கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

சுயமாக சிந்திக்காமல் வந்தது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை - குமரியில் பாக்யராஜ் பிரசாரம்


குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி), மகேஷ் (நாகர்கோவில்), புஷ்பலீலா ஆல்பன் (பத்மநாபபுரம்) ஆகியோரை ஆதரித்து 25.03.2011 அன்று இயக்குனர் பாக்யராஜ் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை படித்தவர்கள் நிறைந்த மாவட்டங்களாக உள்ளன. ஆகவே தி.மு.க. சார்பில் முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், எதிர் அணியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும் நீங்கள் படித்து இருப்பீர்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையை கலைஞர் வெளியிட்டதும், எதிர் அணியினர் என்ன தேர்தல் அறிக்கை கொடுப்பது என்று கூட யோசிக்கவில்லை.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சில மாற்றங்களை செய்து தேர்தல் அறிக்கையாக அறிவித்து உள்ளனர். ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார். உடனே அந்த அம்மா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.

கலைஞர் கிரைண்டர், மிக்சி கொடுப்போம் என்றதும், கிரைண்டர், மிக்சியுடன், மின்விசிறி கொடுப்போம் என்றார். திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவரே இந்த அம்மையார்தான். திருமண நிதி உதவியாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார்.

அவர் திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தருவோம் என்று கூறி உள்ளார். கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிறிது மாற்றி ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.

வைகோ 5 ஆண்டுகளாக உடன் இருந்தவர், அவரையே கழற்றி விட்டார். அதனால் வைகோ தேர்தலில் நிற்க வில்லை என்று போய் விட்டார். அந்த கூட்டணியில் சேர்ந்துள்ள விஜயகாந்துக்கும் அதே நிலை தான் வரும். அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா அதை மட்டுமே கலைஞர் அறிவித்துள்ளார். 2006ம் ஆண்டு ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு கொடுப்போம், டி.வி. வழங்குவோம் என்று அறிவித்தார். இது எப்படி செய்ய முடியும் என்று கேட்டனர். ஆனால் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.1 க்கு வழங்கப்படுகிறது.

அறிக்கைய பார்த்தா, ஒரு கதை தான் நினைவுக்கு வருது.
ஆற்றில் ஒருவன் மீன் பிடிக்க தூண்டில் போட்டி இருந்தான். அப்போது அந்த வழியா, வந்த வழிப்போக்கன், தூண்டில் ஆடுனது பார்த்து, மீன் மாட்டிருக்குனு சொன்னான். உடனே மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தவன், நீங்களே வந்து தூண்டில தூக்கி போடுங்கனு சொன்னான்.
அத எடுத்து கூடையில போடுங்கனு சொன்னான். கடைசியில போகும் போது, ஒரு கல்யாணம் பண்ணினா, உனக்கு பிள்ளை பிறக்கும். மகன் வந்து உதவியாக இருப்பான்லனு வழிப்போக்கன் சொன்னான். கர்ப்பமாக இருக்கிற பொண்ணா பாருங்க. சீக்கிரம் குழந்தை பிறக்கும்னு சோம்பேறி சொன்னான். இந்த கதை மாதிரி தான். எதிரணியின் தேர்தல் அறிக்கை இருக்கு. தலைவர் கலைஞர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இத பார்த்த அந்த அம்மா.. எதையும் சுயமா சிந்திக்காம திமுக தேர்தல் அறிக்கையில இருந்ததை கொஞ்சம் மாத்தி அறிவிச்சி இருக்கிறாங்க என்றார்.
விஜயகாந்த் மாட்டி முழிக்கிறாரு
ஒரு நாட்டு ராஜா... நான் சாப்பிடாத பழத்தை யாரு கொண்டு வருவாங்களோ அவங்களுக்கு அதிக பரிசுனு அறிவிச்சார். நான் சாப்பிட்ட பழமா... இருந்தா கொண்டு வந்தவங்க வாயிலேயே திணிச்சி அனுப்புவேனு சொன்னாரு. ஒருத்தன் அன்னாசி பழம் வச்சிருந்தான். அதுவும் நான் சாப்பிட பழம் தான் சொல்லி, அவன் வாயிலேயே திணிச்சி அனுப்புனாங்க. ரத்தம் வடிய சிரிச்சி கிட்டே நின்னான். மன்னன் அவனிடம் ஏன் சிரிக்கிறேனு கேட்டார். அதற்கு அவன், பின்னாடி ஒருத்தன் பலா பழத்தோட நிக்கானு சொன்னான். அந்த கதை மாதிரி வைகோ இப்போ.. விஜயகாந்த பார்த்து சிரிக்கிற நிலைமை வந்துட்டு. வைகோ நிம்மதி ஆயிட்டார். விஜயகாந்த் முழிச்சிட்டு இருக்காரு என்றார். தோழமை தலைவர்களை அவமதித்தவர் ஜெயலலிதா: பாக்கியராஜ்

கூட்டணி கட்சித் தலைவர்களை அவமதித்தவர் ஜெயலலிதா என, திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் கூறினார்.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

அதிமுக கூட்டணியில் ஒருமித்த உணர்வு இல்லாததால் அது ஒரு பொருந்தாத கூட்டணி. தொகுதி பங்கீட்டின் போது கூட்டணி கட்சிகளை அவமதித்தவர் ஜெயலலிதா. மதிமுகவுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கி கூட்டணியை விட்டு வெளியேற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவால் நொந்துபோன் வைகோ ஓரமாக உட்கார்ந்துள்ளார். கூட்டணி கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து வழி நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டை எப்படி வழிநடத்த முடியும் என்றார்.


No comments:

Post a Comment