சமச்சீர் கல்வி வழக்கில் அரசு வக்கீலிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக்வர்மா ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு சார்பாக வக்கீல் பி.பி.ராவ், குரு கிருஷ்ணகுமார், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக வக்கீல்கள் அரிமா சுந்தரம், ராஜீவ் தவான் ஆகியோரும் வாதாடினர்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு 03.08.2011 அன்று 6ம் நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெற்றோர் சார்பாக மூத்த வக்கீல்கள் பிரசாந்த் பூஷண், ரவிவர்மா, என்.ஜி.ஆர். பிரசாத், துருவமேத்தா, கே.பாலு ஆகியோர் ஆஜரானார்கள்.
மூத்த வக்கீல்கள் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடியதாவது:
சமச்சீர் கல்வி தரமானது. தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்குகிறார்கள். இதை தடுக்கத்தான் சமமான ஒரே சீரான கல்வி தர அரசு நடவடிக்கை எடுத்து, சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது. இதற்காக சட்டமும் கடந்த அரசு இயற்றியது. இதை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த சபீதா, சமச்சீர் கல்வி சரியானது என்று கூறி, சமச்சீர் கல்வி புத்தகம் அச்சடிக்க ஒப்புதல் வழங்கினார். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி தரமற்றது என்று கூறுகிறார். இது, எந்த விதத்தில் நியாயமானது. சமச்சீர் கல்வி திருத்த சட்டத்தை உயர் நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினர்.
இவ்வாறு அவர் வாதாடினர்.
பின்னர், அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆஜராகி, ��சமச்சீர் கல்வி திருத்த சட்டம் சரியானது தான். இதற்காக நிபுணர்கள் குழு அறிக்கை கொடுத்துள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்க வேண்டும்” என்றார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, “கடந்த 2 மாதமாக மாணவர்கள் எந்த புத்தகமும் படிக்காமல் உள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி படித்தனர். அவர்கள் 2ம் வகுப்பு, 7ம் வகுப்பு படிக்கிறார்கள். அவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகத்தை கொடுப்பீர்களா அல்லது எதை கொடுப்பீர்கள்?” என்றார்.
இதற்கு பி.பி.ராவ் பதில் அளிக்கும் போது, “மாணவர்களுக்கு அடிப்படை கல்வி போதிக்கப்பட்டது” என்றார்.
பின்னர் நீதிபதிகள் குறுக்கிட்டு, “சமச்சீர் கல்வி வழக்கு தொடர்ந்து பல நாட்களாக நடந்து வருகிறது, அரசு தரப்பு வாதத்தை நாளைக்குள் முடிக்க வேண்டும்” என்றனர்.
இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை 04.08.2011 அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment