கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 17, 2011

நகராட்சித் துறையில் சாதனை: கலைஞர் பட்டியல்


நகராட்சி நிர்வாகத் துறையில் 5 ஆண்டுகளின் சாதனைகளை முதல் அமைச்சர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.


இதுதொடர்பாக முதல் அமைச்சர் கருணாநிதி கடிதம் வடிவில் 16.03.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;


திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 4 மேயர், 34 நகராட்சித் தலைவர்கள் உட்பட 1621 பேர் மகளிர் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்றுள்ளனர்.


1.1.2008 முதல் திருப்பூர் மற்றும் ஈரோடு நகராட்சிகளும், 1.8.2008 முதல் வேலூர், தூத்துக்குடி நகராட்சிகளும் புதிய மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இந்த நான்கு மாநகராட்சிகளிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா ரூ.5 கோடி மானியமாக வழங்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் ரூ.14 கோடியே 44 லட்சத்திலும், தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.16 கோடியே 49 லட்சத்திலும் உள்கட்டமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.


மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டம் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாநகரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் ரூ.623 கோடியே 91 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் வைகைக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் அமைத்தல், பாதாளச் சாக்கடைத் திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டுதல் ஆகிய 5 பணிகளில் இரண்டாம் வைகைக் குடிநீர் அபிவிருத்தித் திட்டப்பணி முடிவடைந்துள்ளது. இதர நான்கு திட்டங்களும் முன்னேற்றத்தில் உள்ளன.


மதுரை மாநகருக்கு அருகிலுள்ள நகராட்சிகளுக்கு ரூ.146 கோடியே 62 லட்சத்தில் அனுமதிக்கப்பட்டதில் திருப்பரங்குன்றம் குடிநீர்த் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. திருமங்கலம், அவனியாபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. கோயம்புத்தூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, இரண்டாவது பில்லூர் குடிநீர் திட்டம், பதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் அமைத்தல் ஆகிய 4 திட்டங்கள் ரூ.767 கோடியே 38 லட்சத்தில் அனுமதியளிக்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன.


சென்னைக்கு அருகிலுள்ள நகர்ப்புரத் தொகுப்புப் பகுதி சென்னைக்கு அருகிலுள்ள நகராட்சிகளுக்கு 13 திட்டங்கள் ரூ.1180.26 கோடிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. தாம்பரம், ஆவடி, மதுரவாயல், உள்ளகரம் புழுதிவாக்கம், திருவொற்றிழூர், ஆலந்தூர், அம்பத்தூர் ஆகிய 7 குடிநீர்த் திட்டப் பணிகள் ரூ.600 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், உள்ளகரம் புழுதிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல் மற்றும் தாம்பரம் ஆகிய 5 பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ரூ.535 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டிலும், பல்லவபுரத்தில் ஒரு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ரூ.44.21 கோடியிலும் அனுமதிக்கப்பட்டு, தாம்பரம் நகராட்சி குடிநீர்த் திட்டப்பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 12 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.


சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புர உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் நகர்ப்புர உள்கட்டமைப்பு மற்றும் ஆளுமைத் திட்டத்தில் சேர்க்கப்படாத அனைத்து நகரங்களிலும் குடிநீர் வழங்கல், மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை, சாலைகளை மேம்படுத்துதல், பொதுமக்கள் தனியார் பங்கேற்புத் திட்டத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்துமிடங்கள், புராதனப் பகுதிகளின் மேம்பாடு, நீர் நிலைகளைப் பேணுதல் போன்ற நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் 497 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 475 பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.


16 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் 467 சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ.69.413 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, 453 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், மணப்பாறையில் 2 பாலங்கள் ரூ.2 கோடியே 20 லட்சத்திலும், ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ரூ.2 கோடியே 50 லட்சத்திலும் நிறைவேற்றப்பட்டு, கரூர் நகராட்சியில் ரெட்டை வாய்க்கால் புனரமைக்கும் பணி ரூ.3 கோடியே 50 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு, முன்னேற்றத்தில் உள்ளது.


நகராட்சி நிர்வாக இயக்குநரகக் கட்டுப்பாட்டில் உள்ள 6 உள்ளாட்சி அமைப்புகளான குமாரபாளையம், தர்மபுரி, திருப்பத்துநுர், சீர்காழி, நாகப்பட்டினம், கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளில் குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.


இறைச்சிக்கூடங்களை நவீனப்படுத்த ரூ.26 கோடியே 20 லட்சத்தில் 120 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், 11 நகராட்சிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. 7 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் இடமின்மை மற்றும் பிற காரணங்களால் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. எஞ்சிய நகராட்சிகளில் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.


2007 2008 ல் 42 நகராட்சிகளில் 45 தாய் சேய் நல விடுதிகள் கட்ட ரூ.2.53 கோடி மானியமாக அனுமதிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. 2008 2009 ல் 19 நகராட்சிகளில் 20 தாய் சேய் நல விடுதிகளை மேம்படுத்த ரூ.2.00 கோடி அனுமதிக்கப்பட்டு, திண்டுக்கல் நகராட்சியைத் தவிர மற்ற அனைத்து நகராட்சிகளிலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.


கிருஷ்ணகிரி, ராஜபாளையம், உள்ளகரம் புழுதிவாக்கம், நெல்லிக்குப்பம், கொடைக்கானல், அனகாபுத்தூர், பூவிருந்தவல்லி (பகுதி 1), கோவில்பட்டி, பொள்ளாச்சி, பழனி, நாகர்கோவில் (வடசேரி), திருவண்ணாமலை, வெள்ளக்கோவில், சத்தியமங்கலம், ஓசூர், தேவக்கோட்டை, வந்தவாசி, ஈரோடு, கோயம்புத்தூர் மாநகராட்சி (மேட்டுப்பாளையம் சாலை) ஆகிய நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.53.67 கோடியில் நவீன பேருந்து நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மறைமலைநகர், குழித்துறை, பூவிருந்தவல்லி (பகுதி 2), தாம்பரம், மணலி, வாணியம்பாடி ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ரூ.15 கோடியில் நடக்கின்றன.


சாத்தூர், திண்டிவனம், திண்டுக்கல், ஆரணி, நாகர்கோவில், தேனி, திருவாரூர், சிவகங்கை போன்ற நகராட்சிகளில் ரூ.29.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளும், மதுராந்தகம், செங்கற்பட்டு, குமாரபாளையம், ராசிபுரம், மேட்டூர், போடிநாயக்கனூர், காரைக்குடி, ராமநாதபுரம், பத்மநாபபுரம், அருப்புக்கோட்டை, திருப்பூர் ஆகிய நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.6.97 கோடியில் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.


2010 11 ம் ஆண்டு 22 பேரூராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் பழுதடைந்த ஓடுதளங்கள் ரூ.350 லட்சத்தில் சிமெண்ட் கான்கிரீட் தளங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர், ஆலங்காயம், சேத்துப்பட்டு, சங்ககிரி, காங்கேயம், பெருந்துறை வடலூர், செஞ்சி, திருவையாறு, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில், உடையார்பாளையம், ஒட்டன்சத்திரம், நான்குநேரி, திசையன்விளை, திருச்செந்தூர், திற்பரப்பு வாழப்பாடி போன்ற 49 பேரூராட்சிகளில் ரூ.19 கோடியே 94 லட்சத்தில் நவீன பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


2006 முதல் 2010 வரை ரூ.241.56 கோடியில் பல்வேறு திட்டங்களின் கீழ் 1723.255 கிலோ மீட்டர் சாலைகள் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டன. 2010 11 ம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் ரூ.60.00 கோடியில் மண் சாலைகளைத் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்ற உத்தேசிக்கப்பட்ட பணிகளில், இதுவரை ரூ.6 கோடியில் 60 கிலோ மீட்டர் நீள மண் சாலைகள் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்றும் பணிகளின் செயலாக்கம் பல்வேறு நிலைகளில் உள்ளன. 2006 முதல் 2009 வரை நான்கு ஆண்டுகளில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிப்படைந்த சாலைகள் ரூ.68.62 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளன.


நகர்ப்புர சுய வேலை வாய்ப்புத்திட்டத்தின்கீழ் ரூ.21.81 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு, 18,615 பேர் சிறு தொழில்கள் தொடங்கிப் பயன் அடைந்துள்ளனர். ரூ.29.60 கோடியில் 61,403 பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புரப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.83 கோடி செலவில் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள 4,282 பேர் பயன் அடைந்துள்ளனர். சிக்கன மற்றும் நாணய சங்கத்தின் கீழ் ரூ.20.83 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு 2 லட்சத்து 44 ஆயிரத்து 833 பேர் பயனடைந்துள்ளனர். நகர்ப்புர கூலி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.37 கோடி செலவில் 11,004 பேர் பயனடைந்துள்ளனர்.


2008 09 ம் ஆண்டில் 10 வது மற்றும் 12 வது வகுப்பில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்ற 26 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் பரிசும், தகுதிச் சான்றிதழும் வழங்கப்பட்டது. 12 வது வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்து பரிசு பெற்ற மாணவ மாணவியரில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய 65 மாணவர்கள், கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் பயன் பெற்று மேற்படிப்பு படிக்க வாய்ப்புப் பெற்றுள்ளனர்.


இதன் மூலம் நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். சென்ற கல்வியாண்டில், திருநெல்வேலி மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 495/500 மதிப்பெண்கள் குவித்து மாநில அளவில் முதலிடம் பெற்று நகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துள்ளமைக்குச் சான்றாகத் திகழ்ந்தார்.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையொட்டி, கோவையில் அரசு நிதி உட்பட பல்வேறு துறைகள் மூலமாக மொத்தம் ரூ.65 கோடியே 96 லட்சத்து 59 ஆயிரம் செலவில் பல உட்கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டன. மாநாட்டு நிறைவு விழாவில் அறிவிக்கப்பட்டபடி, 165 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழிப் பூங்காவும், காந்திபுரத்தில் 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேலான மேம்பாலமும் அமைக்கப்பட அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.


காஞ்சீபுரத்தில் நடைபெற்ற அண்ணா நுநுற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி காஞ்சீபுரம் நகராட்சிக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்து ரூ.6 கோடியே 34 லட்சத்தில் 11 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment