கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 28, 2011

ஜெயலலிதாவுக்கு நன்மை செய்யும் மனசு வராது: குஷ்பு


தமிழக மக்களுக்கு ஜெயலலிதா எதுவுமே செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு செய்ய மனசு வராது என, நடிகை குஷ்பு பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, கொசவப்பட்டி ஆகிய இடங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் நடிகை குஷ்பு பேசினார். அவர் கூறியதாவது:

தி.மு.க. தொண்டராக இங்கே வந்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் ஊரின் மகளாக வந்திருக்கிறேன். தமிழகத்தில் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது.


இந்த மின்தடைக்கு தி.மு.க.வோ, கலைஞரோ காரணம் கிடையாது. மின்தடை ஏற்படுவதற்கு ஜெயலலிதாவும், அந்த துறை அமைச்சராக இருந்த இந்த தொகுதி எம்.எல்.ஏ.வான விசுவநாதனும் தான் காரணம். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை மின் உற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ளவில்லை.

தமிழக மக்களுக்கு ஜெயலலிதா எதுவுமே செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு செய்ய மனசு வராது. மக்களுக்கு நன்மை செய்யும் மனசு தலைவருக்கு தான் உண்டு. மக்களை பற்றியே அவர் சிந்தித்து கொண்டிருக்கிறார். தனது 12 வயது முதல் 87 வயது வரை 75 ஆண்டு காலம் அவர் அயராது உழைத்து வருகிறார்.


மழையிலும், வெயிலிலும் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கலைஞர் வீடு வழங்கும் திட்டம் தொடங்கினார். மீண்டும் வெற்றி பெற்றால், இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அவர் நிறைவேற்றி இருக்கிறார். கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தொகை ஆகியவற்றை உயர்த்தியும், கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை வழங்கவும் இருக்கிறார். சொன்னதை மட்டும் செய்யாமல், சொல்லாததையும் அவர் செய்திருக்கிறார். குளிர்சாதன பெட்டி, வாசிங் மிஷனும் பெண்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

வருகிற தேர்தலில் ஜெயலலிதா ஜெயிக்கப்போவது இல்லை. அவர் வெற்றி பெற்றால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்துக்கு 4 ஆடுகள், 2 மாடுகள் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் 30 லட்சம் குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர். இவர்களுக்கு கொடுப்பதற்கு சுமார் 11/4 கோடி ஆடுகளும், 60 லட்சம் மாடுகளும் தேவையாக உள்ளது.


இந்தியா முழுவதிலும் இந்த எண்ணிக்கையில் ஆடு, மாடுகள் இல்லை. மேஜிக் மூலமாக தான் ஆடு, மாடுகளை அவர் கொண்டு வருவார். தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பியாக, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை உள்ளது. இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.


தமிழக மக்கள் முன்னேற வேண்டும், தமிழகத்தில் அடுத்த தலைமுறையினர் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதற்காகவும் கிராமங்களில் பள்ளிகளையும், மாவட்டந்தோறும் கல்லூரிகளையும் கலைஞர் திறந்து வருகிறார்.

ஆனால் மக்களை படிக்க விடக்கூடாது, சுயமாக சிந்திக்கக்கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளை தருவதாக ஜெயலலிதா கூறுகிறார். திட்டங்களை சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். ஆனால் திட்டி, திட்டி அந்த அம்மா ஓட்டு கேட்கிறார். மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை.


6வது முறையாக தலைவர் முதல் அமைச்சரானால், இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆசியாவிலேயே மிகப்பெரிய சாதனையாக அமையும். அந்த பெருமை நமக்கு கிடைக்க வேண்டும்.

இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

No comments:

Post a Comment