கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 16, 2011

திமுக கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு


சரத்பவார் தலைமையில் இயங்கி வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் ராஜேசுவரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க.வும், தேசியவாத காங்கிரசும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

அந்த அடிப்படையில் இரு கட்சிகளும் நல்ல தோழமை உணர்வுடன் உள்ளன. எனவே இந்த சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தி.மு.கழகத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.

தி.மு.க.வின் வெற்றிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பிரசாரம் செய்து பணியாற்றுவார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு 16.03.2011 அன்று அதிகாரப்பூர்வமாக தி.மு.க.விடம் தெரிவிக்கப்படும்.

முதலமைச்சர் கருணாநிதியை தமிழக தேசியவாத காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராகிய நானும் (டாக்டர் ராஜேசுவரன்) மற்றும் மூத்த தலைவர்களும் சந்தித்து பேசுவோம்’’ என்று கூறினார்.


திமுக கூட்டணிக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை ஆதரவு :

திமுக கூட்டணிக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாநில பொது செயலாளர் வீரவன்னியராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உதவியவர் முதல்வர் கருணாநிதி. அதற்காக இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை முடிவு செய்துள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment