திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், மு.க.ஸ்டாலின் தலைமையில் 04.08.2011 அன்று நடந்தது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 04.08.2011 அன்று தொடங்குகிறது. இதையொட்டி, திமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் 03.08.2011 அன்று மாலை 5.45 மணி முதல் 7.30 மணி வரை நடந்தது.
இந்த கூட்டத்துக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கொறடா சக்கரபாணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பது என்றும், பேரவையில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும், கூட்டத்தில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment