கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 6, 2011

குண்டர் சட்டத்தில் பூண்டி கலைவாணன் கைது


திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 29ம் தேதி திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் மாணவர்களை சாலை மறியல் செய்ய தூண்டியதாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, திருவாரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 7 பேரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். திருவாரூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் அவர் களுக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் சந்திரசேகரன் உத்தரவிட்டார். 7 பேரும் கடந்த 5ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, திருத்துறைப்பூண்டி பஸ் நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் அதிமுக பிரமுகர் ரமேஷ், தனது கடையை பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 7 பேர் அடித்து நொறுக்கியதாக போலீசில் புகார் செய்தார். ஜாமீனில் வெளியே வந்த பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 7 பேரையும் இந்த புகாரின் அடிப்படையில், பாளையங்கோட்டை சிறை வாசலில் போலீசார் மீண்டும் கைது செய்தனர். அனைவரையும் திருத்துறைப்பூண்டி ஜுடிசியல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 17ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அசீம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, 7 பேரும் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பூண்டி கலைவாணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் முனியநாதனுக்கு எஸ்பி சேவியர் தன்ராஜ் பரிந்துரை செய்தார். இதன்படி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீசார் பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினர். அங்கு பூண்டி கலைவாணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அதற்கான உத்தரவு நகலை அவரிடம் வழங்கினர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் வி.கே.குருசாமி கைது :
மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மதுரை காமராஜ் சாலையில் வீடு, கடைகள் உள்ளன.
இவற்றை மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவரும், திமுக பிரமுகருமான வி.கே.குருசாமி, அவரது மருமகன் பாண்டி ஆகியோர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.கே.குருசாமி, அவரது மருமகன் பாண்டி இருவரையும் கைது செய்தனர். இதில் வி.கே. குருசாமி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுரை நகரில் ஏற்கெனவே, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment