அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டாக்டர்களின் பரிந்துரையின்படி, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இதையறிந்த திமுக தலைவர் கருணாநிதி, சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலுக்கு 05.08.2011 அன்று அனுப்பியுள்ள தந்தியில் கூறியிருப்பதாவது:
சோனியா உடல் நலமில்லை என்பதை அறிந்து நான் அதிர்ச்சியுற்றேன். அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் நல்ல உடல்ந லத்துடன் விரைவில் இந்தியா திரும்பி, நாட்டுக்கு தனது சிறந்த சேவையை தொடரவேண்டும்.
இவ்வாறு அந்த தந்தியில், கருணாநிதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment