கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

நானோ என் குடும்பத்தினரோ என்று ராமதாஸ் சொன்னதை நான் எழுத விரும்பவில்லை! : பொன்முடி பரபரப்பு அறிக்கை!


முன்னாள் அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இன்றைய சில நாளேடுகளில் பாமகவைச் சேர்ந்த அன்புமணி அவர்கள் பேட்டியளித்ததாக ஒரு செய்தி. அதாவது 'சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியடைவோம் என்று எதிர்பார்க்கவில்லை. பல துறைகளில் அன்றைய ஆளுங்கட்சி தலைமையின் குடும்ப ஆதிக்கமே இதற்கு ஒரு காரணம்' என்று சொல்லியிருக்கிறார்.


திமுகவின் தயவால் மத்தியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகி, அமைச்சராகவும் பதவி வகித்த அன்புமணிக்கு நன்றி வேண்டாம். ஆனால் கடந்த காலத்தை மறந்துவிட்டு 'கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியக் கூடாது' குடும்ப ஆதிக்கத்தைப் பற்றி அன்புமணி பேசலாமா?


அவருடைய தந்தை மரியாதைக்குரிய டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் 'நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்றத்திற்குள் அடி எடுத்து வைக்க மாட்டோம். அப்படி செய்தால்...'', மேலும் அவர் சொன்னதை நான் எழுத விரும்பவில்லை. அது மக்களுக்கே தெரியும். அப்படிச் சொன்ன அவர்தான் ஒவ்வொரு முறை திமுகவோடு கூட்டணி பேசுகிற பொழுதும் டில்லி 'நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஒருவருக்கும்' சேர்த்தே ஒப்பந்தம் இட்டு அதையும் அவர் மகன் அன்புமணிக்கு வழங்கியதை மறக்கலாமா?


டாக்டருடைய மகன் முன்னாள் மத்திய மந்திரி. அவருடைய அக்காள் மருமகள் தங்கராஜ் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். தங்களின் மாமனார் கிருஷ்ணசாமி இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர். வன்னியர் சங்க டிரஸ்ட் - அம்மா சரஸ்வதி பெயரில். தங்களுடைய மைத்துனர் விஷ்ணு பிரசாத் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தங்களுடைய சித்தப்பா சீனுவாசன் சமீப காலம்வரை பாமகவில் ஒரு தூண். இன்று காங்கிரஸ்.


அன்பிற்குரிய அன்புமணி அவர்களே, அரசியலில் கொஞ்சமாவது நாவடக்கம் வேண்டும். நீங்கள் அதிமுகவுடன் அணி சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் 7 இடங்களில் நின்றீர்களே. எத்தனை இடத்தில் வென்றீர்கள் என்பதை எண்ணிப் பார்த்து பேசுங்கள். இனி வருங்காலமும் அதேபோல்தான்.


'மல்லாந்து படுத்துக்கொண்டு காரி உமிழ்ந்தால் தன் மார்பில்தான் விழும்' என்ற பழமொழியை நினைவு படுத்த விரும்புகிறேன். பாமகவில் பலர் காலி செய்துவிட்டு சென்றதே தங்களால்தான் என பேசிக்கொள்வதை சிந்தித்து அரசியல் செய்யுங்கள். தேர்தலிலேயே நிற்காத நீங்கள் இனிமேலாவது 'குடும்ப அரசியல்' என்று பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.


இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment