கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 17, 2011

ஸ்டாலின் - இளைஞர் காங். யுவராஜா சந்திப்பு


திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் என, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.

துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தேர்தல் குழுவை, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சந்தித்தார். அப்போது 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற இளைஞர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பாடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜா, நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெறும். கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்பார். அதற்காக நாங்கள் உழைப்போம். திமுக கூட்டணி வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் என அனைவரும் வெற்றி பெற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாடுபடுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment