கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 16, 2011

தேர்தல் அறிக்கை - வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம் : கலைஞர் ஆலோசனை


திமுக வேட்பாளர் பட்டியல் 17.03.2011 அன்று மாலை வெளியாகிறது. பட்டியலை இறுதி செய்யும் பணியில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் & 63, பாமக & 30, விடுதலைச் சிறுத்தைகள் & 10, கொமுக &7, முஸ்லிம் லீக் & 3, மூமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியல் 15.03.2011 அன்று வெளியிடப்பட்டது. திமுக மற்றும் கொமுக, மூமுக ஆகிய கட்சிகளின் தொகுதிகள் வெளியிடப்படவில்லை. திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி 16.03.2011 அன்று மாலை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருசில கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச வேண்டியுள்ளதால், வேட்பாளர்கள் பட்டியல் 17.03.2011 அன்று மாலை வெளியிடப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதற்கிடையே, திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்த சுமார் 15 ஆயிரம் பேரிடம் முதல்வர் கருணாநிதி தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தினர். நேர்காணல் கடந்த 13&ம் தேதி முடிந்தது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்த நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் முதல்வர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பட்டியலை இறுதி செய்வதற்காக முதல்வர் கருணாநிதி 16.03.2011 அன்று காலை 7 மணிக்கு மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.


கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடம் ஒதுக்கி கொடுத்துள்ளதால், கட்டாய வெற்றியை எதிர்நோக்கிக் காத்துள்ள திமுக, வெற்றி வாய்ப்புள்ள, செல்வழிக்கும் திறன் உள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

வேட்பாளர் பட்டியலுடன் திமுக தேர்தல் அறிக்கையும் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையை இறுதி செய்யும் பணியிலும் கருணாநிதி தீவிரம் காட்டி வருகிறார். கடந்த தேர்தலின்போது திமுகவின் அறிக்கைதான் கதாநாயகன் என்று எல்லோராலும் வரவேற்கப்பட்டது. இந்த முறையும் திமுக தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை இறுதி செய்துவிட்டு, 16.03.2011 அன்று மாலையே முதல்வர் சென்னை திரும்பினார் . திமுக, கொமுக மற்றும் மூமுக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் 16.03.2011 அன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17.03.2011 அன்று மாலை திமுக வேட்பாளர்களை முதல்வர் அறிவிக்கிறார்.

No comments:

Post a Comment