கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 14, 2011

திமுகவுக்கு ஆதரவு: கோவில் பூசாரிகள் சங்கம்


தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு, தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு கூறினார்.

தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்க 33வது மாவட்ட மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது.

திருக்கோவில் மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் பயன்படுத்தப்படும் பசலி என்ற சொல்லுக்கு பதிலாக நிலவரி ஆண்டு, நில வருவாய் ஆண்டு என்று மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும், வறுமை நிலையில் உள்ள பூசாரிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை, குடியுரிமை பட்டா, கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகள் ஆகியவை வழங்க வேண்டும், பூசாரி நலவாரியத்தில் திருமண நிதியுதவியை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது, தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்' போன்ற தீர்மானங்களும் நிறைவேறின.


மாநாட்டிற்கு பிறகு சங்க மாநிலத் தலைவர் பி.வாசு கூறியதாவது:


கோவில் பூசாரிகளுக்கு நலவாரியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல நலத்திட்டங்களை அள்ளி வழங்கிய தமிழக முதல் அமைச்சருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பூசாரிகள் குடும்பத்தோடு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை 6 வது முறையாக முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்து தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சியை கொண்டு வர தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் பாடுபடும் என்றார்.

திமுகவுக்கு ஆதரவு - அருந்ததியர் மக்கள் பேரவை முடிவு :

தமிழ்நாடு அருந்ததியர் மக்கள் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் 13.03.2011 அன்று நடந்தது. பொதுச் செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் செ.குணசேகரன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படும்.
6வது முறையாக கருணாநிதியை முதல்வராக்கியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவோம். அருந்ததியினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு தந்த முதல்வர் கருணாநிதி, துணை சபாநாயகர் வி.பி.துரைசாமிக்கு நன்றி தெரிவிப்பதுடன், திமுகவின் 5 ஆண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment