கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

நில அபகரிப்பு வழக்கு நடிகை குட்டி பத்மினி புகாரில் உண்மை இல்லை : கமிஷனரிடம் தி.மு.க மனு


முன்னாள் திமுக எம்எல்ஏ இ.ஏ.பி.சிவாஜி மீது நடிகை குட்டி பத்மினி மகள் அளித்த புகாரில் உண்மை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொய் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் 13 .08 .2011 அன்று காலை கமிஷனர் அலுவலகம் வந்தனர். உளவுத்துறை இணை கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் மாதர்பாக்கம் கிராமத்தில் 5.02 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் நிலத்தை குட்டி பத்மினி, தனது மைனர் மகள்கள் கீர்த்தனா மற்றும் ரித்தினிகா நேபால் பெயரில் கிரையம் பெற்றார். அதில், 4 ஏக்கரை முன்னாள் திமுக எம்எல்ஏ சிவாஜியின் நண்பர் உமாபதி என்பவருக்கு க்ஷீ2 லட்சத்து 25 ஆயிரத்திற்கு கிரையம் கொடுக்க சம்மதித்து, க்ஷீ2 லட்சத்தை முன்பணமாக பெற்றார். இதற்காக கடந்த 2006 பிப்ரவரி 2ம் தேதி எழுத்து மூலமாக இரண்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார்.
குட்டி பத்மினி வேண்டுகோளின்படி கடந்த 2009 மார்ச் 3ம் தேதி இரண்டு கிரைய பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு மீதி கிரையத் தொகை க்ஷீ1 லட்சத்தை பெற்றுக் கொண்டு அன்று மாலை 4 மணிக்கு கும்மிடிப்பூண்டி வந்தார். ஆனால், தனது மகள்கள் பத்திரப்பதிவு செய்து கொடுக்க தற்போது ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறி மறுத்து விட்டார்.
இதனால், கிரைய ஒப்பந்தம் செய்த உமாபதி பொன்னேரி சார்பு நீதிமன்றத்தில் சொத்துக்கு தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்த வழக்கை சென்னையில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ரித்திகா மற்றும் கீர்த்தனா ஆகியோர் தாக்கல் செய்த இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
குட்டி பத்மினிக்கு சொந்தமாக இருந்த 4 ஏக்கர் நிலத்தில் ஒரு சென்ட் நிலம் கூட சிவாஜியோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கிரையம் பெறவோ அல்லது கிரைய ஒப்பந்தம் செய்து கொள்ளவோ இல்லை. இந்த சொத்திற்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. கிரைய பத்திரம் செய்து கொண்ட அன்று அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது.
அப்போது அவர் எம்எல்ஏவாக இல்லை. தற்போது அதிமுக அரசு திமுக முன்னணியினர் மீது பொய் வழக்குகள் சுமத்தி கட்சிக்கும், அவர்களின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியே சிவாஜி மீது கொடுக்கப்பட்டுள்ள பொய் புகார்.
எனவே, கீர்த்தனா கடந்த 11ம் தேதி சிவாஜி மீது கொடுத்துள்ள புகாரின் மீது மேல் நடவடிக்கையினை கைவிடுமாறு வேண்டுகிறேன். பொய் புகார் கொடுத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment