03.08.2011 அன்று மக்களவையில் விலைவாசி பிரச்சனை மீது வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும் இதற்கான தீர்மானத்தை பாஜக கொண்டுவந்தது.
விவாதத்தில் திமுக சார்பில் பேசிய டிகேஎஸ் இளங்கோவன்,
அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொதுவிநியோகத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். விலைவாசி உயர்வுக்கு இடைத்தரகர்களே காரணம். இதனை ஒழிக்க உழவர் சந்தைகளை நாடு முழுவதும் தொடங்க வேண்டும்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் உழவர் சந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு இடத்தில் நேரடியாக தங்கள் விலை பொருட்களை விற்று வந்தனர். இதில் இடைத்தரகர்கள் யாருமில்லை. இடைத்தரகர்களே விலைவாசி உயர்வுக்கு காரணம். அவர்கள் செயல்பட அனுமதிப்பதால் அரசும் விலையேற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பதுக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்றார்.
No comments:
Post a Comment