கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது







திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் 10.08.2011 அன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், 10.08.2011 அன்று மதியம் 4 மணியளவில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனது வீட்டிலிருந்தார். அப்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவரது வீட்டுக்குள் புகுந்து கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.
கைது குறித்து போலீசார் தெரிவித்ததாவது: ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர திமுக சார்பில் கடந்த மார்ச் 1ம் தேதி நகர செயலாளர் சுரேஷ்(37) தலைமையில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழா முடிந்து அவர் காரில் புறப்பட முயன்ற போது 2 மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு ஓடி விட்டனர்.
இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தேடப்பட்ட ஆறுமுகநேரி காணியாளர் தெருவைச் சேர்ந்த சசிகுமார்(37) ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்து, ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் சுரேசுக்கும், சசிகுமாருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. அதன்பிறகு சசிகுமார் குடும்பத்துடன் நாலுமாவடியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நாலுமாவடி பஸ் நிறுத்தத்தில் நின்ற சசிகுமார் கடந்த ஜூலை 10ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குரும்பூர் போலீசார் சுரேஷ் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். கடந்த வாரம் துப்பாக்கியுடன் காரில் வந்த சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சுரேசை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் சசிகுமார் தன்னை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்ததாகவும், இதனடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

போலீசார் கண்ணாமூச்சி :

விசாரணைக்கு எஸ்பி அழைத்து வர கூறியதாக தெரிவித்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை முதலில் வேனில் ஏற்றி தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிறிது நேரம் வைத்திருந்தனர். திருச்செந்தூர் அல்லது ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து வருவார்கள் என எதிர்பார்த்து திமுகவினர் அங்கு காத்திருந்தனர்.
ஆனால் போலீசார் அவரை புதுக்கோட்டை வழியாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு டிஐஜி வரதராஜன் விசாரணை நடத்தினார். பின்னர் அங்கிருந்து ஆறுமுகநேரிக்கு அழைத்து சென்று அங்கும் எஸ்பி நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தினார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலர் பெரியசாமி, நிர்வாகிகள் அங்கு வந்தனர்.


அனிதா ராதாகிருஷ்ணனை சந்திக்க, பெரியசாமி உள்ளிட்டோர் அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. இதனால், தி.மு.க.,வினர் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொலை முயற்சி, கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரவு 11 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூர் கோர்ட் எதிரே உள்ள மாஜிஸ்திரேட் ப்ரீதா வீட்டுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் பாளையங்கோட்டை கொண்டு செல்லப்பட்டார். அதிகாலையில் அங்கிருந்து திருச்சி கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில், கடந்த மே மாதம் 21ம் தேதி ஆறுமுகநேரி நகர தி.மு.க., அலுவலத்திற்கு தீவைத்தது, அடைக்கலாபுரம் ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்திவரும் டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசியது ஆகிய இரண்டு சம்பவங்களுக்கு தூண்டுதலாக இருந்ததாகக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,மீது, மேலும் இருவழக்குகளை ஆறுமுகநேரி போலீசார் தற்போது பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment