நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வீரபாண்டி ஆறுமுகம், ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ.வை சென்னை மேயர் மா. சுப்பிரமணியன்,முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்.பி. மு.ராமநாதன், திண்டுக்கல் லியோனி மீன்கடை சிவா, வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா மற்றும் குடும்பத்தினர் வீரபாண்டி ஆறுமுகம், அன்பழகனை 03.08.2011 அன்று சந்தித்து பேசினர்.
பின்னர் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து திமுகவினர் மீது பல நிலமோசடி பொய் புகார்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்போம். பொய் வழக்கு போடுவதாலேயே ஆட்சி நிலைத்ததாக வரலாறு இல்லை. அதேபோல் பொய் வழக்குகளுக்கு ஆட்பட்டுள்ள ஒரு கட்சி அழிந்துபோனதாக சரித்திரம் இல்லை. இதுபோன்ற பொய் வழக்குகளை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம். உண்மை ஒருநாள் வெளிப்படும்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார். நில அபகரிப்பு தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற்று முறையான ஆவணங்களை சரி பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுப்பதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கூறி உள்ளாரே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த துரை முருகன்,
பொய் வழக்கு போடுவதை யார் தான் ஒத்துக் கொள்வார்கள். நில அபகரிப்பு உண்மையா? இல்லையா? என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் என்றார்.
No comments:
Post a Comment