.மு.க.வின் தொழிலாளர் பேரவைக்கு 3 கிரவுண்ட் நிலம், அ.தி.மு.க. ஆட்சியிலே வழங்கப்பட்டது. அ.தி.மு.க. தொழிற்சங்கப் பேரவையிலே தலைவராக இருந்த பள்ளிப்பாளையம் சண்முகம் என்பவருக்கு சீத்தம்மாள் காலனியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மைதானத்தை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி டானியல் எட்வின் பிரேம்குமார் என்பவருக்கு மறைமலைநகரில் வீட்டு வசதி வாரியத்திற்கான வீடு (3/53) ஒன்று கிடைத்துள்ளது. அமைச்சர் பேரவையில் பேசும்போது ஒரு வீடு அல்லது மனை இருப்போருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்பது விதி என்று சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி டானியல் எட்வின் பிரேம்குமாரின் மனைவி பியுலா பிரேம்குமார் என்பவருக்கு மறைமலை நகரில் எம்.ஐ.ஜி. எம்.26 என்ற மனை அ.தி.மு.க. ஆட்சியிலே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அம்மையார் மத்திய அரசு அலுவலர். ஆனால் இவரை சமூக சேவகர் என்ற பிரிவில் காட்டி வீட்டினை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.
மற்றொரு அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி எம்.மதுரை என்பவர் தஞ்சையில் ஒரு வீட்டு வசதி வாரிய வீட்டையும், கரூரில் சனப்பிரட்டி பகுதி 2 ஆ.99 என்ற இடத்தில் ஒரு மனையையும், சென்னையில் சி.ஐ.டி. நகரில் ஒரு வாடகை வீட்டையும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்றிருக்கிறார். இதை யெல்லாம் அப்படியே மூடி மறைத்துவிட்டு, பேரவையிலே ஏதோ தி.மு.க ஆட்சியில் தவறு நடைபெற்றதைப் போல அமைச்சர் கூறியிருப்பதால், இந்த விளக்கங்களையெல்லாம் தர வேண்டியதாயிற்று. கோட்டான் குயிலையும், வான்கோழி மயிலையும் பழிப்பதா?
மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்தரராஜன் பேரவையில் ஆளுங்கட்சியை விடத் தீவிரமாக, முன்னாள் அமைச்சர் ஒருவரை மாமியார் வீட்டுக்கு அனுப்புவது எப்போது என்று கிண்டலோடு கேள்வி கேட்டிருக்கிறாரே?
கருடா சவுக்கியமா என்று சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்ட கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
கேட்டதைக் கொடுப்பது அ.தி.மு.க. அரசு, கேட்டாலும் கொடுக்காதது மத்திய அரசு என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?
திட்டக் குழு விவாதத்தில் கலந்து கொண்டபோது மத்திய அரசு மாநில அரசு கேட்டதைவிட அதிகமாகக் கொடுத்ததாக கூறியதும் இதே முதல்வர்தான். இப்போது கேட்டாலும் கொடுக்காதது மத்திய அரசு என்று சொல்பவரும் இவரேதான்.
தி.மு.க அரசு ஆட்சி இருந்தபோது, மைனாரிட்டி தி.மு.க அரசு மத்திய அரசிடம் ஏன் வாதாடிப் பெறவில்லை, இங்கேயே இருந்துகொண்டு கேட்டால் கிடைத்து விடுமா? கடிதம் எழுதினால் போதுமா? எனவே அது கையாலாகாத அரசு என்றெல்லாம் வக்கணையாக அறிக்கை விட்ட ஜெயலலிதா தற்போது அந்த அறிக்கைகளை மீண்டும் படித்துப் பார்ப்பது நல்லது.
இந்தியக் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஒருவர் பேசும்போது, முதல்வர் தலைமையில் மத்தியில் ஒரு மாற்றம் வரும்போது கேட்டது கிடைக்கும் என்று பாராட்டியிருக்கிறாரே? இது எங்கே போய் முடியும்?
மார்க்சிஸ்ட் முன்னணி தலைவர் தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினரோடு தனியாகப் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது திமுக உறுப்பினர், அவரைப் பார்த்து, �உங்கள் கட்சி கொள்கையிலே முன்பெல்லாம் தீவிரமாக இருக்கும், ஆனால் இப்போது கொள்கையைப் பறக்க விட்டு விட்டு, அ.தி.மு.க.வை விழுந்து விழுந்து ஆதரிக்கிறீர்களே, என்ன காரணம்?� என்று கேட்டதற்கு, அந்த மூத்த மார்க்சிஸ்ட் உறுப்பினர், என்ன செய்வது? இப்போது எங்கள் கட்சிக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே யார் அதிக அளவுக்கு முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுவது என்பதிலே கடுமையான போட்டி நடைபெறுகிறது. அதன் விளைவுதான் இது என்று பதில் கூறினாராம்.
கல்வித் துறை மானியத்தின்போது அந்தத் துறையின் அமைச்சர் பதிலுரையில் அறிவிக்க வேண்டியதையெல்லாம் ஜெயலலிதா 110ம் விதியின் கீழ் அறிக்கையாக படித்துள்ளாரே?
அமைச்சர் பதிலுரையில் கூறியிருந்தால் முக்கியத்துவம் இல்லாமல் போய் விடும் என்பதால் அறிக்கையாக படித்துள்ளார். அவரே படித்து விட்டு, 110ம் விதியின் கீழ் அறிக்கை படித்தால் விளக்கம்தான் கேட்கக் கூடாது, பாராட்டுரை வழங்கலாம் என்று அவரே கேட்டு, நிதியமைச்சரும், கல்வியமைச்சரும் அவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment