கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 15, 2011

63 தொகுதி பட்டியல் கருணாநிதி வெளியிட்டார் : உடன்பாட்டில் தங்கபாலு கையெழுத்து



திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் விவரத்தை முதல்வர் கருணாநிதி 15.03.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். உடன்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கையெழுத்திட்டார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக 30, விடுதலை சிறுத்தைகள் 10, கொ.மு.க 7, முஸ்லிம் லீக் 2, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூ.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூ.மு.க. ஆகிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை பங்கீடு முடிந்த பிறகு, தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணி கட்சிகளின் தலை மையில் அமைக்கப்பட்ட குழுக்கள், ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவுடன் தனித்தனியே பேச்சு நடத்தின. அதன் அடிப்படையில், போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக கூட்டணி தலைவருமான கருணாநிதி 15.03.2011 அன்று வெளியிட்டார்.
இதற்கான உடன்பாட்டில் தங்கபாலு கையெழுத்திட்டார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதி பட்டியல் :
1. ராயபுரம்
2. அண்ணா நகர்
3. தியாகராயநகர்
4. மயிலாப்பூர்
5. திரு.வி.க.நகர் (தனி)
6. பூவிருந்தவல்லி (தனி)
7. திருத்தணி
8. ஆவடி
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11. மதுராந்தகம் (தனி)
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஒசூர்
17. செங்கம் (தனி)
18. கலசப்பாக்கம்
19. செய்யார்
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி)(சேலம்)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு மேற்கு
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. உதகமண்டலம்
28. அவினாசி (தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. சிங்காநல்லூர்
32. வால்பாறை (தனி)
33. நிலக்கோட்டை (தனி)
34. வேடசந்தூர்
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. விருத்தாசலம்
40. மயிலாடுதுறை
41. திருத்துறைப்பூண்டி (தனி)
42. பாபநாசம்
43. பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறந்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி (தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திகுளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57. வாசுதேவநல்லூர் (தனி)
58. கடையநல்லூர்
59. நாங்குநேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்

திமுக கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் பாடுபடும் - தொகுதி பட்டியல் வெளியிட்டு தங்கபாலு பேட்டி :

பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதி பட்டியல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முதல்வர் கருணாநிதி ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டு இன்று அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு நாளையும், நாளை மறுநாளும் சத்தியமூர்த்தி பவனில் பெறப்படுகிறது.
போட்டியிட விரும்புபவர்கள், நேரடியாக வந்து பொது தொகுதிக்கு
`5
ஆயிரம், தனித் தொகுதிக்கு
`2,500,
பெண்கள்
`2,500
செலுத்தி விருப்ப மனு தாக்கல் செய்யலாம். இந்த மனுக்களை பரிசீலனை செய்ய தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள், அதை பரிசீலனை செய்த பின் மேலிடத்துக்கு எடுத்துச் செல்வார்கள். மேலிட ஒப்புதலோடு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தொகுதி பங்கீடு சம்பந்தமாக நியமிக்கப்பட்ட ஐவர் குழு, தமிழகத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை கேட்டு பெற்றுள்ளது. தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த இரு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அடுத்த தேர்தலில் முன்னுரிமை அளிப்போம்.
திமுக கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் கடுமையாக பாடுபடும். அவர்களும் எங்கள் வெற்றிக்காக பாடுபடுவார்கள் என்று கூறினார்.

No comments:

Post a Comment